ரெண்ட் ஓபலோச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரெண்ட் ஓபலோச்
பிறப்புதிசம்பர் 31, 1969 (1969-12-31) (அகவை 51)
தண்டர் பே, ஒன்டாரியோ, கனடா
தேசியம்கனடியன்
பணிஒளிப்பதிவாளர்

ரெண்ட் ஓபலோச் (ஆங்கில மொழி: Trent Opaloch) (பிறப்பு: திசம்பர் 31, 1969) என்பவர் கனடா நாட்டு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கிய கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[1] மற்றும் நெயில் புலோம்கம் இயக்கிய டிஸ்ட்ரிக்ட் 9 (2009), எலைசியம் (2013), சேப்பீ (2015) போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

இவர் 2010 ஆம் ஆண்டில் டிஸ்ட்ரிக்ட் 9 என்ற திரைப்படத்தில் பணிபுரிந்ததற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான பிரித்தானிய அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2] மற்றும் 2020 ஆம் ஆண்டில் பெர்ல் ஜாமினின் 'ரெட்ரோகிரேட்' என்ற இசை காணொளியில் நடித்துள்ளார்.[3]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு இயக்குனர் குறிப்புகள்
2006 எல்லோ நெயில் புலோம்கம் குறும்படம்
2009 டிஸ்ட்ரிக்ட் 9 பரிந்துரை - சிறந்த ஒளிப்பதிவுக்கான பிரித்தானிய அகாடமி விருது
2013 எலைசியம்
2014 கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் ரூசோ சகோதரர்கள்
2015 சேப்பீ நெயில் புலோம்கம்
2016 கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் ரூசோ சகோதரர்கள்
2018 அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்
2019 அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெண்ட்_ஓபலோச்&oldid=3101485" இருந்து மீள்விக்கப்பட்டது