மை நேம் ஈஸ் லோ கிவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மை நேம் ஈஸ் லோ கிவான்
இயக்கம்கிம் கீ-ஜின்
தயாரிப்புஜங் யூன்-யங்
திரைக்கதைகிம் கீ-ஜின்
நடிப்பு
ஒளிப்பதிவுலிம் வோன்-கன்
கலையகம்
  • யோங் பிலிம்
  • ஹை சியூம் ஸ்டுடியோ
விநியோகம்நெற்ஃபிளிக்சு
வெளியீடுமார்ச்சு 1, 2024 (2024-03-01)(தென் கொரியா)
ஓட்டம்133 நிமிடங்கள்[1]
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி

மை நேம் ஈஸ் லோ கிவான் ( My Name Is Loh Kiwan ) என்பது 2024 ஆம் ஆண்டு வெளிவந்த தென் கொரிய நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை கிம் ஹீ-ஜின் எழுதி இயக்கியுள்ளார். சாங் ஜூங்-கி மற்றும் சோய் சுங்-யூன் ஆகியோர் நடித்துள்ளனர். 2019 இல் வெளியிடப்பட்ட எழுத்தாளர் சோ ஹே-ஜின் எழுதிய ஐ மெட் லோ கிவான் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்திற்குத் தனியாகப் பயணம் செய்யும் வட கொரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரின் கதையை படம் சொல்கிறது.[2] இது மார்ச் 1, 2024 அன்று நெற்ஃபிளிக்சில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

கதைச் சுருக்கம்[தொகு]

பெல்ஜியத்தில் அகதியாக இருக்க ஒப்புதல் பெற தீவிரமாக முயற்சிக்கும் வட கொரிய நாட்டைச் சேர்ந்த லோ கிவான் (சாங் ஜூங்-கி) மற்றும் கொரிய-பெல்ஜியத்தைச் சேர்ந்த வாழும் விருப்பத்தை இழந்துவிட்ட முன்னாள் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான மரி (சோய் சுங்-யூன்) மற்றும் சுற்றி கதை நகர்கிறது.[3]

துணை நடிகர்கள்[தொகு]

  • கிவானின் தாயாக கிம் சுங்-ரியுங்.[4]
  • மரியின் தந்தையாக ஜோ ஆன் சுல்.[5]
  • மரியின் தாயராக லீ ல-வா.[4]
  • கிவான் தொழிற்சாலையில் சந்திக்கும் கொரிய-சீனராக லீ சங் ஹீ.[4]
  • கிவானின் தாய் மாமாவாக சியோ ஹியூன்-வூ.[4]
  • பெல்ஜியம், மதுபான கடை உரிமையாளராக வால் செர்சியூப்[6]

தயாரிப்பு[தொகு]

பிப்ரவரி 8, 2023 அன்று, சாங் ஜூங்-கி, சோய் சுங்-யூன், ஜோ ஹான்-சுல், கிம் சுங்-ரியுங், லீ இல்-ஹ்வா, லீ சாங்-ஹீ, சியோ ஹியூன்-வூ ஆகியோரின் நடிப்பில் படத்தின் தயாரிப்பை நெற்ஃபிளிக்சு உறுதிப்படுத்தியது.[7]

பிப்ரவரி 24, 2023 அன்று, அங்கேரியில் படப்பிடிப்பு தொடங்கியதைக் காட்டும் புகைப்படத்தை சாங் ஜூங்-கி வெளியிட்டார்..[8]

வெளியீடு[தொகு]

இந்தப் படம் மார்ச் 1, 2024 அன்று பிரத்தியேகமாக நெற்ஃபிளிக்சில் வெளியிடப்பட்டது.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "My Name Is Loh Kiwan Cast, News, Videos and more". Tudum by Netflix. பார்க்கப்பட்ட நாள் March 1, 2024.
  2. Kim, Da-sol (February 7, 2023). "Song Joong-ki to play North Korean defector in Netflix film 'My Name is Loh Kiwan'". The Korea Herald. பார்க்கப்பட்ட நாள் February 1, 2024.
  3. Cho, Yong-jun (February 8, 2023). "Cast members announced for Netflix film 'My Name is Loh Kiwan'". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் February 1, 2024.
  4. 4.0 4.1 4.2 4.3 Kim, Na-yeon (February 7, 2023). '재혼' 송중기, 탈북자 변신..'로기완' 캐스팅 라인업 공개 [공식] ['Remarriage' Song Joong-ki transforms into a North Korean defector..'Loh Kiwan' casting lineup revealed [Official]] (in கொரியன்). Star News. பார்க்கப்பட்ட நாள் February 7, 2023 – via Naver.
  5. Kang, Hyo-jin (January 4, 2023). [단독]조한철, 영화 '로기완' 합류...'재벌집' 송중기와 초고속 재회 [[Exclusive] Jo Han-chul joins the movie 'Loh Kiwan'...'Conglomerate house' Song Joong-ki reunion at high speed] (in கொரியன்). SPOTV News. Archived from the original on January 4, 2023. பார்க்கப்பட்ட நாள் January 4, 2023 – via Naver.
  6. Lee, Se-bin (February 12, 2024). 조한철·김성령→이일화...빈틈없다 '로기완' [Jo Han-chul, Kim Sung-ryung→Lee Il-hwa...seamless 'Loh Kiwan'] (in கொரியன்). Ilgan Sports. பார்க்கப்பட்ட நாள் February 12, 2024 – via Naver.
  7. Cho, Yong-jun (February 8, 2023). "Cast members announced for Netflix film 'My Name is Loh Kiwan'". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் February 1, 2024.
  8. Kang, Min-kyung (February 24, 2023). '예비 아빠' 송중기, ♥케이티와 함께 헝가리 가더니...'로기완' 촬영 시작 ['Expectant dad' Song Joong-ki went to Hungary with ♥Katy...and start filming 'My Name is Loh Kiwan']. Ten Asia (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் February 1, 2024.
  9. Oh, Bo-ram (February 1, 2024). 송중기 탈북자 연기한 영화 '로기완' 3월 1일 넷플릭스 공개 [Song Joong-ki's North Korean Defector Plays in the Movie 'Ro Ki Wan' Premieres on Netflix on March 1]. Yonhap News Agency (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் February 1, 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மை_நேம்_ஈஸ்_லோ_கிவான்&oldid=3904898" இலிருந்து மீள்விக்கப்பட்டது