ராகுல் போஸ்
ராகுல் போஸ் | |
|---|---|
![]() 2008 இல் ராகுல் போஸ் | |
| பிறப்பு | 27 சூலை 1967 கல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 1989–தற்போது |
| உறவினர்கள் | எஸ். பி. பி. தோரட் (தாத்தா) |
ராகுல் போஸ் (Rahul Bose, பிறப்பு: 27, யூலை, 1967) என்பவர் ஒரு இந்திய நடிகரும், தடகள வீரரும் ஆவார். இவர் இந்தி படங்களில் பணிபுரிகிறார். மேலும் இவர் ரக்பி இந்தியா அமைப்பின் தலைவராக உள்ளார்.
இவர் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர், கல்புருஷ், அனுரானன், அந்தஹீன், லேப்டாப், தி ஜப்பானிஸ் வைஃப் போன்ற வங்காள படங்களில் நடித்துள்ளார். மேலும் பியார் கே சைட் எஃபெக்ட்ஸ், மான் கயே முகல்-இ-ஆசம், ஜான்கார் பீட்ஸ், குச் லவ் ஜெய்சா, தில் தடக்னே தோ, சமேலி, ஷௌர்யா போன்ற இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படமான விஸ்வரூபம் (2013), விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.[1]
2000களின் முற்பகுதியில், டைம் இதழ் போசை " இந்தியக் கலைத் திரைப்படத்தின் உச்ச நட்சத்திரம்" என்று அழைத்தது. அதே நேரத்தில் மாக்சிம் இதழ் இவரை இங்லிஷ், ஆகஸ்ட், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயர் ஆகிய இணைப்படங்களில் இவரது பணிக்காக " ஆசியத் திரைப்படத்துறையின் சான் பென் " [2] என்று அழைத்தது.
போஸ் அவரது சமூக செயல்பாட்டிற்காகவும் அறியப்படுகிறார். 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலையைத் தொடர்ந்து அதன் நிவாரணப் பணிகளில் கலந்துகொண்டார். மேலும் பாகுபாடுகளுக்கு எதிரான அரசு சார்பற்ற அமைப்பான தி பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனராகவும் உள்ளார்.[3]
துவக்கால வாழ்க்கையும், கல்வியும்
[தொகு]ரூபன் என்ற தந்தைக்கும், குமுத் போசு என்ற தாய்க்கும் 1967, யூலை, 27 அன்று ராகுல் போஸ் பிறந்தார். இவரின் தந்தை வங்காளி, இவரின் தாயார் ஓரளவு பஞ்சாபியும் ஓரளவு மராத்தியுமாவார்.[4] இவரது தாய்வழி தாத்தா லெப்டினன்ட் ஜெனரல் எஸ்பிபி தோரட் ஆவார்.[5]
போஸ் தன் ஆறு வயதில், பள்ளி நாடகமான டாம், தி பைப்பர் சன் என்ற நாடகத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தார். இவரது குழந்தைப் பருவத்தில் இவரின் தாயார் இவருக்கு குத்துச்சண்டை, ரக்பி ஆகிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு, இவர் விளையாட்டில் ஆர்வம் காட்டினார். இவர் துடுப்பாட்டத்தையும் விளையாடியுள்ளார், மேலும் முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர் மன்சூர் அலி கான் பட்டோடியிடம் பயிற்சி பெற்றார்.[6]
இவர் பம்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானன் பள்ளியின் முன்னாள் மாணவராவார். பல அமெரிக்க பல்கலைக்கழகங்களின் நிராகரிப்புக்குப் பிறகு, போஸ் மும்பையின் சைடன்ஹாம் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போது கல்லூரியின் ரக்பி அணியில் விளையாடினார். மேலும் மேற்கு இந்திய வாகையர் போட்டியில் போட்டியிட்டு, குத்துச்சண்டையில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 1987 இல் இவரின் தாயார் இறந்த பிறகு, போஸ் ரெடிஃபியூஷனில் நகல் எழுத்தாளராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் விளம்பரப் படைப்பு இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். தனது முதல் படமான இங்லிஷ், ஆகஸ்ட் வெளியான பிறகு, போஸ் முழுநேர நடிகராவதற்காக தன் வேலையை விட்டுவிட்டார்.[7]
நாடகம் மற்றும் திரைப்பட வாழ்க்கை
[தொகு]போஸ் தனது நடிப்பு வாழ்க்கையை மும்பையில் ராகுல் டி'குன்ஹாவின் டாப்ஸி டர்வே மற்றும் ஆர் தேர் டைகர்ஸ் இன் தி காங்கோ? ஆகிய நடகங்களில் தொடங்கினார். டி'குன்ஹாவின் அத்தை, இயக்குநர் தேவ் பெனகலின் இங்கிலீஷ், ஆகஸ்ட் படத்திற்கு நடிகர்கள் தேர்வு இயக்குநராக இருந்தார். அப்படத்தில் போஸ் முக்கிய வேடத்தில் நடிக்க பரிந்துரைத்தார். திரைப் பரிசோதனைக்குப் பிறகு, பெனகல் இவரை அரசு ஊழியர் அகஸ்திய சென் வேடத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார். உபமன்யு சாட்டர்ஜியின் அதே பெயரிலான புதினத்தை அடிப்படையாகக் கொண்ட இங்லிஷ், ஆகஸ்ட் முதல் ஹிங்கிலிசு படங்களில் ஒன்றாகும். மேலும் 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் வாங்கப்பட்ட முதல் இந்தியப் படமான இப்படம் போசுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப் பெற்றது.[8]
இங்கிலிஷ், ஆகஸ்ட்க்குப் பிறகு போசு தொலைக்காட்சியில் வேலை தேடினார்; இந்தியாவின் முதல் ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடரான எ மவுத்ஃபுல் ஆஃப் ஸ்கையில் இவருக்கு ஒரு வேடம் கிடைத்தது. மேலும் பிபிசி வேர்ல்டின் ஸ்டைல்! நிகழ்ச்சியை லைலா ருவாசுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். 1998 ஆம் ஆண்டில், இவர் கைசத் கசுடட்டின் பாம்பே பாய்ஸில் நசிருதீன் சாவுடன் இணைந்து நடித்தார். மேலும் தேவ் பெனகலின் இரண்டாவது படமான ஸ்பிளிட் வைட் ஓபனில் நடித்தார். அலைந்து திரியும் தண்ணீர் விற்பனையாளர் பாத்திரத்திற்குத் தயாராவதற்காக, போஸ் மும்பையின் சேரிகளில் வசித்து, இரண்டு வாரங்கள் ஒரு போதைப்பொருள் வியாபாரியை கவனித்துவந்தார். பின்னர் இவர் இந்த நேரத்தை - 2002 குஜராத் கலவரங்களுடன் சேர்த்து - தனது சமூக மனசாட்சியின் விழிப்புணர்வின் தொடக்கமாகக் குறிப்பிட்டார்.[9] பாலியல் துஷ்பிரயோக காட்சி சித்தரிப்புகளால் ஸ்பிளிட் வைட் ஓபன் திரைப்படம் இந்தியாவில் சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும்,[10][11] போஸ் தனது நடிப்பிற்காக 2000 சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய நடிகருக்கான வெள்ளித் திரை விருதைப் பெற்றார்.[7] இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் ஹேமார்க்கெட்டில் வெளிநாட்டு நிகழ்ச்சியை நடத்தினார், அங்கு இவர் டிம் முராரியின் நாடகமான தி ஸ்கொயர் சர்க்கிளின் ஆங்கிலப் பதிப்பில் நடித்தார்.[12]
1998 ஆம் ஆண்டு அறிவியல் புனைகதை தொலைக்காட்சித் தொடரான கேப்டன் வ்யோமில் போஸ் "விகல்" என்ற எதிர்மறைப் பாத்திரத்தில் தோன்றினார்.
2001 ஆம் ஆண்டில், போஸ் எவ்ரிபடி சேஸ் ஐ ஆம் ஃபைன்! என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ரெஹான் இன்ஜினியர் மற்றும் கோயல் பூரி முதன்மை வேடத்திலும், போஸ் துணை வேடத்தில் நடித்த எவ்ரிபடி திரைப்படம் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 2003 ஆம் ஆண்டு பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான ஜான் ஷ்லேசிங்கர் விருதை போஸ் பெற்றார்.[13] 2002 ஆம் ஆண்டில், அபர்ணா சென்னின் கலைப் படமான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் ஐயரில் கொன்கனா சென் சர்மாவுக்கு ஜோடியாக போஸ் நடித்தார். வகுப்புவாத வன்முறையை விமர்சிக்கும் இந்தப் படம், விமர்சன ரீதியாக பாராட்டபட்டது. மேலு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் மூன்று தேசிய திரைப்பட விருதுகளையும் பெற்றது.[14][15]
விருதுகள்
[தொகு]- 2007 – "மாற்றத்திற்கான கலைஞர்" கர்மவீர் புரஸ்கார் விருது [16]
- 2008 – ஐபிஎன் எமினென்ட் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் விருது [17]
- 2009 – சமூக நீதிக்கும் நலனுக்குமான இளைஞர் சின்னம் விருது [18]
- 2010 – அசாதாரண பணிக்கான கிரீன் குளோப் அறக்கட்டளை விருது [19]
- 2012 – தேசிய ஒருங்கிணைப்புக்கான ஹக்கீம் கான் சுர் விருது – மகாராணா மேவார் அறக்கட்டளை [20]
- 2012 – சேவைகளுக்கான அந்தமான் (ம) நிக்கோபார் தீவு லெப்டினன்ட் கவர்னரின் பாராட்டு விருது [21]
- 2020 - பல்புல் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் ஓ.டி.டி. விருதுகள்
விளையாட்டு வாழ்க்கை
[தொகு]
1998 ஆம் ஆண்டில், ஆசிய ரக்பி கால்பந்து சங்க வகையர் என்ற பன்னாட்டு போட்டியில் விளையாடிய முதல் இந்திய தேசிய ரக்பி அணியில் போஸ் இடம் பெற்றார்.[22] இவர் ஸ்க்ரம்-ஹாஃப் மற்றும் வலது-விங்கர் நிலைகள் இரண்டிலும் விளையாடியுள்ளார்.[23] டெய்லி நியூஸ் & அனாலிசிசுக்கு அளித்த செவ்வியில், 2009 பருவத்தில் அணிக்குத் திரும்பப் போவதில்லை என்று போஸ் அறிவித்தார்.[24]
செயற்பாடு
[தொகு]2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலைக்குப் பிறகு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நிவாரணப் பணிகளில் போஸ் உதவினார். அந்தப் பணியின் விளைவாக, போஸ் தனது அரசு சாரா அமைப்பான தி பவுண்டேஷன் மூலம் அந்தமான் மற்றும் நிக்கோபார் உதவித்தொகைத் திட்டத்தைத் தொடங்கினார்.[25] இந்த உதவித்தொகை திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த வறிய குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறது.
போஸ், இந்தியாவுக்கு கற்றுக்கொடுங்கள், அக்சரா சென்டர், பிரேக்த்ரூ, சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் மற்றும் ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா போன்ற பல தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புகொண்டவராக உள்ளார். கல்வியில் சமத்துவமின்மை நிலவுவதை ஒழிப்பதற்கான 'இந்தியாவுக்கு கற்றுக்கொடுங்கள்' இயக்கத்துடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.[26] மேலும் இவர் 51 மும்பை தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கான ஒரு குடை அமைப்பான தி குரூப் ஆஃப் குரூப்ஸின் நிறுவனராகவும் தலைவராகவும் உள்ளார்.[27] இவர் நருமதை அணை கட்டுமானத்தை நிறுத்துவதற்காக செயலுபடும் நர்மதா பச்சாவ் அந்தோலன் அமைப்புக்கு ஆதரவாக குரல் கொடுப்பவராக உள்ளார்.[28][29]
போஸ் ஆக்ஸ்போர்டிலும் 2004 உலக இளைஞர் அமைதி உச்சி மாநாட்டிலும் பாலினச் சமனிலை மற்றும் மனித உரிமைகள் குறித்து உரையாற்றினார்.[2] 2009 ஆம் ஆண்டில், இவர் காலநிலை நடவடிக்கை வலையமைப்பின் ஆதரவின் கீழ் உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து உரையாற்ற கனடாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மேலும் கோபன்ஹேகனில் நடந்த காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் எதிர்ப்பாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 2011 ஆம் ஆண்டில், சிக்கிம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பாய்ச்சங் பூட்டியாவுடன் இணைந்து பணியாற்றினார்.
பிப்ரவரி 17, 2013 அன்று வங்கதேசபி.ஆர்.ஏ.சி பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழாவில், போஸ் பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார்.[சான்று தேவை]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]போசுக்கு அனுராதா என்ற ஒரு அக்காள் உள்ளார், அவர் மிட்-டே மல்டிமீடியாவின் உரிமையாளரும் இயக்குநருமான தாரிக் அன்சாரியை மணந்துள்ளார்.[30] எவ்ரிபடி சேஸ் ஐ ஆம் ஃபைன்! படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார். (2001).[31] போஸ் திருமணம் செய்துகொள்ளவில்லை.[32]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vats, Rohit (29 August 2011). "Why Rahul Bose is perfect for 'Vishwaroopam'". IBNLive இம் மூலத்தில் இருந்து 10 October 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111010232246/http://ibnlive.in.com/news/why-rahul-bose-is-perfect-for-vishwaroopam/179613-8-66.html.
- ↑ 2.0 2.1 World Youth Peace Summit (2003). "Rahul Bose: Actor/Producer/Humanitarian". Retrieved 5 August 2008.
- ↑ Ayaz, Shaikh (23 November 2006). "Rapid fire with Rahul Bose". Daily News and Analysis. Retrieved 5 August 2005.
- ↑ Saini, Neha (24 July 2019). "Rahul Bose shares life anecdotes". தி டிரிப்யூன்.
Bose shared that he is also part Punjabi. "My mother is a half Marathi and half Punjabi, so I grew up with a mix of Bengali, Punjabi and Marathi culture."
- ↑ Singh, Rahul (16 January 2025). "Why India needed to celebrate 75 yrs of end of WW-II". Tribune India.
Shankarrao Pandurang Patil Thorat (incidentally, the maternal grandfather of actor Rahul Bose)
- ↑ "Meet the batman". The Times of India. 17 June 2007. Retrieved 12 December 2023.
- ↑ 7.0 7.1 .
- ↑ Chatterjee, Saibal (29 November 1995). "On with the Offbeat". New Delhi. Retrieved 2 December 2009.
- ↑ Anuradha Sengupta (21 October 2007). "Being Rahul Bose: Nothing run-of-the-mill, please". IBN. Archived from the original on 22 September 2011. Retrieved 31 December 2009.
- ↑ Peer, Basharat (31 March 2001). "Not for me a process that is illegal!". Rediff.com. Retrieved 11 September 2009.
- ↑ Desai, Jigna (2004). "Sex in the Global City: The Sexual and Gender Politics of the New Urban, Transnational and Cosmopolitan Cinema in English". Beyond Bollywood: the cultural politics of South Asian diasporic film. Routledge. pp. 197–8. ISBN 978-0-415-96684-9. Retrieved 10 September 2009.
- ↑ "Going Solo". The Indian Express. 16 February 2000. Retrieved 7 December 2009.
- ↑ "A fine win at Palm Springs". The Times of India. 22 January 2003. Retrieved 12 December 2023.
- ↑ Patrick Frater (11 September 2002). "India's Madhu takes international rights on Mr And Mrs Iyer". Screen Daily. Retrieved 2 December 2009.
- ↑ "Devgan, Konkona bag National Film Awards". Rediff.com. 26 July 2003. Retrieved 2 December 2009.
- ↑ "The Changing Climate". Businessworld. 30 November 2007. Archived from the original on 10 October 2008. Retrieved 1 December 2008.
- ↑ "CJ Awards: Honouring you in your right to fight". CNN-IBN. 17 October 2008. Archived from the original on 14 June 2011. Retrieved 20 May 2011.
- ↑ "Rahul, Priyanka, Hrithik bag youth icon awards". The Times of India. 27 September 2009 இம் மூலத்தில் இருந்து 1 October 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001120247/http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Rahul-Priyanka-Hrithik-bag-youth-icon-awards/articleshow/5062118.cms.
- ↑ "Akshay's son wins Green Globe Foundation Award". NDTV. 6 February 2010. Archived from the original on 10 February 2010. Retrieved 8 February 2010.
- ↑ "Rahul Bose to be honoured in Udaipur". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 February 2012 இம் மூலத்தில் இருந்து 7 July 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120707080958/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-23/news-interviews/31090588_1_rahul-bose-national-integration-udaipur.
- ↑ Dalal, Sayantan. "Rahul Bose gets felicitated". Daily News and Analysis. Retrieved 23 August 2012.
- ↑ Natarajan, H (17 November 1998). "Bose leads Bombay Boys to Singapore". இந்தியன் எக்சுபிரசு. Retrieved 16 December 2008.
- ↑ "Rage for RUGBY". தி இந்து. 10 May 2004 இம் மூலத்தில் இருந்து 22 November 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041122063845/http://www.hindu.com/mp/2004/05/10/stories/2004051002800400.htm.
- ↑ Bhowmik, Aveek (9 June 2008). "Rahul Bose's rage for Rugby". Daily News & Analysis. Retrieved 16 December 2008.
- ↑ "The Team". The Foundation. Retrieved 8 April 2013.
- ↑ "Rahul Bose appointed Oxfam's global ambassador". The Times of India. 31 July 2007 இம் மூலத்தில் இருந்து 3 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081203122240/http://economictimes.indiatimes.com/articleshow/2245882.cms.
- ↑ "Citizens' groups, NGOs chalk out action plan for elections". இந்தியன் எக்சுபிரசு. 20 March 2009. Archived from the original on 2 October 2012. Retrieved 7 April 2009.
- ↑ "Take a break!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 August 2005. http://timesofindia.indiatimes.com/ahmedabad-times/take-a-break/articleshow/1197252.cms.
- ↑ "Aamir is 25 times more famous than me: Rahul". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 June 2006. http://timesofindia.indiatimes.com/calcutta-times/aamir-is-25-times-more-famous-than-me-rahul/articleshow/1621178.cms.
- ↑ "Tariq Ansari, Mid Day's MD: I Never Closed the Door on Anyone". http://business.in.com/interview/exit-interview/tariq-ansari-mid-days-md-i-never-closed-the-door-on-anyone/14272/1.
- ↑ "Anuradha Ansari". IMDb. Retrieved 20 May 2011.
- ↑ "Rahul Bose's last relationship was seven years ago, says 'would love to be in love'". Hindustan Times. 15 March 2022.

