உள்ளடக்கத்துக்குச் செல்

ரெடி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரெடி விருது (Redi Award) என்பது நச்சுயியலில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்த விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் பன்னாட்டு அறிவியல் விருது ஆகும். இந்த அறிவியல் ஆய்வுகள் நஞ்சு மற்றும் நச்சுப் பொருள் குறித்து அமையலாம். இந்த விருதினை பன்னாட்டு நச்சுயியல் சங்கம் வழங்குகிறது.[1]

தோற்றம்

[தொகு]

1664இல் ஒரு இத்தாலிய பல்துறையாளர் பிரான்செஸ்கோ ரெடி எழுதிய ஒஸ்ஸெர்ஸியோனி இன்டர்னோ அலே வைப்பர் (விரியன் பாம்புகள் பற்றிய அவதானிப்புகள்) நச்சுயியல் ஆராய்ச்சியின் தொடக்கத்தின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ரேடி பாம்புக்கடி மற்றும் விரியன் பாம்பின் விடம் குறித்து அறிவியல் அடிப்படையில் தெளிவாய்ப் புரிந்துகொண்ட முதல் அறிவியல் அறிஞர் ஆவார். இவர் விரியன் பாம்பின் விடமானது விசப் பல்லின் வழியாக வருகிறது என்றும், எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த பித்தப்பையிலிருந்து இல்லை என நிறுவினார். மேலும் விழுங்கும்போது இது விஷமல்ல என்றும் இரத்த ஓட்டத்தில் நுழையும் போது மட்டுமே பாம்பின் விடம் விளைவுகளை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.[2] காயத்திற்கு முன் இறுக்கமான தசைநார் மூலம் இரத்தத்தில் உள்ள விஷ நடவடிக்கையை மெதுவாக்கும் வாய்ப்பை இவர் நிரூபித்தார். இந்த செயல் நச்சுயியலின் அடித்தளமாகக் குறிப்பிடப்படுகிறது.[3] நச்சுயியலின் முன்னோடிகளை கெளரவிக்கும் பொருட்டு நச்சுயியலில் ஆராய்ச்சி விஞ்ஞானிகளை அங்கீகாரம் செய்யும் பொருட்டு பன்னாட்டு நச்சுயியல் சங்கம் 1967இல் ரெடி விருதை நிறுவியது.[1]

விருதின் தன்மை

[தொகு]

நச்சுயியல் துறையில் சிறப்பான பங்களிப்புகளைச் செய்த விஞ்ஞானிகள் அல்லது மருத்துவர்களுக்கு ரெடி விருதுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒரு தடவை நடைபெறும் சங்கத்தின் உலக காங்கிரசின் போது இந்த விருது வழங்கப்படுகிறது. இது நச்சுயியலாளர்களுக்கு சமுதாயத்தால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது மதிப்புமிக்க விருதாகும். விருதுக்கான தேர்வு டாக்ஸிகனின் (ஆய்விதழ்) ஆசிரியர் (பன்னாட்டு நச்சுயியலின் அதிகாரப்பூர்வ ஆய்விதழ்) தலைமையிலான ரெடி விருதுக் குழுவால் செய்யப்படுகிறது. இதில் முன்னாள் இந்நாள் நிர்வாகக்குழுவினர் கலந்து கொள்வதால் உலக காங்கிரசில் மட்டுமே விருதாளர்கள் பெயர் அறிவிக்கப்படுகிறது. பெறுநர் பின்னர் தனது சொந்த விருப்பத்தில் சொற்பொழிவை ”ரெடி சொற்பொழிவு” வழங்க அழைக்கப்படுகிறார்.[2][4] இந்த விருது, விருது பெற்றவரின் தகுதிகளை விவரிக்கும் மேற்கோள் மற்றும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான நிதி உதவியினை சங்கமே வழங்குகிறது.[5]

விருது பெற்றவர்கள்

[தொகு]

ஆதாரம்: நச்சுயியல் பற்றிய பன்னாட்டு சங்கம்

  • 1988- பால் ஏ கிறிஸ்டென்சன் (தென்னாப்பிரிக்கா)
  • 2003 - பால்டோமெரோ ஆலிவேரா (அமெரிக்கா)
  • 2015 - ஜோஸ் மரியா குட்டரெஸ் குட்டரெஸ் (கோஸ்டாரிகா)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Mebs D (2012). "History of the International Society on Toxinology - A personal view". Toxicon 69: 21–8. doi:10.1016/j.toxicon.2012.11.021. பப்மெட்:23237723. 
  2. 2.0 2.1 Habermehl GG (1994). "Francesco Redi—life and work". Toxicon 32 (4): 411–417. doi:10.1016/0041-0101(94)90292-5. பப்மெட்:8052995. https://archive.org/details/sim_toxicon_1994-04_32_4/page/411. 
  3. "Historical milestones and discoveries that shaped the toxicology sciences". EXS 99 (1): 1–35. 2009. doi:10.1007/978-3-7643-8336-7_1. பப்மெட்:19157056. 
  4. International Society on Toxinology. "IST Redi Awards". Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.
  5. International Society on Toxinology. "International Society on Toxinology By-Laws Article X" (PDF). Archived from the original (PDF) on 2013-12-07. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெடி_விருது&oldid=3792781" இலிருந்து மீள்விக்கப்பட்டது