சுற்றுச்சூழல் ஆர்வலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டொமினிக் வொயினெட், 2008

சுற்றுச்சூழல் ஆர்வலர் (Environmentalist) என்பர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்ட மற்றும்/அல்லது சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக வாதிடும் நபர் ஆவார். சுற்றுச்சூழல் ஆர்வலரைச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் குறிக்கோள்களின் ஆதரவாளராகக் கருதலாம். சுற்றுச்சூழல் இயக்கம் என்பது "சுற்றுச்சூழல் தீங்கு விளைவிக்கும் மனித நடவடிக்கைகளில் மாற்றங்கள் மூலம் இயற்கை சூழலின் தரத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் முயற்சிக்கும் ஒரு நெறிமுறை இயக்கம்".[1] ஒரு சுற்றுச்சூழல் வாதி இத்தகைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அல்லது சூழலியம் குறித்த நம்பிக்கை கொண்டவர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சில சமயங்களில் "பசுமையாளர்" மற்றும் "மரம்-தோழர்" போன்ற முறைசாரா சொற்களைப் பயன்படுத்திக் குறிப்பிடப்படுகிறார்கள்.[2]

தாக்கம்: சுற்றுச்சூழல் இயக்கம் இன்றைய அமெரிக்காவை 1960கள் மற்றும் 1970களில் இயக்கம் தொடங்கியதை விடச் சுற்றுச்சூழல் நட்பு ரீதியான இடமாக மாற்றியுள்ளது (கோல்ட்ஸ்டீன் 2002).

குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்[தொகு]

மே 2003 இல் சர் டேவிட் அட்டன்பரோ
பீட்டர் காரெட் 2004 ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்தார்
அல் கோர், 2007
ஹண்டர் லோவின்ஸ், 2007
பில் ராட்போர்ட், 2011
ஹக்கோப் சனசார்யன்- ஸோடோக்கில் தாது-செயலாக்க சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிரான செயற்பாட்டாளர்- 2011
கிரெட்டா துன்பெர்க், 2018
அடிலெய்டில் 2014 இல் கெவின் புசாகோட் (பழங்குடி ஆர்வலர்)

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காகப் பரப்புரை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள குறிப்பிடத்தக்கச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் சிலர்:

  • சாலுமரத திம்மக்கா
  • எட்வர்டு அமெய் (எழுத்தாளர், தத்துவவாதி, செயற்பாட்டாளர்)
  • அன்செல் ஆடம்சு (புகைப்பட கலைஞர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்)
  • பாயாராஜர்கள் அகவ்வண்ட்செரென் (மங்கோலிய சூழல் காப்பாளர்)
  • குவாசி கோலிஃஉசுமான் அகமது (சுற்றுச்சூழல் ஆர்வலர், பொருளியல் நிபுணர், வங்கதேசம்)
  • டேவிட் ஆட்டன்பரோ (ஒலிஒளி பரப்பாளர், இயற்கைவாதி)
  • ஜான் ஜேம்ஸ் அடுபன் (இயற்கைவாதி)
  • சுந்தர்லாக் பகுகுணா (சுற்றுச்சூழல் ஆர்வலர்)
  • மறைமுதுவர் முதலாம் பர்த்தலமேயு (போதகர்)
  • டேவிட் பெல்லமி (தாவரவியலாளர்)
  • என்ஜி சோ-நாம் (ஆங்காங் சுற்றுச்சூழல் ஆர்வலர் & புவியியல் இணைப்பேராசிரியர்-ஹோங் கொங் பல்கலைக்கழகம்)
  • தாம்சு பெரி (போதகர், வரலாற்று ஆசிரியர், தத்துவஞானி)
  • வெண்டெல் பெரி (விவசாயி, தத்துவஞானி)
  • சாண்டி பிரசாத் பட் (காந்திய சுற்றுசூழல்வாதி)
  • முராய் புக்செயின் (தத்துவஞானி, சமூக சுற்றுச்சூழல் ஆர்வலர்)
  • வெண்டி பவ்மேன், ஆத்திரேலிய சுற்றுச்சூழல் ஆர்வலர்
  • ஸ்டீவர்ட் பிராண்ட் (எழுத்தர், நிறுவனர்-அனைத்துலக் கருவிகள் கோப்பு)
  • டேவிட் பிரவுர் (எழுத்தர், செயற்பாட்டாளர்)
  • மோலி புர்கான்சு (நிலப்படவரைவர், செயற்பாட்டாளர்)
  • தாகீர் குரேசி அலையாத்தி காடு மனிதன், அலையாத்தி காடுகளின் கதாநாயகந்பாகித்தான், பாக்கித்தன் சுற்றுச்சூழல் ஆர்வலர்)
  • லெஸ்ட்டர் பிரவுன் (சுற்றுச்சூழல் ஆர்வலர்)
  • கெவின் புசுஆகாட் (செயற்பாட்டாளர்)
  • மிச்செலி டில்ஹாரா (நடிகை)
  • ஹெலன் சல்டிகோட் (மருத்துவர்)
  • ஜோன் கார்லிங் (மனித உரிமை ஆர்வலர்)
  • ரேச்சல் கார்சன் (உயிரியலாளர், எழுத்தாளர்)
  • சார்லசு, வேல்சு இளவரசர்
  • சேவி சேசு (நகைச்சுவை நடிகர்)
  • பாரி கோமோனெர் (உயிரியலாளர், அரசியல்வாதி)
  • மைக் கூலி (பொறியியலாளர், தொழிற்சங்க வாதி)
  • ஜேக்குயுசு-யுவிசு-கெள்சுடியா (சூழலியளார்)
  • லியோனார்டே டிகாப்ரியோ (நடிகர்)
  • ரோல்ப் டிச் (சுற்றுச்சூழல் ஆர்வலர் & சூரிய ஆற்றல் முன்னோடி)
  • ரெனே துபோசு (நுண்ணுயியாளர்)
  • பால் ஆர். எக்ரிச் (மக்கட்தொகை ஆய்வாளர்)
  • ஹென்சு-ஜோசெப் பெல் (ஜெர்மனிய பசுமை கட்சி உறுப்பினர்)
  • ஜேன் போண்டா (நடிகர்)
  • மிசுஹோ புக்கிசிமோ (அரசியல்வாதி, செயல்பாட்டாளர்)
  • ரோல்ப் ஹார்டினெர் (கிராமப்புற புரட்சியாளர்)
  • பீட்டர் கெரெட் (இசைக்கலைஞர், அரசியல்வாதி)
  • ஆல் கோர் (அரசியல்வாதி, முன்னாள் ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர்)
  • டொம் ஹாங்க்ஸ் (நடிகர்)
  • ஜேம்சு ஹேன்சென் (விஞ்ஞானி)
  • டென்சு ஹேய்சு (சுற்றுச்சூழல் ஆர்வலர் & சூரிய மின் ஆற்றல் ஆலோசகர்)
  • டேனிய ஹூப்பர், சுற்றுச்சூழல் ஆர்வலர்
  • நிக்கோலசு ஹல்ட் (எழுத்தாளர்)
  • ராப்ர்ட் ஹ்ண்டர் (ஊடகவியலாளர், துணை அமைப்பாளர் & முதல் தலைவர்கிரீன்பீஸ்)
  • டெட்சுனரி இரிடா (வளம்குன்றா ஆற்றல் ஆலோசகர்)
  • ஜொரியன் ஜென்க்சு (விவசாயி)
  • நொமி கிளீன் (எழுத்தாளர், செயற்பாட்டாளர்)
  • வின்னோனா லாடுயுக் (சுற்றுச்சூழல் ஆர்வலர்)
  • ஏ. கார்ல் லியோபொல்ட் (தாவர உடற்செயலியள் அறிஞர்)
  • அல்டோ லியோபொல்ட் (சுழலியளாளர்)
  • சார்லஸ் லிண்ட்பெர்க் (செயற்பாட்டாளர்)
  • ஜேம்ஸ் லவ்லாக் (ஆய்வாளர்)
  • அமோரி லோவின்சு (சக்தி திட்டக் கருத்தாளர்)
  • ஹண்டர் லோவின்சு (சுற்றுச்சூழல் ஆர்வலர்)
  • கரோலின் லுகசு (அரசியல்வாதி)
  • மார்க்சு லைனாசு (ஊடகவியலாளர், செயற்பாட்டாளர்)
  • காவெஹ் மதானி (ஆய்வாளர், செயற்பாட்டாளர்)
  • சியுடெசுகேட்ல் மார்ட்டின்சு (செயற்பாட்டாளர்)
  • பீட்டர் மேக்சு (கிராபிக் வடிவமைப்பாளர்)
  • மைக்கேல் மெக்கார்த்தி (இயற்கை வாதி, நாளிதழ், செய்தி ஊடகவியலாளர்)பில் மெக்கிப்பன் (எழுத்தாளர், செயற்பாட்டாளர்)
  • டேவிட் மெக் டாக்கர்டு (செயற்பாட்டாளர்)
  • மகேசு சந்திர மேத்தா (வழக்கறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர்)
  • சிகோ மெண்டிஸ் (செயற்பாட்டாளர்)
  • ஜியார்ஜ் மான்பயாட் (ஊடகசெயல்பாட்டாளர்)
  • ஜான் முயுர் (செயற்பாட்டாளர்)
  • லியுக் முல்லென் (நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர்/செயற்பாட்டாளர்)
  • ஹில்டா முரெல் (தாவரவியலாளர், செயற்பாட்டாளர்)
  • ரால்ப் நேடர் (செயற்பாட்டாளர்)
  • கேலார்டு நெல்சன் அரசியல்வாதி)
  • யூஜின் பண்டாலா (கட்டிடக்கலைஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கை, பாரம்பரிய நினைவிட பாதுகாப்பாளர்)
  • மேதா பட்கர் (செயற்பாட்டாளர்)
  • ஆலன் பியர்சு (சுற்றுச்சூழல் ஆலோசகர் & ஆற்றல் முகமை முன்னோடி)
  • ரிவர் பொனிக்சு (நடிகர், இசையமைப்பாளர், செயற்பாட்டாளர்)
  • ஜொனாதன் போர்ட்டிட் (அரசியல்வாதி)
  • பில் ராட்போர்ட் (சுற்றுச்சூழல், பசுமை ஆற்றல், கிரீன்பீஸ் செயல் இயக்குநர்)
  • போனி ராய்ட் (இசையமைப்பாளர்)
  • மாத்யு ரிச்சர்ட்சன் (கனடா எழுத்தாளர்)
  • தியோடோர் ரோசவெல்ட் (முன்னாள் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்)[3]
  • கக்கோப் சனசரயான் (உயிர்வேதியியலாளர், செயற்பாட்டாளர்)
  • கென் சரோ விவா (எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், செயற்பாட்டாளர்)
  • இ எஃபு ஷூமாசர் (நூலாசிரியர்- இசுமோல் இசு பியூட்டிபுல்)
  • சிமோன் சிசுவார்ச்சைல்டு (எழுத்தாளர், செயற்பாட்டாளர்)
  • வந்தனா சிவா (சுற்றுச்சூழல் ஆர்வலர்)
  • கேரி சிண்டெர் (கவிஞர்)
  • ஜில் ஸ்டெயின் (குடியரசுத் தலைவர் போட்டியாளர்)
  • சுவாமி சுந்தர ஆனந்த் (யோகி, புகைப்பட கலைஞர், மலையேற்ற ஆர்வமுடையவர்)
  • டேவிட் சசூக்கி (ஆய்வாளர், ஒலிபரப்பாளர்)
  • கேண்டைசு சுவான்போல் (மாடல்l)
  • சோசூ டனகா (அரசியல்வாதி, செயற்பாட்டாளர்)
  • கென்றி டேவிட் தூரோ (எழுத்தாளர், தத்துவஞானி)
  • கிரெட்டா துன்பர்க் (செயற்பாட்டாளர்)[4]
  • ஜே. ஆர். ஆர். டோல்கீன் (எழுத்தாளர்)
  • ஜோ வேலண்டைன் (அரசியல்வாதி & செயற்பாட்டாளர்)
  • டொமினிகு வாய்நெட் (அரசியல்வாதி, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்)
  • கிறிஸ்டோபர் ஒ வார்டு (நீர் கட்டமைப்பு அறிஞர்)
  • ஹார்வி வாசெர்மென் (ஊடகவியலாளர், செயற்பாட்டாளர்)
  • பால் வாட்சன் (செயற்பாட்டாளர்)
  • ராப்ர்ட் கே வாட்சன் (சுற்றுச்சூழல் ஆலோசகர்- ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம்)
  • பிரன்சு வெப்பர் (சுற்றுச்சூழல், விலங்கு நலச் செயற்பாட்டாளர்)
  • ஹென்றி வில்லியம்சன் (இயற்கை ஆர்வலர், எழுத்தாளர்)
  • சைலீன் வூட்லி (நடிகை)
  • வால்டிசிலா சாமொய்சுகி போலந்து நில உரிமையாளர்
  • விவேக் (நடிகர்)

தகவல்-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்[தொகு]

சமீபத்திய ஆண்டுகளில், இயற்கை சூழலுக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமல்ல, மனித சுற்றுச்சூழலுக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் உள்ளனர். உதாரணமாக, இணையம், வடத் தொலைக்காட்சி மற்றும் திறன்பேசிகளின் தீமைகளை அகற்றுவதன் மூலம் "மனதில் பசுமை இடத்தை" ஏற்படுத்தும் ஆர்வலர்கள் "தகவல்-சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். [5]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]