மௌரீன் மாழ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மௌரீன் மாழ்சி
Maurren Maggi2.jpg
தனிநபர் தகவல்
பிறப்புசூன் 25, 1976 (1976-06-25) (அகவை 43)
உயரம்1.73 m (5 ft 8 in)
எடை61 kg (134 lb)
விளையாட்டு
நாடு பிரேசில்
விளையாட்டுமகளிர் தடகள விளையாட்டு
நிகழ்வு(கள்)நீளம் தாண்டுதல்

மௌரீன் ஈகா மாழ்சி (Maurren Higa Maggi, பிறப்பு: சான் கார்லோசில் சூன் 25, 1976) பிராசிலிய தடகள விளையாட்டாளரும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரும் ஆவார். 100 மீட்டர் தடை தாண்டுதலிலும் நீளம் தாண்டுதலிலும் தென் அமெரிக்க சாதனையாளராகத் திகழ்கிறார்; முன்னதில் 12.71 வினாடிகளும் பின்னதில் 7.26 மீட்டர்களும் இவரது சாதனையாக நிற்கின்றது. தவிரவும் மும்முறை தாண்டுதலில் இவரது சிறந்த தொலைவான 14.53 மீட்டர்கள் முன்னாள் தென் அமெரிக்க சாதனையாக இருந்தது. ஒரு தனிநபர் போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற முதல் பிராசிலியப் பெண்ணாக இவர் விளங்குகின்றார்.[1]

2003இல் மௌரீன் மருந்தேற்றல் சர்ச்சையில் சிக்கினார்; இவரது மாதிரிச் சான்றில் குளோசுடெபால் என்ற தடை செய்யப்பட்ட மருந்தின் எச்சம் கண்டறியப்பட்டது. தான் பயன்படுத்திய வடுநீக்கு களிம்பில் இது இருந்திருக்கலாம் எனக் கூறினார். மௌரீன் இதற்காக போட்டிகளிலிருந்து இரண்டாண்டுகள் தடை செய்யப்பட்டார். இதனால் 2003ஆம் ஆண்டு நடந்த பான் அமெரிக்கன் விளையாட்டுக்களில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. கருவுற்றதால் 2004ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கலந்து கொள்ளவில்லை.[2]

2009ஆம் ஆண்டில் கெய்லா கோஸ்டாவில் நடந்த பிரேசிலின் தேசிய விளையாட்டுக்களில் இரண்டாவதாக வந்தார்; 1998க்குப் பிறகு வெற்றிபெறாதது இதுவே முதல் முறையாகும்.[3]

மௌரீன் சக விளையாட்டாளர் அன்டோனியோ பிசோனியாவைத் திருமணம் புரிந்துள்ளார்; இவர்களுக்கு சோபியா என்ற மகள் உள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌரீன்_மாழ்சி&oldid=2718341" இருந்து மீள்விக்கப்பட்டது