மாந்தர்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாந்தர்ரே, நுவோ லியான்
நகரம்
மாந்தர்ரே
மேலிருந்து இடதாக: நகரின் காட்சி, ஒற்றுமைப் பாலம் (Puente de la Unidad), BBVA பேங்கோமர் அரங்கு (Estadio BBVA Bancomer), பனோர்த் நிதிநிறுவன கட்டிடம், அன்னை மேரி பெருநகர பேராலயம், சியோதடெலா கோபுரம், சேண மலை (Cerro de la Silla), கிழக்குப் பள்ளத்தாக்கும் அரசு அரண்மனை அருங்காட்சியகமும்.
மேலிருந்து இடதாக: நகரின் காட்சி, ஒற்றுமைப் பாலம் (Puente de la Unidad), BBVA பேங்கோமர் அரங்கு (Estadio BBVA Bancomer), பனோர்த் நிதிநிறுவன கட்டிடம், அன்னை மேரி பெருநகர பேராலயம், சியோதடெலா கோபுரம், சேண மலை (Cerro de la Silla), கிழக்குப் பள்ளத்தாக்கும் அரசு அரண்மனை அருங்காட்சியகமும்.
மாந்தர்ரே, நுவோ லியான்-இன் கொடி
கொடி
மாந்தர்ரே, நுவோ லியான்-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): வடக்கின் சுல்தானா, மலைகளின் நகரம்
குறிக்கோளுரை: பணியே ஆத்மாவை வலுவாக்குகிறது
மாந்தர்ரே is located in மெக்சிக்கோ
மாந்தர்ரே
மாந்தர்ரே
மெக்சிக்கோவினுள் மாந்தர்ரேயின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°40′N 100°18′W / 25.667°N 100.300°W / 25.667; -100.300
நாடு மெக்சிக்கோ
மாநிலம் நுவோ லியான்
நிறுவல்செப்டம்பர் 20, 1596
நிறுவப்பட்டபோதுஎங்களன்னை மாந்தர்ரேயின் பெருநகர நகரம்
(Ciudad Metropolitana de Nuestra Señora de Monterrey)
தோற்றுவித்தவர்டியாகோ டெ மான்டெமேயர்
அரசு
 • நகரத் தந்தைஅத்ரியன் டெலா கர்சா
பரப்பளவு
 • நகரம்969.70 km2 (374.40 sq mi)
 • மாநகரம்
5,346.80 km2 (2,064.41 sq mi)
ஏற்றம்
540 m (1,770 ft)
மக்கள்தொகை
 (2015[3])
 • நகரம்11,09,171 [1]
 • அடர்த்தி2,532/km2 (6,560/sq mi)
 • பெருநகர்
47,04,929 [2]
 • பெருநகர் அடர்த்தி923/km2 (2,390/sq mi)
நேர வலயம்ஒசநே−6 (மத்திய சீர்தர நேரம்[4])
 • கோடை (பசேநே)ஒசநே−5 (மத்திய பகலொளி சேமிப்பு நேரம்[4])
இணையதளம்(எசுப்பானியம்) www.monterrey.gob.mx
அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து மாந்தர்ரேயும் சேண மலை (Cerro de la Silla)யும், 2017

மாந்தர்ரே (Monterrey, எசுப்பானிய ஒலிப்பு: [monteˈrei]  ( கேட்க)) மெக்சிக்கோவின் வடகிழக்கிலுள்ள நுவோ லியான் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரும் நகரமும் ஆகும்.[4] மெக்சிக்கோவின் மூன்றாவது மிகப்பெரிய பெருநகரத் தொகுப்பும் ஒன்பதாவது பெரிய நகரமுமாகும்.[5][6] மாந்தர்ரே வடக்கு மெக்சிக்கோவின் வணிக மையமாகவும் பல பன்னாட்டு நிறுவனங்களின் இருப்பிடமாகவும் விளங்குகின்றது.

இந்த நகரம் மெக்சிக்கோவின் செல்வச்செழிப்பு மிக்க நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. 2017இல் இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி US$142 பில்லியனாக இருந்தது. மாந்தர்ரேயின் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படுத்திய தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட US$35,500 ஆக உள்ளது; இது நாட்டின் தனிநபர் உற்பத்தியான US$18,800 போல இருமடங்கானது.[7] இது உலக பீட்டா நகர்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.[8][9] உலகப் பொதுவர் மாநகராகவும் போட்டிமிகு நகராகவும் உள்ளது.[10] ஆழ்ந்த வரலாறும் பண்பாடும் உள்ள மாந்தர்ரே மெக்சிக்கோவின் மிகவும் முன்னேற்றமடைந்த நகரங்களில் ஒன்றாகும். இது மிகவும் "அமெரிக்கத்தனம்" கொண்ட நகராகவும் குறிப்பிடப்படுகின்றது.[11]

முக்கியமான தொழில் மற்றும் வணிக மையமாக உள்ளதால் மாந்தர்ரேயில் பல மெக்சிக்கோ நிறுவனங்களின் தாயகமாக விளங்குகின்றது; குருப்போ அவாந்தே, இலானிக்சு எலெக்ட்ரானிக்சு, ஓக்ரேசா, CEMEX, வித்ரோ, OXXO, FEMSA, தினா, குரூப்போ ஆல்பா இங்குள்ள சில நிறுவனங்களாகும்.[12][13] இங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களாவன: சீமென்ஸ், அக்சென்ச்சர், டெர்னியம், சோனி, தோஷிபா, கேரியர், விர்ல்பூல், சேம்சங், டொயோட்டா, பாப்காக் & வில்காக்ஸ், டேவூ, பிரித்தானிய அமெரிக்க புகையிலை, நோக்கியா, டெல், போயிங், எச்டிசி, ஜெனரல் எலக்ட்ரிக், ஜான்சன் கன்ட்ரோல்சு, கமேசா, எல்ஜி, SAS நிறுவனம், குருண்ட்போசு, டான்போசு, குவால்போன், டெலிபர்பார்மன்சு[6][14][15]

வடகிழக்கு மெக்சிக்கோவில், மாத்ரே ஓரியன்டல் மலையின் அடிவாரத்தில் மாந்தர்ரே அமைந்துள்ளது. இந்த குடியிருப்பை 1596இல் டியாகோ டெ மான்ட்மேயர் நிறுவினார். மெக்சிகோ விடுதலைப் போருக்குப் பின்னர் மாந்தர்ரே ஓர் முக்கியமான வணிக மையமாக மாறியது.

மேற்கோள்கள்[தொகு]

 1. http://cuentame.inegi.org.mx/monografias/informacion/NL/Poblacion/default.aspx?tema=ME&e=19
 2. http://cuentame.inegi.org.mx/monografias/informacion/NL/Poblacion/default.aspx?tema=ME&e=19
 3. http://cuentame.inegi.org.mx/monografias/informacion/NL/Poblacion/default.aspx?tema=ME&e=19
 4. 4.0 4.1 4.2 "Ubicación Geográfica". Gobierno del Estado de Nuevo León. பார்க்கப்பட்ட நாள் June 24, 2009.
 5. "2010 INEG Census Tables". INEG. Archived from the original on May 2, 2013. பார்க்கப்பட்ட நாள் June 4, 2011.
 6. 6.0 6.1 "NAI Mexico Study" (PDF). NAI Mexico. Archived from the original (PDF) on May 27, 2010. பார்க்கப்பட்ட நாள் January 7, 2009.
 7. "Archived copy". Archived from the original on June 4, 2013. பார்க்கப்பட்ட நாள் November 18, 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 8. "The World According to GaWC 2010". Globalization and World Cities Research Network. Archived from the original on February 1, 2013. பார்க்கப்பட்ட நாள் August 20, 2012.
 9. "GaWC - The World According to GaWC 2010".
 10. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on May 16, 2012. பார்க்கப்பட்ட நாள் May 9, 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 11. Joseph Contreras (March 16, 2009). In the Shadow of the Giant: The Americanization of Modern Mexico. Rutgers University Press. p. 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8135-4482-3. பார்க்கப்பட்ட நாள் August 13, 2012.
 12. Rovelo, Carlos A. (2002). "Breeding success in Monterrey: Mexico's industrial powerhouse provides an end market for many secondary commodities – 2002 Latin-American Markets Supplement". BNET இம் மூலத்தில் இருந்து November 9, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111109054538/http://findarticles.com/p/articles/mi_m0KWH/is_9_40/ai_92724941/?tag=content%3Bcol1. பார்த்த நாள்: July 1, 2009. 
 13. "Beer Me! – Cervecería Cuauhtémoc-Moctezuma – Monterrey, Nuevo León, México". beerme.com. Archived from the original on January 4, 2014. பார்க்கப்பட்ட நாள் July 1, 2009.
 14. "Journal of Business Research: Carrier Mexico S.A. de C.V." (Web/பி.டி.எவ்). Journal of Business Research 50: 97–110. doi:10.1016/S0148-2963(98)00111-8. http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6V7S-417FB6N-C&_user=10&_rdoc=1&_fmt=&_orig=search&_sort=d&_docanchor=&view=c&_searchStrId=945653660&_rerunOrigin=google&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=af905e9d93ea0ef91f38d8cca23d9e92. பார்த்த நாள்: July 1, 2009. 
 15. "Teleperformance Mexico S.A. de C.V." Monterrey, Mexico: goliath.ecnext.com. Archived from the original on June 15, 2011. பார்க்கப்பட்ட நாள் July 1, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்தர்ரே&oldid=3792133" இலிருந்து மீள்விக்கப்பட்டது