ரேகா ராஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரேகா ராஜு
Rekha Raju DS 2.jpg
மோகினியாட்ட நிகழ்ச்சியில் ரேகா ராஜு
பிறப்புரேகா ராஜு
10 ஏப்ரல்
கல்பாத்தி, பாலக்காடு, கேரளம்
இருப்பிடம்பெங்களூர்
தேசியம் இந்தியா இந்தியன்
குடியுரிமைஇந்தியன்
கல்விநுண்கலையில் முனைவர்
படித்த கல்வி நிறுவனங்கள்பெங்களூர்ப் பல்கலைக்கழகம்
பணிநடனம், நடன ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2003 முதல் தற்போது வரை
அறியப்படுவதுமோகினியாட்டம் & பரதநாட்டியம்
பெற்றோர்திரு. எம். ஆர். ராஜு & திருமதி. ஜெயலட்சுமி ராகவன்
வலைத்தளம்
rekharaju.com

ரேகா ராஜு (Rekha Raju) இவர் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த ஓர் இந்திய பாரம்பரிய நடன கலைஞரும் ஆசிரியரும் ஆவார். இவர் பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டம் ஆகிய நடன வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். [1] [2] [3] [4] [5] [6] [7] [8]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ரேகா தென்னிந்திய மாநிலமான கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில், நாடகக் கலைஞரான திரு.எம். ஆர். ராஜு மற்றும் திருமதி. ஜெயலட்சுமி ராகவன் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். பின்னர், இவர் பெங்களூரில் வளர்ந்தார். இவர் தனது நான்கு வயதில் பாரம்பரிய நடனத்தைக் கற்கத் தொடங்கினார். புகழ்பெற்ற குரு திருமதி கலாமண்டலம் உஷா தாதர், குரு சிறீ ராஜு தாதர், குரு திருமதி கோபிகா வர்மா மற்றும் குரு பேராசிரியர் ஜனார்த்தனன் உள்ளிட்ட பல்வேறு குருக்களின் கீழ் இவர் தீவிரமாக பயிற்சி பெற்றார். [9]

இவர் தனது கல்லூரிக் கல்வியில் வர்த்தகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதே நேரத்தில் மனித வளம் மற்றும் கணக்குகளில் நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். [10] ஜெர்மனியின், ஐடல்பெர்க் பல்கலைக்கழகத்தில் நுண்கலைகளில் பி.எச்.டி. முடித்தார். இவர் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் மற்றும் வித்வத்தில் (புலமை) தரவரிசை பெற்றவராவார். [11] [12]

தொழில்[தொகு]

2003 ஆம் ஆண்டில் பெங்களூரில் உள்ள ரவீந்திர கலாசேத்திரத்தில் மேடையில் அரங்கேற்றம் செய்தார். [13] [14] [15] இவர் நான்கு வயதிலிருந்தே இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு நிலைகளில் தனது நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறார். மேலும் கன்னட கலாச்சாரத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட யுவ சௌரபா உட்பட இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பின் நிகழ்ச்சி, உலக கலாச்சார நிறுவனம், தில்லி சர்வதேச விழா, பூனா நடன விழா, கஜுராஹோ நடன விழா, கோனார்க் நடன விழா, புராணா குய்லா, சென்னை பருவகால நடன விழா, சிதம்பரம் நடன விழா, பெல்காமில் விஸ்வ கன்னட சம்மேலன், ஆந்திர இசை மற்றும் நடன விழா போன்ற இந்தியாவில் பல மரியாதைக்குரிய நடன நிறுவனங்களுக்கு தனிப்பாடலாக நிகழ்த்தியுள்ளார். இவரது தனி மற்றும் குழு நடனத்திற்காக இவர் மிகவும் விமர்சனங்களைப் பெற்றார். [16] [17] [18] [19]

தற்போது ரேகா பெங்களூரு தமிழ் சங்கத்தில் உதவி நடன ஆசிரியராகவும், சர்வதேச மேலாண்மை மற்றும் இந்திய ஆய்வுகளுக்கான மையத்தில் நடன விருந்தினர் விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார். அங்கு வெளிநாட்டு மாணவர்கள் இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்த பயிற்சி பெறுகின்றனர். [20] [21] இவர் பெங்களூரு தூர்தர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட கலைஞர் மற்றும் கலாச்சார உறவுகளுக்கான இந்திய அமைப்பின் வரிசைக் கலைஞர் ஆவார். சிறுபான்மை பின்னணியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு பயிற்சியளிக்கும் நிருத்யா தமா என்ற நடன நிறுவனத்திற்கும் இவர் தலைமை தாங்குகிறார். மேலும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் தன்னார்வ குழுவான சுதந்திர அறக்கட்டளையுடன் தொடர்புடையவராக இருக்கிறார். [22] [23]

சாதனை[தொகு]

1000 நடனக் கலைஞர்கள் நிகழ்த்திய தஞ்சை நடன விழாவில் ரேகா ராஜு பங்கேற்று, லிம்கா சாதனைகள் புத்தகத்திலும் இடம் பெற்றார். [24] [25] [26] இந்திய கலையை மேம்படுத்துவதற்காக சிறந்த இளம் நடனக் கலைஞராக பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் கௌரவிக்கப்பட்டார். கலஹள்ளி கோயில் அறக்கட்டளையால் இவருக்கு சுவர்ணமுகி என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. [27] [28]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_ராஜு&oldid=2929869" இருந்து மீள்விக்கப்பட்டது