தமிழர் பருவ காலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முன்பனிக்காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழர் பருவ காலங்கள் என்பது, பண்டைக்காலம் முதல் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பருவகாலப் பிரிவுகளைக் குறிக்கும். தமிழர்கள் ஓர் ஆண்டை கார்காலம், கூதிர்காலம் (குளிர்காலம்), ​முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர்.

  • கார்காலம்: இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசி யை உள்ளடக்கியது.
  • கூதிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகை யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.
  • முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழி, தை யை உள்ளடக்கியது.
  • பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசி, பங்குனி யை உள்ளடக்கியது.
  • இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசி யை உள்ளடக்கியது.
  • முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.

பண்டைத் தமிழ் மக்கள் மாறிமாறி வரும் பருவ காலங்களைக் காலத்தின் மாற்றங்களாக மட்டும் கருதாமல் மக்கள் வாழ்வியலுடனும், அவர்கள் வாழும் நிலத்துடனும் பிணைத்துப் பார்த்தார்கள். தமிழர் நிலப் பிரிவுகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. இதன்படி, முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும், முன்பனிக் காலமும்; மருதத்துக்கும், நெய்தலுக்கும் எல்லாப் பருவகாலங்களும், பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில், முன்பனி ஆகிய காலங்களும் உரியவை.[1]

பெரும் பொழுது[தொகு]

[இரண்டு மாதம் ஒரு பெரும் பொழுதாகும்]

பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்)
பெரும்பொழுது மாதம்
இளவேனிற் காலம் வசந்த காலம் சித்திரை, வைகாசி
முதுவேனிற் காலம் கோடை காலம் ஆனி, ஆடி
கார்காலம் மழை மேகங்களால் சூழ்ந்த காலம் [கார் - மேகம்] ஆவணி, புரட்டாசி
கூதிர்காலம் குளிர் காற்று வீசும் காலம் [கூதிர் - குளிர் காற்று] ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக் காலம் விடியலில் பனி பெய்யும் காலம் மார்கழி, தை
பின்பனிக் காலம் காலையில் பனி பெய்யும் காலம் மாசி, பங்குனி

மேற்கோள்கள்[தொகு]

  1. தொல்காப்பியம் பொருளதிகாரம் 6 - 12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_பருவ_காலங்கள்&oldid=3850749" இலிருந்து மீள்விக்கப்பட்டது