உள்ளடக்கத்துக்குச் செல்

மே 2015 நேபாள நிலநடுக்கம்

ஆள்கூறுகள்: 27°50′13″N 86°04′37″E / 27.837°N 86.077°E / 27.837; 86.077
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மே 2015 நேபாள நிலநடுக்கம்
மே 2015 நேபாள நிலநடுக்கம் is located in நேபாளம்
மே 2015 நேபாள நிலநடுக்கம்
Kathmandu
Kathmandu
நிலநடுக்க அளவு7.3 Mw[1]
ஆழம்18.5 கி.மீ (11.5 மைல்கள்)
நிலநடுக்க மையம்27°50′13″N 86°04′37″E / 27.837°N 86.077°E / 27.837; 86.077[1]
வகைThrust[1]
பாதிக்கப்பட்ட பகுதிகள்
அதிகபட்ச செறிவுVIII (Severe)[1]
பின்னதிர்வுகள்5.7Mw on 2015-05-16 11:34:10 (UTC)[4][5]
உயிரிழப்புகள்218 இறப்புகள்
3,500+ காயமடைந்தோர்
2015 நேபாள நிலநடுக்கத்தின் பின்னதிர்வுகள்

நேபாளத்தில் 2015 மே 12 அன்று நேபாள நேரம் பிற்பகல்  12:50(07:05 உலக நேரக் குறியீடு) 7.3 உந்தத்திறன் ஒப்பளவு மதிப்பிலான நிலநடுக்கம் கோடாரியின் தென்கிழக்கில் 18 கிலோமீட்டர் (11 மைல்கள்) தொலைவில் ஏற்பட்டது. தோல்கா மாவட்டம் மற்றும் சிந்துபால்சோக் மாவட்டம் ஆகியவற்றின் எல்லைப்புறத்தில் இந்த நிலநடுக்கத்தின் நிலநடுக்க மையம் அமைந்திருந்தது.  இந்த நிலநடுக்கம் இதே ஆண்டு 25 ஏப்ரல் எற்பட்ட 7.8 உந்தத்திறன் ஒப்பளவு மதிப்பிற்கு அடுத்தபடியான அளவிலானதாகவும் முந்தைய நிலநடுக்க மையத்திற்கு இன்னும் கிழக்குத்திசையிலும் இருந்தது.[1] உண்மையில் இது ஏப்ரல் 25 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னதிர்வாகவே கருதப்பட்டது.  இந்த நடுக்கமானது 18.5 கிலோமீட்டர் (11.5 மைல்கள்) ஆழத்தில் உணரப்பட்டதாகும். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இந்தியாவின் பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடபகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன.[6] நிலநடுக்க மையத்திலிருந்து சற்றேழத்தாழ 2.400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னை வரையிலும் மிக இலேசான அதிர்வுகள் உணரப்பட்டன.[7][8]

சில நிமிடங்களுக்குப் பிறகு நேபாளில் மற்றொரு 6.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. காத்மாண்டுக்கு கிழக்கே உள்ள ராமேச்சாப் எனுமிடத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கமானது வங்காளதேசம், சீனா மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் உணரப்பட்டது.[9] இந்த நில அதிர்வுகளின் தாக்கம் 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் கூட உணரப்பட்டது. அங்குள்ள கட்டிடங்கள் உலுக்கப்பட்டு, அலுவலக ஊழியர்கள் வெளியேற்றப்படும் அளவிற்கு இதன் தாக்கம் இருந்தது.[10]

சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள்

[தொகு]

25 ஏப்ரலில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர், பொதுமக்களில் பலர் திறந்த வெளிகளில் வாழ்ந்து கொண்டிருந்ததால், இன்னும் பெரும் பீதி ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் போது கண்ணால் பார்த்த சாட்சி ஒருவர் பின்வருமாறு சொல்கிறார். "முதல் ஐந்து நொடிகளில் அங்கு முழுமையான அமைதி நிலவியது. ஆறாவது நொடியிலிருந்து ஒவ்வொருவரும் அலறத் தொடங்கினர்" "அது உண்மையிலேயே மிகவும் தீவிரமானதாக இருந்தது. நடுக்கங்கள் நின்ற பின்னரும் கூட மக்கள் அலறிக்கொண்டேயிருந்தனர்". இந்த முறை நடுக்கமானது, புதிய நிலச்சரிவுகளை ஏற்படுத்தியதோடு, முதல் நிலநடுக்கத்தில் தப்பிப்பிழைத்திருந்த கட்டிடங்களை இடிபாடடையவும் செய்தது. நேபாளத்தில், முக்கியமாக, வடகிழக்கு மலைப்பகுதிகளில், குறைந்தபட்சம் 153 பேர் நிலநடுக்கத்தால் கொல்லப்பட்டனர் மற்றும் 3,200 பேர் காயமடைந்தனர். மே 15 அன்றைய நிலையில், 1,700 பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். நாட்டின் 75 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் நிலநடுக்கத்தின் பாதிப்புக்குள்ளாயிருந்தன. காத்மாண்டுவில், மக்கள் கட்டிடங்களில் இருந்து தப்பி ஓடி தெருக்களில் விரைவாக நிரம்பினார்கள். நிலநடுக்கம் தொடங்கிய ஒரு மணிநேரத்திற்குள், நகரின் திறந்த பகுதிகளை கூடாரங்கள் நிரப்பத் தொடங்கின. மக்கள் தங்கள் வீடுகளுக்குள் திரும்பச் செல்ல அஞ்சினர். 2015 ஏப்ரல் நிலநடுக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட சிந்துபால்செளக் மாவட்டமானது மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. இந்த இரண்டு நிலநடுக்கங்களாலும், 95% வீடுகள் அழிக்கப்பட்டன. எவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றிய பகுதிகளிலும் கூட புதிய பாதிப்புகள் ஏற்பட்டன. இந்தியாவில் மக்கள் தங்கள் வீடுகளுக்கும் பணியிடங்களுக்கும் இடையே விரைந்து இயங்க முயற்சித்த காரணத்தால் புது தில்லி மெட்ரோ இரயில் சேவை மிகப்பெரும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இந்தியாவில் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக குறைந்தபட்சம் 17 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். இவற்றில் பீகார் மாநிலத்தில் 16 இறப்புகளும், உத்தரப் பிரதேசத்தில் 1 இறப்பும் நேரிட்டது. சீனாவின் திபெத் பகுதியில் மகிழ்வுந்தின் மீது உருண்டு வந்த பாறை தாக்கியதன் காரணமாக ஒரு பெண் இறந்தார். பேரிடர் மீட்பு நடவடிக்கைக்காக வந்திருந்த அமெரிக்க இராணுவ உலங்கூர்தி (யுஎச்-1 ஹுவே) ஆறு அமெரிக்க கடற்படை வீரர்கள் மற்றும் இரண்டு நேபாள இராணுவ வீரர்கள் ஆகியோரோடு மத்திய நேபாளத்தில் நடந்த ஒரு மீட்பு நடவடிக்கையின் போது காணாமல் போனது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "M7.3 - 18km SE of Kodari, Nepal". USGS Earthquake Hazards Program.
  2. 2.0 2.1 2.2 "Fresh earthquake kills scores in Nepal and India". Yahoo News. 12 May 2015. பார்க்கப்பட்ட நாள் 13 May 2015.
  3. Greg Botelho and Jethro Mullen, CNN (12 May 2015). "Another Nepal earthquake: Deaths in 3 nations - CNN.com". CNN. பார்க்கப்பட்ட நாள் 13 May 2015. {{cite web}}: |author= has generic name (help)
  4. "M5.7 - 24km N of Ramechhap, Nepal". usgs.gov. பார்க்கப்பட்ட நாள் 17 May 2015.
  5. "Mild tremors in Bihar as 5.7 magnitude earthquake hits Nepal". The Indian Express. 16 May 2015. பார்க்கப்பட்ட நாள் 17 May 2015.
  6. "7.3 Magnitude Earthquake hits North India including Bihar". news.biharprabha.com. 12 May 2015. http://news.biharprabha.com/2015/05/7-3-magnitude-earthquake-hits-north-india-including-bihar/. பார்த்த நாள்: 12 May 2015. 
  7. "Mild tremors in Chennai too". The Hindu. 12 May 2015. http://www.thehindu.com/news/cities/chennai/mild-tremors-in-chennai-as-an-aftershock-from-earthquake-in-nepal/article7197453.ece. 
  8. "Ttremors felt in Chennai". Times of India. 12 May 2015. http://timesofindia.indiatimes.com/india/Tremors-felt-in-Chennai/articleshow/47246205.cms. 
  9. "Nepal earthquake, magnitude 7.3, strikes near Everest". BBC News. 12 May 2015.
  10. "Nepal Earthquake on 12 May 2015: Magnitude, Epicenter, Damages and Relief Operations". Ventuno/AFP. news.biharprabha.com. 12 May 2015. http://news.biharprabha.com/2015/05/nepal-earthquake-on-12-may-2015-magnitude-epicenter-damages-and-relief-operations/. பார்த்த நாள்: 12 May 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மே_2015_நேபாள_நிலநடுக்கம்&oldid=2599636" இலிருந்து மீள்விக்கப்பட்டது