உள்ளடக்கத்துக்குச் செல்

ரேணுகா சகானே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேணுகா சகானே
2010இல் ரேணுகா
பிறப்பு7 அக்டோபர் 1966 (1966-10-07) (அகவை 58)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்செயின்ட் சேவியர் கல்லூரி, மும்பை (இளங்கலை)
மும்பை பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1988–2022
வாழ்க்கைத்
துணை
  • விஜய் கெங்கரே (விவாகரத்து
  • அசுதோஷ் ராணா (2001)
பிள்ளைகள்2

ரேணுகா சகானே (Renuka Shahane) (பிறப்பு அக்டோபர் 7,1966)[1] ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் இந்தி மற்றும் மராத்தித் திரைப்படங்கள் மற்றும் பல தொலைக்காட்சித் தயாரிப்புகளில் பணியாற்றியதற்காக பரவலாக அறியப்படுகிறார். ரேணுகா தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சுரபி (1993–2001) என்ற நிகழ்ச்சியின் இணைத் தொகுப்பாளராக நன்கு அறியப்பட்டவர்.[2] மராத்தி பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளையும் பரிந்துரைகளையும் பெற்றுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

ரேணுகா சகானே மும்பையில் ஒரு மராத்திக் குடும்பத்தில் பிறந்தார்.[3][4] இவரது தந்தை, லெப்டினன்ட் விஜய் குமார் சகானே, இந்தியக் கடற்படையில் அதிகாரியாக இருந்தார்.[4] இவரது தாயார், சாந்தா கோகலே, ஒரு நாடக ஆளுமையும் மற்றும் திரைப்பட விமர்சகரும் ஆவார். முக்கியமாக மராத்தி நாடகங்களில் பணியாற்றுகிறார். ரேணுகாவின் இளம் வயதிலேயே இவரது தாயார் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு திரைப்படத் தயாரிப்பாளரான அருண் கோப்கர் என்பவரை மணந்தார்.[5] இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

ரேணுகா, மும்பையின் செயின்ட் சேவியர் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டமும், மும்பை பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[6]

சொந்த வாழ்க்கை

[தொகு]

ரேணுகா இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் திருமணம் மராத்தி நாடக எழுத்தாளரும் இயக்குனருமான விஜய் கெங்கரே என்பவருடன் நடந்தது. ஆனால் திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. விரைவில் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.[7] பின்னர் பாலிவுட் நடிகரான அசுதோஷ் ராணாவை (அசல் பெயர் அசுதோஷ் நீக்ரா) மணந்தார்.[8] இவர்களுக்கு சௌர்யமான் நீக்ரா மற்றும் சத்யேந்திர நீக்ரா என இரு மகன்கள் உள்ளனர்.[9][10]

தொழில்

[தொகு]

ரேணுகா சகானே, ஹச் சன்பைச்சா பாவ் என்ற மராத்தித் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் மிகவும் பிரபலமான இந்தி மொழி தொலைக்காட்சி நிகழ்ச்சியான சுரபியின் இரண்டு தொகுப்பாளர்களில் ஒருவராக பணியாற்றினார். இந்தியாவில் தூர்தர்ஷன் மட்டுமே தொலைக்காட்சி நிறுவனமாக இருந்த காலக்கட்டத்தில் இவரது புன்னகை மூலம் பிரபலமடைந்தார். மேலும் ரேணுகா நிச்சயமாக 1980 களில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஆளுமைகளில் ஒருவராக இருந்தார்.[11][12]

1994ல் சுரபியை தொகுத்து வழங்கும் போது ரேணுகாவுக்கு ஹம் ஆப்கே ஹைன் கௌன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.[13] படத்தில் இவரது பாத்திரம் மிகவும் பாராட்டப்பட்டது.[14] பின்னர், "அபோலி" என்ற மராத்தித் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக பரவலான பாராட்டைப் பெற்றதோடல்லாமால் 1995 ஆம் ஆண்டின் மராத்தி பிலிம்பேர் விருதுகளில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார்.

ரேணுகா சகானே பல மராத்திப் படங்களில் நடித்துள்ளார். ரீட்டா என்ற மராத்தித் திரைப்படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். இவரது தாயார் சாந்தா கோகலேயின் ரீட்டா வெலிங்கர் என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.[15]

பின்னர் சர்க்கஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். பின்னர் இம்திஹான் என்ற தொடரில் இவரது நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. 2021 ஆம் ஆண்டு வெளியான திரிபங்கா என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Renuka Shahane [renukash] (26 March 2014). "@nirmalpathak @Wikipedia My birthday is on the 7th of October :-)" (Tweet).
  2. "Blast from the past Renuka Sahane and Siddharth Kak in Surabhi7". தி இந்து. 25 February 2008 இம் மூலத்தில் இருந்து 7 March 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110307091501/http://www.hindu.com/mp/2008/02/25/stories/2008022550010100.htm. 
  3. "Renuka Shahane - Marathi actresses without make-up". https://timesofindia.indiatimes.com/entertainment/marathi/movies/photofeatures/marathi-actresses-without-make-up/renuka-shahane/photostory/63973844.cms. 
  4. 4.0 4.1 "Is Mumbai a mini Pakistan? I am sorry, but it is not even close". 13 September 2020. https://www.telegraphindia.com/entertainment/renuka-shahane-who-took-on-kangana-ranaut-for-likening-bombay-to-pok-chats-on-politics-and-where-she-fits-in/cid/1791771. 
  5. "Renuka Shahane says after her parents' divorce, kids were asked not to play with her as she came from a 'broken family'". Hindustan Times (in ஆங்கிலம்). 21 January 2021.
  6. "Renuka Shahane feels she has done good work, says 'I don't have regrets about my career'". Hindustan Times (in ஆங்கிலம்). 21 August 2019.
  7. ""Talk To Your Boys About Periods, It's Important" Says Actor Renuka Shahane". 10 February 2017.
  8. "Renuka Shahane and Ashutosh Rana 'played phone a friend for 3 months' before confessing their love: Their old school love story". Hindustan Times (in ஆங்கிலம்). 9 October 2020.
  9. "Ashutosh Rana, Renuka Shahane celebrate 19 years of marriage with wedding pic, notes of love: 'I am forever yours'". Hindustan Times (in ஆங்கிலம்). 25 May 2020.
  10. "Thanks to Ashutosh Rana's A-certificate filmography, his kids have seen only one of his films". Hindustan Times (in ஆங்கிலம்). 11 July 2018.
  11. "Renuka Shahane to make a comeback on TV; a look at her 5 best TV shows". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 March 2021.
  12. "Renuka Shahane on 'Surabhi': 'The osmosis that defines India can never be stopped'". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). 2 January 2018. பார்க்கப்பட்ட நாள் 10 March 2021.
  13. Footman, Tim; Young, Mark C. (May 2001). Guinness World Records 2001. Bantam Books. p. 147. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780553583755. Highest-grossing Indian movie Hum Aapke Hain Koun..! (India, 1994) took over $63.8 million in its first year.
  14. "Will be seen in more films now, says Hum Aapke Hain Koun actor Renuka Shahane". indiatvnews.com (in ஆங்கிலம்). 8 February 2018.
  15. ""Women Are Strong. Period!" Says Renuka Shahane". 19 April 2017.
  16. "Tribhanga Movie Review: Kajol, Renuka Shahne bring forth a tear-jerking and near-perfect tale of flawed-yet-real women". Bollywood Bubble (in ஆங்கிலம்). 15 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 January 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Renuka Shahane
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_சகானே&oldid=4114822" இலிருந்து மீள்விக்கப்பட்டது