ரெபேக்கா லோலோசோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரெபேக்கா லோலோசோலி
Rebecca Lolosoli.jpg
பிறப்பு1962
பணிசுற்றுச்சூழல் ஆர்வலர்
விருதுகள்Global Leadership Awards

ரெபேக்கா லோலோசோலி கென்யாவின் சம்புரு பழங்குடியைச் சேர்ந்த, பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பெண். இவர் 1990ல் பெண்கள் மட்டுமே வாழும் உமோயா கிராமத்தை உருவாக்கி,[1] பெண்கள் சுயசார்புடன் வாழ்க்கை நடத்தப் பாதை அமைத்துக் கொடுத்துள்ளார்.[2]

வாழ்க்கை[தொகு]

ரெபேக்கா பாடசாலையில் கல்வி பயின்றவர். 18 வயதில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 5 குழந்தைகள். இவர் பிரித்தானிய இராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்காரத்தைக் காரணம் காட்டி இவரது கணவர் இவரை விற்க முடிவெடுத்தார். இனி ஒரு நிமிடம்கூட இங்கே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்த ரெபேக்கா பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றுதிரட்டிக் கொண்டு தனது கிராமத்தை விட்டே கிளம்பினார். ஒற்றுமை என்று பொருள்படும் 'உமோஜா' என்ற பெண்கள் அமைப்பை ஆரம்பித்தார். பொட்டல் நிலத்தில் தங்குவதற்கு ஓர் எளிமையான வீட்டைக் கட்டினார். பழங்குடி உணவுகளைச் சமைத்து விற்க ஆரம்பித்தார். எதிர்பார்த்த அளவுக்கு உணவு விற்பனை இருக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய நகைகள், கைவினைப் பொருட்கள் செய்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்றார். இந்தத் தொழில் நன்கு அமைந்தது. கூடவே பழங்குடி நடனம், பாட்டு என்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினார். கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிவந்த பெண்கள், கணவர்களால் கைவிடப்பட்ட பெண்கள், பெண் உறுப்புச் சிதைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண்கள், கணவனின் வன்முறைகளைத் தாங்க முடியாத பெண்கள், படிக்க அனுமதி கிடைக்காத பெண்கள், பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்கள் என்று தன்னை நாடிவந்த ஏராளமானவர்களை தன்னுடன் சேர்த்து அடைக்கலம் கொடுத்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rebecca Lolosoli Survivor of violence finds a new "unity"". 2016-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. http://www.umojawomen.net/Umoja.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெபேக்கா_லோலோசோலி&oldid=3404962" இருந்து மீள்விக்கப்பட்டது