உள்ளடக்கத்துக்குச் செல்

ராணிர்பசார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணிர்பசார்
Ranirbazar
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிபுரா
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்15,820
மொழிகள்
 • அலுவல்பூர்வம்வங்காளம், கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

ராணிர்பசார் (Ranirbazar) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிப்புரா மாவட்டத்தில்[1] பரணிடப்பட்டது 2019-08-19 at the வந்தவழி இயந்திரம் அமைந்துள்ள ஒரு நகரம் மற்றும் பேரூராட்சி ஆகும். நகர அரங்கம், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் கோபுரம் , சந்தை, போன்ற பல அடிப்படை வசதி வாய்ப்புகள் இங்குக் காணப்படுகின்றன.

புவியியல் அமைப்பு

[தொகு]

23.83° வடக்கு 91.37° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் ராணிர்பசார் நகரம் பரவியுள்ளது. அசாம் – அகர்தலா தேசிய நெடுஞ்சாலையில் ஆவுரா நதிக்கரையில் இந்நகரம் அமைந்துள்ளது. அகர்தலாவில் இருந்து வாகனங்களில் அரைமணி நேரப் பயணத்தில் இங்குச் செல்லமுடியும். காயெர்பூர் மற்றும் சிரானியா ஆகிய நகரங்கள் இந்நகருக்கு அருகில் உள்ளன.

மக்கள்தொகையியல்

[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] ராணிபசார் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 11,0030 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். நகரத்தின் கல்வியறிவு சதவீதம் 77% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 82 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 72 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 10% அளவில் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

இவற்றையும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணிர்பசார்&oldid=3575817" இலிருந்து மீள்விக்கப்பட்டது