நெய்தல் (திணை)
Jump to navigation
Jump to search
நெய்தல் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. "வருணன் மேய பெருமணல் உலகமும்" எனத் தொல்காப்பியம் இதுபற்றிக் கூறுகிறது.
நெய்தல் மலரில் உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர், நெல்வயலில் பூக்கும் நன்னீர் மலர் என இருவகை உண்டு.
நெய்தல் நிலத்தின் பொழுதுகள்[தொகு]
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும் நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்[தொகு]
- தெய்வம்: வருணன்
- தலைமக்கள்: சேர்ப்பன் [2]
- குடிமக்கள்: நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர், வலையர், வலைச்சியர்[சான்று தேவை], வலைச்சியர்[சான்று தேவை]
- பறவைகள்: கடற்காகம், நீர்ப்பறவை[சான்று தேவை]
- விலங்குகள்: சுறா, முதலை[சான்று தேவை]
- மரங்கள்: கண்டல்[சான்று தேவை], புன்னை, ஞாழல்
- மலர்கள்: நெய்தல், தாழை, கடம்பு
- பண்: செவ்வழிப் பண்
- யாழ்: விளரி யாழ்
- பறை: மீன்கோட் பறை, நாவாய்ப் பம்பை
- தொழில்: மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு உணக்கல், உப்பு விற்றல்[சான்று தேவை], கடல்கடந்த வணிகம்[சான்று தேவை], முத்துக் குளித்தல்[சான்று தேவை], கடல் ஆடுதல்
- உணவு : மீன், உப்பு விற்றுப் பெற்ற உணவுப் பொருள்
- நீர் நிலை : கேணி, கடல்[சான்று தேவை]
- ஊர்: பாக்கம், பட்டினம்
நெய்தல் நிலத்தின் உரிப்பொருட்கள்[தொகு]
- அக ஒழுக்கம் : இரங்கல்
- புற ஒழுக்கம் : தும்பை
மேற்கோள்கள்[தொகு]
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |