ராமண்ண ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராமண்ண ராய் என்பவர் கேரள அரசியல்வாதி. பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இவர் ஒரு சமூக சேவகரும் ஆவார். இவர் கேரளத்தின் காசர்கோடு மக்களவைத் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு வென்றவர். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் துளு பேசும் குடும்பத்தில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்திலும், கர்நாடக பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றவர்.

அரசியல்[தொகு]

காசர்கோடு பகுதியை கேரளத்துடன் இணைப்பதை எதிர்த்தார். பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அந்த கட்சி பிரிந்த பின்னர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். காசர்கோடு மாநகர சபையின் தலைவராகவும் பதவி வகித்தார். ஏழாவது மக்களவை, ஒன்பதாவது மக்களவை, பத்தாவது மக்களவைத் தொடர்களில் பாராளுமன்ற உறுப்பினரானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமண்ண_ராய்&oldid=2716140" இருந்து மீள்விக்கப்பட்டது