மேலாநெல்லி
மேலாநெல்லி | |
---|---|
![]() | |
மேலாநெல்லியின் இலைகள், பூக்கள், காய்கள் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Phyllanthus |
இனம்: | Template:Taxonomy/PhyllanthusP. tenellus
|
இருசொற் பெயரீடு | |
Phyllanthus tenellus Roxb.[1] | |
வேறு பெயர்கள் [2] | |
|
மேலாநெல்லி (Phyllanthus tenellus) என்பது ஃபிலாந்தேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூலிகைத் தாவரமாகும். இது பொதுவாக மஸ்கரேன் தீவு இலைப் பூ [1] என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது மஸ்கரீன் தீவுகளைச் சேர்ந்தது.[3] இது பெரும்பாலும் மலர் படுக்கைகள், தோட்டங்கள், சாலையோரங்கள் உள்ளிட்ட பிற பகுதிகளில் ஒரு களையாக உள்ளது. [3]
விளக்கம்
[தொகு]இது 20-50 செமீ (7.9-19.7 அங்குலம்) உயரம் வரை வளரும். இந்த தாவரத்தின் பிரதான தண்டு இலைகளைக் கொண்டிருக்காது. ஆனால் சிறிய செதில்களைக் கொண்டிருக்கும். மேலும் இரண்டாம் நிலை தண்டுகளில் பூக்களும், இலைகளும் இருக்கும். [3] இதன் மலர்கள் கண்ணுக்குத் தெரியாத அளவு சிறியவையாக இருக்கும். மேலும் ஒரே பாலினத்தைச் சார்ந்தவை. ஆண் மற்றும் பெண் பூக்கள் ஒரே தாவரத்தில் அமைந்துள்ளன .
வகைபிரித்தல்
[தொகு]இது குறித்த விளக்கம் முதலில் வில்லியம் ராக்ஸ்பர்க்கின் 1814 ஹோர்டஸ் பெங்காலிசிஸில் வெளியிடப்பட்டது. [4] பின்னர் அவரது 1832 ஃப்ளோரா இண்டிகாவில் உறுதிசெய்யப்பட்டது. [5] [6]
இதில் இரண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இரகங்கள் உள்ளன: [2][7]
- Phyllanthus tenellus var. arabicus ( யெமன், சவூதி அரேபியா ) Müll. Arg.
- Phyllanthus tenellus var. tenellus ( அங்கோலா, கொமொரோசு, மடகாசுகர், மொரிசியசு, மொசாம்பிக், ரீயூனியன், தன்சானியா )
பரவல்
[தொகு]இத்தாவரத்தின் ஒரு இரகமான பி. டெனெல்லஸ் மஸ்கரீன் தீவுகள் தவிர, கிழக்கு ஆப்பிரிக்கா, பிற மேற்கு இந்தியப் பெருங்கடல் தீவுகள் மற்றும் அறபுத் தீபகற்பம் ஆகியவற்றிலும் இருக்கலாம் எனப்படுகிறது. இத்தாவரம் ஆத்திரேலியா, மெக்சிகோ, தென் அமெரிக்கா, கிழக்கு வட அமெரிக்கா (புளோரிடா முதல் வர்சீனியா மேற்கு கலிபோர்னியா வரை), அத்துடன் மத்திய தரைக்கடல் பகுதி, ஆசியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் இயற்கையான களையாக மாறியுள்ளது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Weakley, Alan (2015). Flora of the Southern and Mid-Atlantic States. Chapel Hill North Carolina: The University of North Carolina Herbarium.
- ↑ 2.0 2.1 "Phyllanthus tenellus Roxb". Plants of the World Online. Royal Botanical Gardens Kew. Retrieved 2018-11-02.
- ↑ 3.0 3.1 3.2 3.3 வார்ப்புரு:EFloras
- ↑ Hortus Bengalensis, or a Catalogue of the Plants Growing in the Honourable East India Company's Botanical Garden at Calcutta. Royal Botanic Garden, Calcutta. Retrieved 2018-11-02.
- ↑ Flora Indica; or, Descriptions of Indian Plants. Retrieved 2018-11-02.
- ↑ "Hortus Bengalensis, or a Catalogue of the Plants Growing in the Honourable East India Company's Botanical Garden at Calcutta. Serampore". ipni.org. International Plant Names Index. Retrieved 2018-11-02.
- ↑ "Phyllanthus tenellus Roxb". Global Biodiversity Information Facility. Retrieved 10 July 2021.