உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டிங் ஹில் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாட்டிங் ஹில்
A poster with a large picture of a woman shaded blue on it is stuck to a wall. A man walks in front of it.
படவெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்ரோஜர் மைக்கேல்
தயாரிப்புடன்கேன் கென்வொர்த்தி
கதைஇரிச்சர்ட் கர்ட்டிஸ்
இசைடிரெவோர் ஜோன்ஸ்
நடிப்பு
  • ஜூலியா ராபர்ட்ஸ்
  • ஹக் கிராண்ட்
  • ஹக் போன்வில்
  • எம்மா சேம்பர்ஸ்
  • ஜேம்ஸ் டெரிபஸ்
  • ரைஸ் இஃபான்ஸ்
  • டிம் மெக்இன்னர்னி
  • ஜினா மெக்கீ
ஒளிப்பதிவுமைக்கேல் கல்டெர்
படத்தொகுப்புநிக் மோர்
கலையகம்
  • பாலிகிராம் பிலிம்டு என்டர்டெயின்மென்ட்
  • வொர்க்கிங் டைட்டில் பிலிம்ஸ்
விநியோகம்
  • யுனிவர்சல் ஸ்டுடியோஸ் (தேர்தெடுக்கப்பட்ட இடங்கள் மட்டும்)
  • பாலிகிராம் பிலிம்டு என்டர்டெயின்மென்ட் (வெளிநாடுகள்)
வெளியீடு21 மே 1999 (1999-05-21)(ஐக்கிய இராச்சியம்)
28 மே 1999 (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$42 மில்லியன்
மொத்த வருவாய்$363.8 மில்லியன்

நாட்டிங் ஹில் (Notting Hill) டன்கேன் கென்வொர்த்தி என்பவரால் தயாரிக்கப்பட்டு, ரோஜர் மைக்கேல் என்பவரால் இயக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்தின் திரைக்கதையை இரிச்சர்ட் கர்ட்டிஸ் எழுதியுள்ளார். இதில் ஜூலியா ராபர்ட்ஸ் மற்றும் ஹக் கிராண்ட் ஆகியோர் நடித்துள்ளனர். ரைஸ் இஃபான்ஸ், எம்மா சேம்பர்ஸ், டிம் மெக்இன்னர்னி, ஜினா மெக்கீ மற்றும் ஹக் போன்வில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். கதை ஒரு பிரிட்டிஷ் புத்தகக் கடை வைத்திருப்பவருக்கும் (கிராண்ட்) இலண்டனின் நாட்டிங் ஹில் மாவட்டத்திலுள்ள தனது கடைக்குள் நடந்து செல்லும் ஒரு புகழ்பெற்ற அமெரிக்க நடிகைக்கும் (ராபர்ட்ஸ்) இடையிலான காதல் பற்றியது. இப்படம் இலண்டனில் உள்ள நாட்டிங் ஹில்லில் எடுக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

இத்திரைப்படம் விமர்சகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதுவரை வெளிவந்த பிரித்தானிய படங்களிலேயே மிக அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்ததற்காக அனைவராலும் பாராட்டப்பட்டது. இத்திரைப்படம் பாஃப்தா (BAFTA) விருதை வென்றதுடன், இரண்டு சிறப்பு விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டது. 57 ஆவது கோல்டன் குளோபல் விருதுகளில் நாட்டிங் ஹில் திரைப்படம் பிரித்தானிய நகைச்சுவை விருது மற்றும் ஒலிப்பதிவிற்கான பிரிட் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

தயாரிப்பு

[தொகு]

இரிச்சர்ட் கர்ட்டிஸ் இத்திரைப்படக் கதையை இரவு நேரத்தில் படுத்திருக்கும்போது தோன்றிய சிந்தனையில் இருந்து வளர்த்தெடுத்தார். இவர் இக்கதைக்கான ஆரம்பத்திட்டம் குறித்து விவரிக்கையில், “இந்த சிந்தனையானது ஒரு சாதாரண மனிதன் உச்சகட்ட புகழ்வாய்ந்த ஒரு நபருடன் சேர்ந்து வெளியே சென்று வருவது என்பதும் மற்றும் அது அவனது வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலிருந்தும் தோன்றியதாகும்” என்கின்றார்.[2] கர்ட்டிஸ் நாட்டிங் ஹில் பகுதியை குறித்து நன்கு அறிந்திருந்ததால் அப்பகுதியை படப்பிடிப்பு நடத்துவதற்காகத் தேர்ந்தெடுத்தார்.மிகுந்த மக்கள்தொகை நிறைந்த இப்பகுதியில் படத்தை எடுப்பது தயாரிப்பாளருக்கு மிகுந்த சிக்கலாக அமைந்தது. கென்வொர்த்தி குறிப்பிடுகையில் ”முதலில் இதற்காக, பெரிய அளவில் இது போன்று புறத்தோற்றம் கொண்ட போலி தளத்தை கட்டமைக்க எண்ணினோம். அவ்வகையில் நாங்கள் மிகுந்த கட்டுப்பாடுடன் இருந்தோம், ஏனெனில் ராபர்ட்ஸ் மற்றும் கிராண்ட் ஆகியோர் பொது வீதிகளுக்கு வந்தால் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்துவிடுவார்கள் என்பது குறித்து நாங்கள் கவலை கொண்டோம்." எனக் குறிப்பிடுகின்றார். இறுதியில் அவர்கள் எவ்வகையில் இடர் வந்தாலும் படப்பிடிப்பை உண்மையான வீதிகளிலேயே நடத்த முடிவெடுத்தனர். [3] படத்தைப் போலவே, கர்டிஸின் நண்பர் ஒரு பிரபலமானவரை ஒரு கடையில் (ஹாரோட்ஸ்) சந்தித்து வந்த ஒரு சாதாரண நபராக இருந்தார். இறுதியில் இவர்கள் ஒரு உறவில் ஈடுபட்டனர்..[4]

இந்த படம் "90 களின் இலண்டன்-செட் பதிப்பான ரோமன் ஹாலிடே" என்ற படத்துடன் ஒப்பிடப்பட்டது.[5] இருப்பினும், 1953 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தை தான் பார்க்கவில்லை என்று கர்ட்டிஸ் கூறினார்.[6]

ஒலிப்பதிவு

[தொகு]

இத்திரைப்படத்தின் இசையானது டிரவோர் ஜோன்ஸ் அவர்களால் அமைக்கப்பெற்றது.[7] பிறகலைஞர்களால் இயற்றப்பெற்ற சில கூடுதல் பாடல்களும் திரைப்படத்தின் ஒலிப்பதிவில் இடம்பெற்றுள்ளது. இவற்றில் எல்விஸ் காஸ்டிலோவின் சார்லஸ் அஸ்னாவோரின் பாடலான ”ஷி”, ஷானிய ட்வாய்னின் ”யூ ஹேவ் காட் எ வே” இன் மறுகலப்பிசை வகையும், அதைப் போன்றே ரோனன் கேட்டிங்கின் ”வென் யூ சே நத்திங் அட் ஆல்” என்கிற பிரித்தானிய பட்டியலில் முதல் இடத்தை பிடித்த பாடலும் உள்ளடங்கும். அமெரிக்கா அல்லாத பிறநாட்டு வெளியீடுகளில் பாடலின் இரு வகைகளும் இடம்பெற்றுள்ளது.

வெளியீடு

[தொகு]

இந்த படம் ஓடியோன் லெய்செஸ்டர் சதுக்கத்தில் 27 ஏப்ரல் 1999 அன்று திரையிடப்பட்டது.[8] இங்கிலாந்தில் 21 மே 1999 அன்று வெளியிடப்பட்டது. இதற்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் திரையிடப்பட்டது.

விருதுகளும் மற்றும் பரிந்துரைகளும்

[தொகு]

2000 ஆம் ஆண்டு பாஃப்டா விருதுகளில் நாட்டிங் ஹில் மிகவும் பிரபலமான படத்திற்கான பார்வையாளர் விருதை வென்றது.[9] மேலும் இந்த ஆண்டின் சிறந்த பிரித்தானியத் திரைப்படத்திற்கான அலெக்சாண்டர் கோர்டா விருது, மற்றும் இரைஸ் இஃபான்ஸுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது.[10] இது பிரித்தானிய நகைச்சுவை விருதுகளில் சிறந்த நகைச்சுவை திரைப்படத்தை வென்றது.[11] இதன் ஒலிப்பதிவு 2000 பிரிட் விருதுகளில் சிறந்த ஒலிப்பதிவை வென்றது.[12] இது எம்பயர் விருதுகளில் சிறந்த பிரித்தானியப் படம், ரோஜர் மைக்கேலுக்கு சிறந்த பிரித்தானிய இயக்குனர் மற்றும் ஹக் கிராண்டிற்கு சிறந்த பிரித்தானிய நடிகர் ஆகிய விருதுகளை வென்றது.[13] சிறந்த நகைச்சுவை/இசை, சிறந்த திரைப்பட நடிகர்-நகைச்சுவை, இசை ஹக் கிராண்ட், மற்றும் சிறந்த திரைப்பட நடிகை-நகைச்சுவை/இசை ஜூலியா ராபர்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் கோல்டன் குளோப் விருதுகளில் மூன்று பரிந்துரைகளைப் பெற்றது.[14]   

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Notting Hill". American Film Institute. Retrieved 17 July 2018.
  2. "Behind-the-Scenes". Notting Hill.com. Archived from the original on 2008-01-17. Retrieved 22 May 2007.
  3. GQ (2018-06-29), Hugh Grant Reviews His Most Iconic Movie Roles | GQ, retrieved 2018-07-22
  4. "21 of the Most Charming Secrets About Notting Hill You Could Imagine". E! Online. 2021-05-28. Retrieved 2021-06-11.
  5. Elley, Derek (1999-04-30). "Notting Hill". Variety (in ஆங்கிலம்). Retrieved 2020-06-29.
  6. King, Susan (2019-05-28). "'Notting Hill' at 20: Why Julia Roberts Was the Only Choice to Play Anna". Variety (in ஆங்கிலம்). Retrieved 2020-06-29.
  7. "Notting Hill". Filmtracks.com. Archived from the original on 16 May 2007. Retrieved 23 May 2007.
  8. "Notting Hill premieres in Leicester Square". BBC News Online. 27 April 1999. http://news.bbc.co.uk/1/hi/entertainment/329426.stm. 
  9. "2000 British Academy of Film and Television Awards". infoplease.com. Retrieved 22 May 2007.
  10. "Bafta nominations in full". BBC News Online. 1 March 2000. http://news.bbc.co.uk/1/hi/entertainment/662167.stm. 
  11. "The Past Winners 1999". British Comedy Awards. Archived from the original on 26 October 2010. Retrieved 22 May 2007.
  12. "Brits 2000: The winners". BBC News Online. 3 March 2000. http://news.bbc.co.uk/1/hi/in_depth/entertainment/2000/brit_awards/625884.stm. 
  13. "What are they doing?". British Theatre Guide. 20 February 2000. Archived from the original on 6 June 2007. Retrieved 21 May 2007.
  14. "Notting Hill". TheGoldenGlobes.com. Archived from the original on 17 October 2007. Retrieved 22 May 2007.

வெளி இணைப்புகள்

[தொகு]