முரெக்சு திராபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முரெக்சு திராபா
Murex trapa 01.JPG
முரெக்சு திராபா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: மெல்லுடலி
வகுப்பு: வயிற்றுக்காலி
தரப்படுத்தப்படாத: கிளை கேனோகசுட்ரோபோடா
கிளை கைப்போகேசுட்ரோபோடா
கிளை நியோகேசுட்ரோபோடா
பெருங்குடும்பம்: முரிகோயிடே
குடும்பம்: முரிசிடே
துணைக்குடும்பம்: முரிசினே
பேரினம்: முரெக்சு
இனம்: மு. திராபா
இருசொற் பெயரீடு
முரெக்சு திராபா
உரோடிங், 1798
வேறு பெயர்கள் [1]
 • முரெக்சு திராபா உரோடிங், 1798 · மாற்று பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
 • முரெக்சு டுப்லிகேடசு சென்சு செமின்ட்சு புசிச், 1837 (செல்லாதது: இளைய ஒத்தப்பெயர்) முரெக்சு டுப்லிகேடசு தோனோவன், 1804)
 • முரெக்சு மார்டினினசு ரேவி, 1845
 • முரெக்சு ராரிசுபினா இலமார்க், 1822
 • முரெக்சு யுனீண்டெண்டாடசு சவுர்பை, 1834

முரெக்சு திராபா (Murex trapa), என்பது அரிய-முள் முரெக்சு என அறியப்படுகிறது. இது பெருங்கடல் வயிற்றுக்காலி மெல்லுடலி தொகுதியில் முரிசிடே குடும்பத்தினைச் சார்ந்த பாறை நத்தை ஆகும்.[1]

பரவல்[தொகு]

இந்த இனம் மடகாசுகர் மற்றும் மஸ்கரேன் தீவுகள், தென்கிழக்கு இந்தியா, இலங்கை மற்றும் அந்தமான் கடல் முதல் தெற்கு இந்தோனேசியா, பிலிப்பீன்சு, தைவான் மற்றும் தெற்கு ஜப்பான் வரை பரவலாகக் காணப்படுகின்றது.[2]

வாழிடம்[தொகு]

அடிமட்ட உயிரியான முரெக்சு திராப்பா, மணல் வாழ்விடங்களில் காணப்படுகிறது.

மொரிசியசு முரெக்சு திராபா ஓடு, மியூசியோ சிவிகோ டி ஸ்டோரியா நேச்சுரே டி மிலானோவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

விளக்கம்[தொகு]

முரெக்சு ஓடு 50–124 மில்லிமீட்டர்கள் (2.0–4.9 in) நீளமும் 8–21 மில்லிமீட்டர்கள் (0.31–0.83 in) விட்டமும் கொண்டது.

நடுத்தர அளவில் இரு முனை ஒடுங்கிய அல்லது குவிந்த வடிவிலானவை. பெரிய முள்ளுடன் சுழல் முகடுகளைக் கொண்டது. ஓட்டின் மேற்பரப்பு பொதுவாக வெளிர் பழுப்பு அல்லது நீல-சாம்பல் நிறத்தில் முள்ளில் மஞ்சள்-பழுப்பு நிறமுடையனவாக இருக்கும். உடலில் சுழல், மூன்று சுழல் மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. விழிவில்லைத் துளை, வெண்ணிற உட்புற விளிம்புடன் ஆழ்ந்த சிவப்பு-பழுப்பு நிறத்தில் இருக்கும். வெளிப்புற உதட்டுத் துளை கிரானுலேட்டட்ம் ஆகும். சிபோலால் கால்வாய் நேராகவும் மிதமான நீளமானது (சுமார் 13–47 மிமீ) மூன்று முதல் நான்கு குறுகிய முள்ளெலும்புகள் சைபோனல் கால்வாயின் அடிப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.[3]

உயிரியல்[தொகு]

அரிய-முள்ளெலும்பு முரெக்சு சுறுசுறுப்பாக வேட்டையாடும் விலங்காகும். இவை முக்கியமாக மற்ற மெல்லுடலிகள் மற்றும் சுருள்காலிகளை உணவாக உண்ணுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

முரெக்சு திராபா ஓடு துளை காட்சி
 1. 1.0 1.1 Bouchet, P. (2015). Murex trapa Röding, 1798. In: MolluscaBase (2015). Accessed through: World Register of Marine Species at http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=743629 on 2015-12-23
 2. Sealife Base
 3. "Bio Search". 2017-08-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-05 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

 

நூல் விளக்கம்[தொகு]

 • Cornelis Swennen, Robert Moolenbeek, N. Ruttanadakul - Molluscs of the Southern Gulf of Thailand
 • F. Pinn - Sea Snails of Pondicherry
 • G.E.Radwin - Murex Shells of the World: An Illustrated Guide to the Muricidae
 • Houart R. (2014). Living Muricidae of the world. Muricinae. Murex, Promurex, Haustellum, Bolinus, Vokesimurex and Siratus. Harxheim: ConchBooks. 197 pp.
 • Hsi-Jen Tao - Shells of Taiwan Illustrated in Colour
 • Ngoc-Thach Nguyên - Shells of Vietnam
 • R. Raviche lvan, T. Anandaraj and S. Ramu LENGTH –WEIGHT RELATIONSHIP of Murex trapa and Meretrix meretrix FROM MUTHUPET COASTAL WATERS IN TAMILNADU, INDIA.
 • R. Tucker Abbot - Seashells of South East Asia
 • Ng, T. (2015). Hong Kong Checklist of Marine Species.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரெக்சு_திராபா&oldid=3269734" இருந்து மீள்விக்கப்பட்டது