ரமா கோவிந்தராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரமா கோவிந்தராஜன்
பிறப்பு
வதிவுபெங்களூர்
குடியுரிமைஇந்தியன்
தேசியம்இந்தியன்
Alma materஇந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி
டிரெக்செல் பல்கலைக்கழகம்
இந்திய அறிவியல் கழகம்
துறை ஆலோசகர்ரோடம் நரசிம்மான

ரமா கோவிந்தராஜன் (Rama Govindarajan) பாய்ம இயக்கவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்திய விஞ்ஞானி ஆவார். இவர் முன்னதாக, 1998-2012 முதல் வரை உள்ள காலத்தில் ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான மையத்தின் [1] எந்திரவியல் பொறியியல் பிரிவிலு் பின்னர் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். [2] மேலும், 2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பல்துறை அறிவியல் மையத்தில் பணிபுரிந்தார். தற்போது அவர் பெங்களூரு சர்வதேச கருத்தியல் அறிவியல் மையத்தில் (ஐ.சி.டி.எஸ்) பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பேராசிரியர். கோவிந்தராஜன் 2007 ஆம் ஆண்டிற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருதைப் பெற்றவர்.

கல்வி[தொகு]

1984 ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்பக் கழகம் புது தில்லியில் வேதியியல் பொறியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை (பி.டெக்.) வெற்றிகரமாக நிறைவு செய்தார். 1986 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிலடெல்பியாவின் ட்ரெக்செல் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவரது முனைவர் பட்டம் (பி.எச்.டி) ஆய்வறிக்கையானது 1994 ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் கழகம் பெங்களூரில் இருந்து விண்வெளி பொறியியல் என்ற தலைப்பில் செய்யப்பட்டது ஆகும். 1994 ஆம் ஆண்டில் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் வானூர்தியியல் துறையில், முனைவர் ஆராய்ச்சிக்குப் பிந்தைய ஆய்வுப் பணியை மேற்கொண்டார். [3]

தொழில்[தொகு]

பெங்களூரில் உள்ள தேசிய விண்வெளி ஆய்வகங்களின் கணக்கீட்டு மற்றும் தத்துவார்த்த திரவ இயக்கவியல் பிரிவில் அறிவியலாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் 1988 முதல் 1998 வரை ஒரு பத்தாண்டு காலம் அங்கு பணியாற்றினார். மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தில் ஆசிரிய உறுப்பினரான அவர் 1998 மற்றும் 2012 ஆண்டுகளுக்கு இடையில் அந்த நிலையில் பணியாற்றினார். 2012ஆம் ஆண்டு முதல், அவர் பல்துறை அறிவியல் மையத்தில் பேராசிரியராக இருந்தார். அவர் திரவ இயற்பியலின் நிபுணத்துவம் வாய்ந்த துறையில் ஏராளமான தொழில்நுட்ப ஆவணங்களை வெளியிட்டுள்ளார், மேலும் ஒரு சில புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். [3] அவரது முக்கிய ஆராய்ச்சி ஆர்வங்கள் உறுதியற்ற தன்மை மற்றும் வெட்டு பாய்வுகளின் கொந்தளிப்பு, இடைமுக ஓட்டங்களின் இயற்பியல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. [4] [5]

விருதுகள்[தொகு]

இதுவரை அவர் பெற்ற பல விருதுகளில், மிகவும் குறிப்பிடத்தக்க விருதானது 2007 ஆம் ஆண்டிற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது ஆகும். "வெட்டு மற்றும் இணையாக இல்லாத ஓட்டங்கள், ஓட்டம் நுழைவு, கொந்தளிப்பான மாற்றம் மற்றும் சிறிய- அளவிலான ஹைட்ராலிக் தாவல்கள் ". 1987 ஆம் ஆண்டின் இளம் விஞ்ஞானி விருதும், தேசிய விண்வெளி ஆய்வகங்களால் வழங்கப்பட்ட 1996 ஆம் ஆண்டின் சிறந்த விஞ்ஞானி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு சி.என்.ஆர்.ராவ் ஓரேஷன் விருதை ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர் பெங்களூரில் பெற்றார். [6]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமா_கோவிந்தராஜன்&oldid=3046106" இருந்து மீள்விக்கப்பட்டது