மென்உரோம எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மென்உரோம எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மில்லார்டியா
இனம்:
மி. மெல்டடா
இருசொற் பெயரீடு
மில்லார்டியா மெல்டடா
(கிரே, 1837)
வேறு பெயர்கள்
  • கோலுண்டா மெல்டாடா கிரே, 1837
  • மசு கோம்பேரி விராங்டன், 1907
  • மசு லனுகினோசசு எலியாட், 1839
  • மசு லிசுதோனி விராங்டன், 1907
  • ரேட்டசு மெல்டாடா சிற். மெல்டாடா (கிரே, 1837)
  • ரேட்டசு மெல்டாடா சிற். பாலிதோர் (ரைலே, 1914)

மென்உரோம எலி (மில்லார்டியா மெல்டடா), அல்லது மென்உரோமம் வயலெலி, தெற்காசியாவைச் சேர்ந்த முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும்.[2]

விளக்கம்[தொகு]

தலை மற்றும் உடல் நீளம் 13 முதல் 16 செ.மீ. வரையும் வாலின் நீளம் 12 முதல் 14 செ.மீ. வரை வளரக்கூடியது. முதுகானது மஞ்சள் நிறத்திலிருந்து பழுப்பு சாம்பல் நிறத்திலும் கீழ்ப் பகுதியானது வெண்மையாகவும் இருக்கும். வால் உரோமமின்றி காணப்படும். மேற்பகுதி கருப்பு நிறத்திலும் கீழ்ப்பகுதி வெளிறியும் காணப்படும். வயிற்றுபுறம் மெல்லிய அடர்த்தியான குள்ள உரோமங்கள் காணப்படும். பல குட்டையான மீசைகள் காணப்படும். ஆண் எலி அளவில் பெரியவை.

பரவலும் வாழிடமும்[தொகு]

மென்உரோம எலி, இந்தியா, நேபாளம், பாக்கித்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கடல் மட்டத்திலிருந்து 2,670 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல காடுகள் மற்றும் புல்வெளிகளில் வாழ்கிறது. மேலும் நீர்ப்பாசன விளைநிலங்கள் மற்றும் பிற சாகுபடி பகுதிகளையும் இவை பயன்படுத்துகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Molur, S.; Nameer, P.O. (2016). "Millardia meltada". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T13525A115115706. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T13525A22461465.en. http://www.iucnredlist.org/details/13525/0. பார்த்த நாள்: 13 December 2017. 
  2. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1386. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்உரோம_எலி&oldid=3744761" இலிருந்து மீள்விக்கப்பட்டது