மாத்திரை (தமிழ் இலக்கணம்)
(மாத்திரை (இலக்கணம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண் இயல்பாகவே மூடித் திறந்துகொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் நெடித்துக்கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.[1] [2][3][4]
- குற்றெழுத்துக்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு)
- நெட்டெழுத்துக்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)
- தனி மெய்யெழுத்துக்கள், ஆய்த எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.
- உயிரளபெடை மூன்று மாத்திரையளவும், ஒற்றளபெடை ஒரு மாத்திரையளவும் ஒலிக்கும்.
- ஔகாரக் குறுக்கம், ஐகாரக் குறுக்கம் என்பன ஒன்றரை அல்லது ஒரு மாத்திரையளவு ஒலிக்கும்.
- மகரக் குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பன கால் மாத்திரையளவு ஒலிக்கும்.
அடிக்குறிப்பு[தொகு]
- ↑
கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. - தொல்காப்பியம் நூன்மரபு 7 - ↑ "இயல்பெழு மாந்தர்தம் இமைநொடி மாத்திரை" - நன்னூல்
- ↑ பிற்காலத்தவர் இதனைக் கைந்நொடி எனக் கூறுவது பொருந்தாது.
- ↑
- குறிப்பு