மாற்றுக்கருத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாற்றுக்கருத்து என்பது ஒரு திட்டத்தை முன்னெடுத்து செல்லும் போது, பொதுவாக எல்லோரும் சிந்திக்கும் வழிமுறையில் இருந்து மாறுப்பட்ட அதேவேளை ஏற்கத்தகுந்ததும் சிறந்ததுமான கொள்கையினை அல்லது திட்டத்தை முன்வைப்பதனைக் குறிக்கும். மாற்றுக்கருத்து என்பதனை ஒரு அமைப்பின் அல்லது திட்டத்தின் உள்ளிருந்து அல்லது வெளியில் இருந்து என்றாலும் முன்வைக்கலாம். ஆனால் அவை அவை அந்த குறிப்பிட்ட அமைப்பின் அல்லது திட்டத்தின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அவ்வாறான மாற்றுக்கருத்து சிந்தனைகள் பல்வேறு மட்டத்தின் அறிவியலாளர்கள் மற்றும் திறனாய்வாளர்கள் போன்றோரால் வரவேற்கப் படுகின்றது. சில மாற்றுக்கருத்து சிந்தனையாளர்களின் தோற்றம் என்பது உலக போக்கினையே மாற்றியமைத்தவைகளும் உள்ளன.

மாற்றுக்கருத்தாளர்கள்[தொகு]

உலகளவில் போற்றப்படும் மாற்றுக்கருத்து சிந்தனையாளர்கள் எனும் வரிசையில் ...

போலி மாற்றுக்கருத்தாளர்கள்[தொகு]

மாற்றுக்கருத்து எனக் கூறிக்கொண்டு ஒரு அமைப்பு அல்லது திட்டம் குறித்த எந்த நன்னோக்கும் அற்ற வகையில் உள்ளிருந்து அல்லது வெளியில் இருந்து விடப்படும் கருத்துக்கள் அல்லது அறிக்கைகள் "மாற்றுக்கருத்து" எனும் வகையில் சாராது. அவ்வாறானவை பெரும்பாலும் ஒரு அமைப்பினை அல்லது திட்டத்தை சீர்குழைப்பதற்கு, எதிர்பதற்கு, மக்கள் மனங்களில் இருந்து எதிர்ப்பலைகளை தோற்றுவிப்பதற்கு, பிழையான கருத்துக்களை புகுத்துவதற்கு திட்டமிட்டு விடப்படும் கருத்துக்கள் அல்லது அறிக்கைகள் மட்டுமே ஆகும். இவ்வாறானவை சமுதாயத்தில் பிழையான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்பதுடன் பாரிய அபாயங்களை தோற்றுவிப்பதற்கும் வழி வகுத்து விடுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாற்றுக்கருத்து&oldid=2744549" இலிருந்து மீள்விக்கப்பட்டது