மாண்டே மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்டே (மாண்டிங்)
Fondazione Passaré - 094 b - Mali - Maschera etnia Bambara Marka.jpg
மொத்த மக்கள்தொகை
ஏறத்தாழ 40 மில்லியன் (2016)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மேற்கு ஆப்பிரிக்கா
மொழி(கள்)
மாண்டே மொழிகள்
சமயங்கள்
சுன்னி இசுலாம்; மரபுவழிச் சமயங்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பம்பாரா, பிஸ்சா, புசா, டான், டியூலா, இபெல்லே, லிக்பி, லான்டோகோ, மாண்டின்கா, மர்க்கா, மென்டே, சொனின்கே, சுசு, வாய், யாலுங்கா, மேலும் பல

மாண்டே அல்லது மாண்டென் என்பது, மேற்கு ஆப்பிரிக்காவில் இப்பகுதியைச் சேர்ந்த மாண்டே மொழிகளில் ஏதாவது ஒன்றைப் பேசுகின்ற பல்வேறு இனக்குழுக்களின் குடும்பம் ஆகும். பல்வேறுபட்ட மாண்டே குழுக்கள், பெனின், புர்க்கினா பாசோ, ஐவரி கோஸ்ட், சாட், கம்பியா, கானா, கினியா, கினி-பிசாவு, லைபீரியா, மாலி, மௌரித்தானியா, நைகர், நைசீரியா, செனகல், சியேரா லியோனி ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றன.நைகர்-கொங்கோ மொழிகளின் ஒரு கிளையான மாண்டே மொழிகள் கிழக்கு மாண்டே, மேற்கு மாண்டே என இரு பிரிவுகளாக உள்ளன.

மாண்டே குடும்பத்தின் ஒரு கிளையாகிய மாண்டின்கா குழு, பண்டைய மேற்காப்பிரிக்கப் பேரரசுகளை நிறுவிய பெருமைக்கு உரியது. சோனின்கே, பம்பாரா, டியூலா என்பன ஏராளமான பிற மாண்டேக் குழுக்களுள் முக்கியமானவை. சிறிய மாண்டேக் குழுக்களில் லிக்பி, வாய், பிஸ்சா என்பன அடங்குகின்றன. மாண்டேக்கள் கரையோர மழைக்காடுகள் முதல் பாலைவனங்கள் வரை பல்வேறுபட்ட சூழல்களில் வாழ்கின்றனர். மொழிக் குழுக்களாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இவர்கள் பல்வேறுபட்ட பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும் உடையவர்களாகக் காணப்படுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டே_மக்கள்&oldid=2158048" இருந்து மீள்விக்கப்பட்டது