ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகம்
Appearance
राजस्थान केन्द्रीय विश्वविद्यालय | |
குறிக்கோளுரை | सतत विकास के लिए शिक्षा |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | நிலையான வளர்ச்சிக்கு கல்வி |
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 2009[1] |
வேந்தர் | சாம் பிட்ரோடா |
துணை வேந்தர் | அருண் குமார் பூஜாரி[2] |
மாணவர்கள் | 1700[3] |
அமைவிடம் | பந்தர் சிந்தரி, அஜ்மீர் , , 26°37′39″N 75°01′54″E / 26.627392°N 75.031672°E |
வளாகம் | ஊரகம் (2.1 கி.மீ²) |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | www.curaj.ac.in |
ராஜஸ்தானில் அமைவிடம் |
ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம். இது அஜ்மேர் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் தொழினுட்பம், அறிவியல், பொருளியல், மேலாண்மை, சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகள் உள்ளன. இங்கு 1700 மாணவர்கள் படிக்கின்றனர்.[3]
வளாகம்
[தொகு]இந்த பல்கலைக்கழகம் ஜெய்ப்பூர்-அஜ்மேர் விரைவுவழிச்சாலையில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ 518 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. கிஷன்கட் தொடருந்து நிலையம் அருகில் உள்ளது.
துறைகள்
[தொகு]இங்கு தொழினுட்பம், அறிவியல், பொருளியல், மேலாண்மை, சமூக அறிவியல் ஆகிய துறைகள் உள்ளன.
இந்த பல்கலையில் பத்து பள்ளிகளில் துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.[4]
நூலகம்
[தொகு]இங்கு 25,000 நூல்கள் இருக்கின்றனர். தேசிய அளவிலும் உலகளவிலும் வெளியாகும் ஆய்விதழ்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.[5]
மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Central Universities Act 2009" (PDF). Ministry of Human Resource Development website.
- ↑ "Vice Chancellor". Central University of Rajasthan website.
- ↑ 3.0 3.1 "Central University of Rajasthan Self Study Report Part 1" (PDF). Central University of Rajasthan website.
- ↑ "School". Central University of Rajasthan.
- ↑ "Central Library". Central University of Rajasthan website.