ரிதுபர்னோ கோஷ்
ரிதுபர்னோ கோஷ் Rituparno Ghosh | |
---|---|
பிறப்பு | 31 ஆகத்து 1963 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
இறப்பு | 30 மே 2013 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 49)
பணி | திரைப்பட இயக்குனர் & நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1994 – 2013 |
ரிதுபர்னோ கோஷ் (வங்காள மொழி: ঋতুপর্ণ ঘোষ Ritupôrno Ghosh, 31 ஆகத்து 1963 – 30 மே 2013) ஒரு வங்காள மொழி திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 11 நாடளவிலான திரைப்பட விருதுகளையும், பல உலகளாவிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.[1][2] பொருளியலில் பட்டம் பெற்ற கோஷ் ஒரு விளம்பர நிறுவனத்தில் படைப்புத்திறமிக்க கலைஞராக தமது பணிவாழ்வைத் துவங்கினார். அவரது முதல் திரைப்படமாக ஹைரர் அங்க்டி 1992இல் வெளியானது. 1994இல் வெளியான அவரது அடுத்த திரைப்படம் உன்னிசே ஏப்ரல் சிறந்த திரைப்படமாக தேசியத் திரைப்பட விருது பெற்றது.
கோஷ் தம்மை சத்யஜித் ராய் இரசிகராக அறிமுகப்படுத்திக் கொண்டார். இருபது ஆண்டுகள் விரிந்த அவரது திரைவாழ்வில் 12 தேசிய விருதுகளையும் சில உலகளாவிய விருதுகளையும் பெற்றுள்ளார்.[3][4] பெரும் மாரடைப்பு காரணமாக மே 30, 2013 அன்று கொல்கத்தாவில் கோஷ் உயிரிழந்தார்.[5]
ஆரம்ப வாழ்க்கை & பின்புலம்
[தொகு]ரிதுபர்னோ கோஷ் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவருடைய பெற்றோர்கள் இருவரும் திரைப்படம் சம்மந்தமுடையவர்கள், இவர் தந்தை ஓர் ஆவணப்படம் உருவாக்குபவர் ஆவார். இவர் தன் பள்ளி கல்வியை சவுத் பாயிண்ட் உயர்நிலை பள்ளியில் பயின்றார். மேலும் இவர் தன் உயர் கல்வியை கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பயின்றார்.
இயக்குனராக
[தொகு]ஆண்டு | தலைப்பு | மொழி | மற்ற குறிப்புகள் |
---|---|---|---|
1994 | ஹிரர் அங்டி | வங்காள மொழி | |
1994 | உநிஷே ஏப்ரல் | வங்காள மொழி | |
1997 | டஹன் | ||
1999 | பறிவாளி | வங்காள மொழி | தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகைகளின் பட்டியல் - கிரண் கேர் தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகர் - சுதிப்த்தோ சக்கரவர்த்தி |
1999 | அசுக் | வங்காள மொழி | சிறந்த வங்காள மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது |
2000 | உத்சப் | வங்காள மொழி | தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல் |
2002 | தித்லி | வங்காள மொழி | |
2003 | சுபோ மொகூரத் | வங்காள மொழி | சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது - ராக்கி
சிறந்த வங்காள மொழித்திரைப்படத்திற்கான தேசிய விருது |
2003 | சோக்கெர் பாலி | வங்காள மொழி சிறந்த வங்காள மொழித்திரைப்படத்திற்கான தேசிய விருது | |
2004 | இரெயின்கோட் | இந்தி | சிறந்த இந்தி மொழித்திரைப்படத்திற்கான தேசிய விருது |
2005 | அந்தர்மகால் | வங்காள மொழி | |
2006 | தோசர் | வங்காள மொழி | தேசியத் திரைப்பட விருது – நடுவர் சிறப்பு விருது / சிறப்பு குறிப்பு - பிரொசென்ஜித் சாட்டர்ஜி |
2007 | தி லாஸ்ட் லியர் | ஆங்கிலம் | சிறந்த ஆங்கில மொழித்திரைப்படத்திற்கான தேசிய விருது |
2008 | கேலா | வங்காள மொழி | |
2008 | ஷொப் சரித்ரோ கல்போனிக் | வங்காள மொழி
சிறந்த வங்காள மொழித்திரைப்படத்திற்கான தேசிய விருது | |
2010 | அபோஹோமான் | வங்காள மொழி | தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்- ரிதுபர்ணோ கோஷ் சிறந்த வங்காள மொழித்திரைப்படத்திற்கான தேசிய விருது |
2010 | நூக்காடுபி | வங்காள மொழி | |
2012 | சன்கிளாஸ் | இந்தி | |
2012 | சித்ராங்கதா: தி கிரௌனிங் விஷ் | வங்காள மொழி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rituparno Ghosh's sexual transformation". Gossips Junction. Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2012-10-03.
- ↑ "Rituparno Ghosh's sexual transformation : Titbits". Santabanta.com. 2011-04-28. Archived from the original on 2012-12-02. பார்க்கப்பட்ட நாள் 2012-10-03.
- ↑ "Rituparno, tender as night: Raja Sen salutes the talent". Rediff. 30 May 2013. http://www.rediff.com/movies/column/rituparno-tender-as-night-raja-sen-salutes-the-talent/20130530.htm. பார்த்த நாள்: 30 May 2013.
- ↑ "Rituparno Ghosh, trailblazer of new wave Bengali cinema, dies". The Times of India. 30 May 2013. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Rituparno-Ghosh-trailblazer-of-new-wave-Bengali-cinema-dies/articleshow/20346594.cms. பார்த்த நாள்: 30 May 2013.
- ↑ "Rituparno Ghosh's canvas was both intimate and profoundly cinematic". Archived from the original on 25 July 2018. பார்க்கப்பட்ட நாள் 15 June 2019.