மீன்கொத்திகள்
| அல்செடினிடே | |
|---|---|
| அசுரே மீன்கொத்தி, (செயக்சு அசூரெசு) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | அல்செடினிடே
|
| துணைக்குடும்பம்: | கொலாம்பினே
|
| துணைக்குடும்பம் | |
| |
| மீன்கொத்திக் குடும்ப உலகப் பரம்பல் | |
மீன் கொத்தி (Kingfisher), அல்செடினிடே (Alcedinidae) குடும்பத்தை சேர்ந்த சிறிய பறவையினம். கோராசீபோர்மெஸ் வரிசையைச் சேர்ந்தது. பிரகாசமான நிறக் கலவையுள்ளது. ஆபிரிக்கா, ஆசியா, ஓசினியா கண்டங்களில் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இது 19 பேரினங்களாக, மூன்று துணைக் குடும்பங்களில் 118 வகையாக உள்ளது. இதன் துணைக்குடும்பங்கள் ஆற்று மீன்கொத்தி எனப்படும் ஆல்சிடினிடீ (Alcedinidae), மர மீன்கொத்தி எனப்படும் ஆல்க்கியோனிடீ (Halcyonidae), நீர் மீன்கொத்தி எனப்படும் செரிலிடீ (Cerylidae) என்பனவாகும். பொதுவாக மீன்கொத்தி பெரிய தலையும் நீண்ட கூரிய அலகும் குட்டைக் கால்களும் சிறு வாலும் உடையது. இப்பறவையில் பெரும்பாலான வகைகள் அடர் நிறத்தில் இறகு உடையன. ஆண், பெண் பறவைக்கு இடையில் நிறத்தில் சிறு வேறுபாடும் உண்டு. சில வகைகள் மட்டுமே காடுகளில் காணப்படுகிறது.
இரையை கூர்ந்து அவதானித்து பறந்து பாய்ந்து பிடிக்கும் இயல்புடையது. மீன் தவளை, பூச்சியினங்களை பிடித்து மரத்திலோ, கல்லிலோ அடித்து கொன்று உண்ணும் இயல்புடையது. இதன் கண்கள் நீருள்ளும், புற வெளியிலும் தெளிவாக பார்க்கத் தக்கதாக முட்டைவடிவில் வில்லை போல் அமைந்திரக்கும். முதுகெலும்பில்லாத உயிரினங்களையும் உணவாக கொள்ளும். இதன் கூடு பெரும்பாலும் இயற்கையாக அமைந்த மண் பொந்து, செயற்கையாக உருவாக்கப்பட்ட சுரங்கங்களில் காணப்படும். அலகில் கவ்விப் பிடித்த இரையை மரம், கல்லில் அடித்து கொன்று உண்ணும். இப்பறவைகளில் சில இனங்கள் மாத்திரம் சுதேச வர்க்கங்களாக காணப்படும். ஆகையால் இப்பறவைகள் அழியும் ஆபத்தை எதிர் நோக்கும் வர்க்கத்தில் உள்ளடக்கப்படும்.

பரவலும் வாழிடமும்
[தொகு]
மீன்கொத்திகள் உலகில் புவிமுனைப் பகுதிகள், மிக வறண்ட சில பாலைவனங்களைத் தவிர ஏறக்குறைய மற்ற எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. சில இனங்கள் பசிபிக் பெருங்கடலின் தெற்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள தீவுகளிலும் காணப்படுகின்றன. ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவில் மெக்சிக்கோவிற்கு வடக்கிலும் சிறிய எண்ணிக்கையிலான மீன்கொத்தி இனங்களே காணப்படுகின்றன.
வகைப்பாடு
[தொகு]மீன் கொத்தி கொரசிபோர்ம் வர்க்கத்தை சேர்ந்த அல்சினிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தின் பெயர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல்துறை வல்லுனர் கொன்ஸ்தாந்தின் சாமுவேல் ரபினஸ்கியுவினால் 1815 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1][2] இப்பறவைகளின் மூன்று உப குடும்பங்களாவன. 1. மர மீன் கொத்திகள் 2. ஆற்று மீன் கொத்திகள் 3. நீர் மீன் கொத்திகள் [3] ஒரு சில வகை பறவைகள் மாத்திரம் மூன்று உபகுடும்பங்களை குடும்ப நிலைக்கு உயர்த்துகின்றது.
| கோராசீபோர்மெஸ் |
| ||||||||||||||||||||||||||||||
பறவை அளவுகள்
[தொகு]ஆபிரிக்க குள்ள மீன் கொத்திகள் (Ispidina lecontei) மிகவும் குறுகிய பறவை வர்க்கத்தை சேர்ந்தவை. இவ்வகை பறவைகள் சராசரியாக 10 சென்டிமீட்டர் நீளமுடயவையாகும். மேலும் 9 தொடக்கம் 10 கிராம் நிறையுடயவை.[4] ஆபிரிக்க பருத்த மீன் கொத்திகள் (Megaceryle maxima) 42 சென்டிமீட்டர் தொடக்கம் 46 சென்டிமீட்டர்வரை நீளமுடயவை. மேலும் 255 கிராம் தொடக்கம் 426 கிராம் வரை நிறையுடையவை. [5]
நிலையும் பாதுகாப்பும்
[தொகு]பல சிற்றினங்கள் மனித நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகக் கருதப்படுகின்றன. இவை அழியும் அபாயத்தில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை வரையறுக்கப்பட்ட பரவலைக் கொண்ட வன இனங்களாக உள்ளன. காடுகளின் அழிவு அல்லது சீரழிவு, சில சந்தர்ப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சிற்றினங்கள் ஏற்படும் வாழிட இழப்பால் இவை அச்சுறுத்தப்படுகின்றன. பிரெஞ்சு பொலினீசியாவின் மார்கெசன் மீன்கொத்தி வாழிபிட இழப்பு மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட கால்நடைகளால் ஏற்படும் சீரழிவு மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட சிற்றினங்கள் மூலம் வேட்டையாடப்பட்டதன் காரணமாக மிக அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rafinesque, Constantine Samuel (1815). Analyse de la nature ou, Tableau de l'univers et des corps organisés (in French). Palermo: Self-published. p. 66.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Bock 1994, ப. 145, 252.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. Retrieved 28 May 2017.
- ↑ Fry, Fry & Harris 1992, ப. 195–196.
- ↑ Fry, Fry & Harris 1992, ப. 231–232.
- ↑ BirdLife International (2019). "Todiramphus godeffroyi". IUCN Red List of Threatened Species 2019: e.T22683487A149519891. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22683487A149519891.en. https://www.iucnredlist.org/species/22683487/149519891. பார்த்த நாள்: 12 November 2021.