முனை முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முனை முயல்
Brown Hare444.jpg
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: லகோமோர்பா
குடும்பம்: லெபோரிடே
பேரினம்: லெபுஸ்
இனம்: L. capensis
இருசொற் பெயரீடு
Lepus capensis
லின்னேயஸ், 1758
Lepus capensis distribution.svg
முனை முயலின் பரவல்

முனை முயல் (ஆங்கிலப்பெயர்: Cape hare, உயிரியல் பெயர்: Lepus capensis), அல்லது பாலைவன முயல் என்பது ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் இந்தியா வரை காணப்படும் ஒரு முயல் ஆகும்.[1]

பண்புகள்[தொகு]

முனை முயலானது ஒரு பொதுவான முயல் ஆகும். தாவுவதற்கும் ஓடுவதற்கும் இதன் கால்கள் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளன. தன் சூழ்நிலையில் ஏற்படும் ஆபத்துக்களை கண்டுகொள்வதற்காக இதற்கு பெரிய கண்கள் மற்றும் காதுகள் அமைந்துள்ளன. பொதுவாக இதன் கண்ணை சுற்றி ஒரு வெள்ளை வளையம் காணப்படுகிறது. இதற்கு ஒரு நல்ல மிருதுவான ரோமம் காணப்படுகிறது. அதன் நிறம் வெளிர் பழுப்பு முதல் சிவப்பு முதல் மணல் சாம்பல் நிறத்தில் வேறுபடுகின்றது. பாலூட்டிகளில் அசாதாரணமாக இம்முயல்களில் பெண் முயல்கள் ஆண் முயல்களை விட பெரியதாக உள்ளன.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Drew, C.Expression error: Unrecognized word "etal". (2008). "Lepus capensis". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T41277A10429185. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41277A10429185.en. http://www.iucnredlist.org/details/41277/0. பார்த்த நாள்: 16 January 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனை_முயல்&oldid=2681872" இருந்து மீள்விக்கப்பட்டது