மால்கம் பிரேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்கம் பிரேசர்
Malcolm Fraser
MalcolmFraser1982.JPEG
அமெரிக்காவில் மால்கம் பிரேசர் (1982)
ஆத்திரேலியாவின் 22வது பிரதமர்
தேர்தல்கள்: 1975, 1977, 1980, 1983
பதவியில்
11 நவம்பர் 1975 – 11 மார்ச் 1983
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர் ஜோன் கெர்
செல்மான் கோவான்
நினியன் ஸ்டீவன்
துணை டக் ஆந்தனி
முன்னவர் கஃப் விட்லம்
பின்வந்தவர் பொப் ஹாக்
லிபரல் கட்சித் தலைவர்
பதவியில்
21 மார்ச் 1975 – 11 மார்ச் 1983
துணை பிலிப் லின்ச்
ஜோன் ஹவார்ட்
முன்னவர் பிலி சினெடன்
பின்வந்தவர் ஆன்ட்ரூ பீக்கொக்
கல்வி அமைச்சர்
பதவியில்
20 ஆகத்து 1971 – 5 டிசம்பர் 1972
பிரதமர் வில்லியம் மெக்மாகன்
முன்னவர் டேவிட் ஃபயர்பேர்ன்
பின்வந்தவர் கஃப் விட்லம்
பதவியில்
28 பெப்ரவரி 1968 – 12 நவம்பர் 1969
பிரதமர் ஜோன் கோர்ட்டன்
முன்னவர் ஜோன் கோர்ட்டன்
பின்வந்தவர் நைஜல் போவன்
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
12 நவம்பர் 1969 – 8 மார்ச் 1971
பிரதமர் ஜோன் கோர்ட்டன்
முன்னவர் அலென் பெயர்ஹால்
பின்வந்தவர் ஜோன் கோர்ட்டன்
இராணுவ அமைச்சர்
பதவியில்
26 சனவரி 1966 – 28 பெப்ரவரி 1968
பிரதமர் ஹரல்ட் ஹோல்ட்
ஜோன் மெக்கெவன்
ஜோன் கோர்ட்டன்
முன்னவர் ஜிம் ஃபோர்ப்சு
பின்வந்தவர் பிலிப் லின்ச்
வானன் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
10 டிசம்பர் 1955 – 7 மே 1983
முன்னவர் டொன் மெக்லியட்
பின்வந்தவர் டேவிட் ஹாக்கர்
தனிநபர் தகவல்
பிறப்பு ஜோன் மால்கம் பிரேசர்
மே 21, 1930(1930-05-21)
டூராக், ஆத்திரேலியா
இறப்பு மார்ச்சு 20, 2015( 2015-03-20) (அகவை 84)
மெல்பேர்ண், ஆத்திரேலியா
அரசியல் கட்சி லிபரல் கட்சி (ஆஸ்திரேலியா)
(1954–2009)
வாழ்க்கை துணைவர்(கள்) டாமி பிரேசர்
பிள்ளைகள் 4
படித்த கல்வி நிறுவனங்கள் மெக்டாலென் கல்லூரி, ஆக்சுபோர்டு
தொழில் அரசியல்வாதி

ஜோன் மால்கம் பிரேசர் (John Malcolm Fraser, 21 மே 1930 – 20 மார்ச் 2015) ஆத்திரேலிய அரசியல்வாதி. இவர் 1975 முதல் 1983 வரை ஆத்திரேலியாவின் பிரதமராகவும், லிபரல் கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர்.

பிரேசர் 1955 ஆம் ஆண்டில் தனது 25வது அகவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1966 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். 1969 இல் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார். 1972 தேர்தலில் லிபரல் கட்சி தோல்வியடைந்தததி அடுத்து மால்கம் பிரேசர் அக்கட்சியின் தலைமைப் பதவிக்குத் தகுந்தவராக அடையாளம் காணப்பட்டார். ஆனாலும், தலைமைப் போட்டியில் பில்லி சினெடனிடம் தோற்றார். பின்னர் மீண்டும் 1975 இல் போட்டியிட்டு லிபரல் கட்சியின் தலைவராக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார்.[1]

1975 ஆம் ஆண்டில் அன்றைய கஃப் விட்லம் தலைமையிலான தொழிற் கட்சி அரசு சர்ச்சைக்குரிய முறையில் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டதை அடுத்து, 1975 நவம்பர் 11 இல் மால்கம் பிரேசர் இடைக்கால அரசின் பிரதமராக ஆளுனர் சேர் ஜோன் கெர் என்பவரால் நியமிக்கப்பட்டார். விட்லம் அரசின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மால்கம் பிரேசர் பெரும் பங்காற்றினார்.[1] 1975 இல் இடம்பெற்ற தேர்தலில் லிபரல் கட்சி பெரு வெற்றி பெற்று பிரேசர் பிரதமரானார். 1977, 1980 தேர்தல்களிலும் பிரேசர் தலைமையில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது. 1983 தேர்தலில் லிபரல் கட்சி பொப் ஹோக் தலைமையிலான தொழிற் கட்சியிடம் தோல்வியடைந்தது.[1] இதன் பின்னர் சில காலத்தில் பிரேசர் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார். 2015 மார்ச் 20 இல் சிறிது கால சுகவீனத்தை அடுத்து 2015 மார்ச் 20 இல் பிரேசர் மெல்பேர்ன் நகரில் காலமானார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Malcolm Fraser: Australia's 22nd prime minister dies aged 84". ஏபிசி. 20 மார்ச் 2015. 20 மார்ச் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Former prime minister Malcolm Fraser dead at 84". Sydney Morning Herald. Fairfax. 20 மார்ச் 2015. 20 மார்ச் 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்கம்_பிரேசர்&oldid=3629517" இருந்து மீள்விக்கப்பட்டது