உள்ளடக்கத்துக்குச் செல்

பம்பாரா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பம்பாரா, பமானா
1890ல் மேல் செனகல் ஆற்றுப் பள்ளத்தாக்கில் பம்பாரா மக்கள்.[1]
மொத்த மக்கள்தொகை
(2,700,000 (2005))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மாலி, கினியா, செனகல், புர்க்கினா பாசோ, நைகர், ஐவரி கோஸ்ட், மௌரித்தானியா
மொழி(கள்)
பம்பாரா மொழி
சமயங்கள்
இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
மாண்டின்கா மக்கள், சோனின்கே மக்கள், தியோலா, பிற மாண்டே பேசும் குழுக்கள்.

பம்பாரா மக்கள், முக்கியமாக மாலியிலும், கினியா, புர்க்கினா பாசோ, செனகல் ஆகிய நாடுகளிலும் வாழும் மாண்டே மக்கள் ஆவர்.[2][3] பம்பாரா மொழியில் இவர்களை பமானா, பன்மானா போன்ற பெயர்களால் குறிப்பிடுவர். இவர்கள் மாண்டே இனக்குழுக்களுள் மிகப்பெரிய குழுக்களுள் ஒன்றாக கருதப்படுகின்றனர். மாலியில் முக்கியமான மாண்டே குழுவாக இவர்கள் உள்ளனர். மாலியின் மக்கள்தொகையில் 80% பம்பாரா மொழியைப் பேசுகின்றனர்.

வரலாறு

[தொகு]

பம்பாராக்கள், மாண்டின்கா மக்களில் அரச குலத்தவராகத் தோன்றினர். இவர்கள் 13ம் நூற்றாண்டில் மாலிப் பேரரசைத் தோற்றுவித்தனர். பம்பாராக்களும், மாண்டின்காக்களும் மாண்டே இனக்குழுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அறியப்பட்ட இவர்களது மிகப் பழைய வரலாற்றின்படி, இவர்கள் இன்று தெற்கு மௌரித்தானியாவின் சகாரா பாலைவனப் பகுதிக்குள் அடங்கிப்போய்விட்ட திச்சிட் பகுதியில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. கிமு 2500 அளவில் இப்பகுதியில் நகர மையங்கள் தோன்ற ஆரம்பித்திருந்தன. கிமு 250 அளவில், மாண்டே துணைக்குழுவான போசோக்கள் ஜென்னே நகரத்தை நிறுவினர். கிபி 300 - கிபி 1000 காலப்பகுதியில், இன்னொரு மாண்டே குழுவான சோனின்கே மேற்கு மாலியில் முக்கியத்துவம் பெற்று கானாப் பேரரசை ஆட்சி செய்தது. கிபி 1600க்குப் பின்னர் மாண்டே சோங்காய்ப் பேரரசு கலைக்கப்பட்டபோது, நைகர் ஆற்றுப் படுகைக் கரையோரம் வாழ்ந்த மாண்டே மொழிகளைப் பேசும் குழுக்கள் உட்பகுதிகளை நோக்கிச் சென்றன. மாலிப் பேரரசு வீழ்ச்சியடையத்தொடங்கிய பின்னர், 1740களில், பமானாப் பேரரசின் எழுச்சியுடன் பம்பாராக்கள் மீண்டும் வெளிப்பட்டனர்.

பம்பாரா என்னும் சொல்லின் தோற்றம் அதன் பொருள் என்பன குறித்துத் தற்கால வரலாற்றாளர்கள், இனவியலாளரிடையே ஒத்த கருத்துக் காணப்படாவிட்டாலும், இச்சொல் 18ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சேர்ந்த குறிப்புக்களில் காணப்படுகின்றது.[4] இன - மொழிக் குழுவைக் குறிக்கும் பொதுவான பயன்பாட்டுக்குப் புறம்பாக இச்சொல், மேல் செனகல்-நைகர் பகுதிகளாக இருக்கலாம் எனக் கருதப்படும் ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளிலில் இருந்து பிடிக்கப்பட்ட ஆப்பிரிக்கர்களைக் குறிக்கவும் பயன்பட்டது. 1730களிலேயே அடிமை வணிக நிலையான கோரீயில், பெரெஞ்சு உயர் வர்கத்தினரிடம் ஏற்கெனவே அடிமைகளாக இருந்தோரைக் குறிக்க பம்பாரா என்னும் சொல் பயன்பட்டது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. illustration from Colonel Frey's Côte occidentale d'Afrique, 1890, Fig.49 p.87,
  2. Zyama.com "Tribal African Art Bambara (Bamana, Banmana)". Zyama.com - African Art Museum. பார்க்கப்பட்ட நாள் 2008-07-08. {{cite web}}: Check |url= value (help)
  3. den Otter, Elisabeth; Esther A. Dagan (1997). Puppets and masks of the Bamana and the Bozo (Mali) - from The Spirit's Dance in Africa. Galerie Amrad African Arts Publications.
  4. Labat, Jean-Baptiste (1728). Nouvelle Relation de l'Afrique Occidentale 3 Vol. Paris.
  5. Bathily, Abdoulaye (1989). Les Ports de l'Or Le Rouyaume de Galam (Sénégal) de l'Ere Musulmane au Temps de Nègriers (VIIIe-XVIIe Siècle). Paris.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பாரா_மக்கள்&oldid=2158065" இலிருந்து மீள்விக்கப்பட்டது