மௌரீன் மாழ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மௌரீன் மாழ்சி
தனிநபர் தகவல்
பிறப்புசூன் 25, 1976 (1976-06-25) (அகவை 47)
உயரம்1.73 m (5 அடி 8 அங்)
எடை61 kg (134 lb)
விளையாட்டு
நாடு பிரேசில்
விளையாட்டுமகளிர் தடகள விளையாட்டு
நிகழ்வு(கள்)நீளம் தாண்டுதல்
பதக்கத் தகவல்கள்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2008 பெய்ஜிங் நீளம் தாண்டுதல்
உலக உள்ளரங்க போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2008 வாலேன்சியா நீளம் தாண்டுதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2003 பர்மிங்காம் நீளம் தாண்டுதல்
பான் அமெரிக்கன் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1999 வினிப்பெக் நீளம் தாண்டுதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2007 இரியோ டி செனீரோ நீளம் தாண்டுதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2011 குவாதலஹாரா நீளம் தாண்டுதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1999 வினிப்பெக் 100 மீ தடை தாண்டுதல்
பல்கலைக்கழகங்களிடை விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2001 பெய்ஜிங் நீளம் தாண்டுதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2001 பெய்ஜிங் 100 மீ தடை தாண்டுதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1999 மயோர்க்கா நீளம் தாண்டுதல்

மௌரீன் ஈகா மாழ்சி (Maurren Higa Maggi, பிறப்பு: சான் கார்லோசில் சூன் 25, 1976) பிராசிலிய தடகள விளையாட்டாளரும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரும் ஆவார். 100 மீட்டர் தடை தாண்டுதலிலும் நீளம் தாண்டுதலிலும் தென் அமெரிக்க சாதனையாளராகத் திகழ்கிறார்; முன்னதில் 12.71 வினாடிகளும் பின்னதில் 7.26 மீட்டர்களும் இவரது சாதனையாக நிற்கின்றது. தவிரவும் மும்முறை தாண்டுதலில் இவரது சிறந்த தொலைவான 14.53 மீட்டர்கள் முன்னாள் தென் அமெரிக்க சாதனையாக இருந்தது. ஒரு தனிநபர் போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற முதல் பிராசிலியப் பெண்ணாக இவர் விளங்குகின்றார்.[1]

2003இல் மௌரீன் மருந்தேற்றல் சர்ச்சையில் சிக்கினார்; இவரது மாதிரிச் சான்றில் குளோசுடெபால் என்ற தடை செய்யப்பட்ட மருந்தின் எச்சம் கண்டறியப்பட்டது. தான் பயன்படுத்திய வடுநீக்கு களிம்பில் இது இருந்திருக்கலாம் எனக் கூறினார். மௌரீன் இதற்காக போட்டிகளிலிருந்து இரண்டாண்டுகள் தடை செய்யப்பட்டார். இதனால் 2003ஆம் ஆண்டு நடந்த பான் அமெரிக்கன் விளையாட்டுக்களில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. கருவுற்றதால் 2004ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கலந்து கொள்ளவில்லை.[2]

2009ஆம் ஆண்டில் கெய்லா கோஸ்டாவில் நடந்த பிரேசிலின் தேசிய விளையாட்டுக்களில் இரண்டாவதாக வந்தார்; 1998க்குப் பிறகு வெற்றிபெறாதது இதுவே முதல் முறையாகும்.[3]

மௌரீன் சக விளையாட்டாளர் அன்டோனியோ பிசோனியாவைத் திருமணம் புரிந்துள்ளார்; இவர்களுக்கு சோபியா என்ற மகள் உள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌரீன்_மாழ்சி&oldid=3226098" இலிருந்து மீள்விக்கப்பட்டது