உள்ளடக்கத்துக்குச் செல்

ராய்மா சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராய்மா சென்
রাইমা সেন
2017இல் கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில்
தாய்மொழியில் பெயர்রাইমা সেন
பிறப்புராய்மா தேவ் வர்மா
7 நவம்பர் 1979 (1979-11-07) (அகவை 45)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1999–முதல் தற்போது வரை
பெற்றோர்மூன் மூன் சென் (தாய்)
பாரத் தேவ் வர்மா (தந்தை)
உறவினர்கள்ரியா சென் (சகோதரி)
சுசித்ரா சென் (பாட்டி)

ராய்மா சென் (Raima Sen) "ராய்மா தேவ் வர்மா" என்கிற பெயருடன் 1979, நவம்பர் 7 அன்று பிறந்த இவர்[1] ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் பெங்காலி மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.

இளமைப்பருவம்

[தொகு]

ராய்மா சென், மகாராஷ்டிராவிலுள்ள மும்பையில், நவம்பர் 7, 1979இல் பிறந்தார். இவரது பெற்றோர் மூன் மூன் சென் மற்றும் பாரத் தேவ் வர்மா. மேலும் இவர் பெங்காலி திரையுலகில் "மகாநாயகி" என போற்றப்பட்ட சுசித்ரா சென்னின் பேத்தி ஆவார். இவரது சகோதரி ரியா சென் பாலிவுட் நடிகை ஆவார்.[1] இவரின் தந்தை பாரத் தேவ் வர்மா திரிபுரா அரச குடும்பத்தில் உறுப்பினராக உள்ளார்.[2] இவரது தந்தை வழி பாட்டி, இலா தேவி "கூச் பெஹரின்" ராணியாக இருந்தார். இவரின் இளைய சகோதரி காயத்திரி தேவி செய்ப்பூர் மகாராணியாக இருந்தார்.[2] இவரது தந்தைவழி பாட்டியின் தாய் இந்திரா வடோதரா மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் III என்பவரின் ஒரே மகளாவார்.[3][4]

தொழில்

[தொகு]
தாயார் மூன் மூன் சென்னுடன் ராய்மா சென்

சென் "காட்மதர்" திரைப்படத்தில் அறிமுகமானார். இது விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு வெற்றி பெற்றது, ஆனால் சபனா ஆசுமி இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இருந்ததால் இவர் நடித்த சிறு கதாபாத்திரம் மக்களிடம் சென்றடையவில்லை. . பின்னர் அவர் "டாமன்" திரைப்படத்தில் நடித்தார் ரவீணா டாண்டனின் மகளாக, அவரது சிறிய நடிப்பு பாராட்டப்பட்டது. ரிதுபர்னோ கோஷ் இயக்கிய "சோக்கர் பாலி" திரைப்படத்தில் நடித்தபோது இவருக்கு திருப்புமுனை பாத்திரம் வந்தது.

சொந்த வாழ்க்கை

[தொகு]

ராய்மா சென் தனது தாயார், மற்றும் சகோதரி ரீமா சென் ஆகியோரை விட, தனது பாட்டி சுசித்ரா சென்னைப் போல தோற்றத்தில் ஒத்திருந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Raima Sen". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 31 January 2018.
  2. 2.0 2.1 Buyers, Christopher. "The Manikya Dynasty: Genealogy". Royal Ark India. பார்க்கப்பட்ட நாள் 2008-05-31.
  3. COOCH BEHAR (Princely State), University of Queensland; Retrieved: 2008-04-18
  4. Geraldine Forbes et al., The new Cambridge history of India[தொடர்பிழந்த இணைப்பு], page 135, Cambridge University Press, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-26727-7
  5. "'I want to do what Rani did in Black'". ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 2011-06-26.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ராய்மா சென்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்மா_சென்&oldid=4114878" இலிருந்து மீள்விக்கப்பட்டது