உள்ளடக்கத்துக்குச் செல்

மாகி ஜபீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாகி ஜபீன்
பிறப்பு1961 (அகவை 62–63)
நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா

மாகி ஜபீன் (Mahe Jabeen) (பிறப்பு 1961) ஓர் இந்தியக் கவிஞரும், வழக்கறிஞரும் சிறுபான்மை உரிமை ஆர்வலரும் ஆவார். தனது சமூகச் சேவைக்காக ராஜீவ் காந்தி மானவ் சேவா விருதை வென்றுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

மகா ஜபீன் என நன்கறியப்பட்ட மகா ஜபீன் முகமது, 1961இல் நெல்லூரில் ஓர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தார். இவரது தாயார் அரசு சமூக நல விடுதியில் பகுதிநேர ஆசிரியராக பணிபுரிந்தார். வறுமையை எதிர்கொண்ட இவர், ஏழை குழந்தைகள் நிதியத்தின் உதவியுடன் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியிலிருந்து தொடக்கக் கல்வியைப் பெற்றார்.

கல்வி

[தொகு]

1985 ஆம் ஆண்டில் திருப்பதி சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் உளவியலில் நிபுணத்துவம் பெற்று இளங்கலை பட்டமும், 1987இல் திருப்பதி சிறீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் நிபுணத்துவம் பெற்று முதுகலை பட்டமும் பெற்றார். இவர் ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் 1999இல் மனித உரிமைகளில் முதுகலை சான்றிதழ் பட்டம் பெற்றார். இவர் 2002இல் ஐதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பெண்கள் உரிமைகளில் நிபுணத்துவம் பெற்று இளங்கலைச் சட்டம் முடித்தார்.

மனித உரிமை ஆர்வலர்

[தொகு]

இந்திய மகளிர் அமைப்பான கூட்டு மகளிர் திட்டத்தின் ஆந்திர மாநிலத்தில்திட்டச் செயலாளராக இவர் உள்ளார். வரதட்சணை கேட்டு துன்புறுத்தல், திருமணப் பிரச்சினைகள், வீட்டு வன்முறை மற்றும் பெண்களுக்கு தங்குமிடம் போன்ற பிரச்சினைகள் குறித்த பட்டறைகளையும் பயிற்சித் திட்டங்களையும் இவர் ஏற்பாடு செய்கிறார். சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பெண்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பாலினம் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்த பொதுக்கூட்டங்களையும் இவர் ஏற்பாடு செய்கிறார். இவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பீனிக்ஸ் அமைப்பின் செயலாளராகவும் உள்ளார். அமைப்பின் ஒரு பகுதியாக, சிறுபான்மை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பொருட்களை இவர் தயாரிக்கிறார். மேலும் தெரு நாடகங்களையும் இயக்குகிறார். இவர் ஐதராபாத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். மேலும், சிறுபான்மையினருக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குகிறார். அரசாங்க தொலைக்காட்சி சேனலான தூர்தர்ஷன் மூலம் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை மற்றும் குடும்ப ஆலோசனை திட்டமான சேதானையும் தொகுத்து வழங்கினார். குழந்தைத் தொழிலாளர் (ஒழிப்பு) சட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்கிறார். நகர்ப்புறங்களில் குழந்தைத் தொழிலாளர்களை அடையாளம் காண்பதில் மாநில தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து, விழிப்புணர்வு பேச்சுக்களை ஏற்பாடு செய்து கட்டுரைகளை ஊடகங்களில் வெளியிடுகிறார்.

எழுத்தாளர்

[தொகு]

கேந்திரிய சாகித்ய அகாதமியின் வெளியீடுகளில் இவர் பல கவிதைகளை வெளியிட்டுள்ளார். 1995ஆம் ஆண்டில் வோல்கா மற்றும் பிற எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட பெண்ணிய கவிதைத் தொகுப்பான நீலி மேகாலுவிலும் இவரது கவிதைகள் சேர்க்கப்பட்டன. இவரது கருப்பொருள்கள் பாலின பாகுபாடு, மனித உரிமைகள், இன ஆய்வுகள், மக்கள் இயக்கங்கள், முஸ்லிம் மற்றும் நக்சல் சிறுபான்மை பிரச்சினைகள் மற்றும் பெண்ணியம் ஆகியவை அடங்கும். கவிதைகள் எழுதுவதைத் தவிர, பல்வேறு இந்தியப் பத்திரிகைகளுக்காக இந்த பிரச்சினைகள் குறித்த கட்டுரைகளையும் எழுதுகிறார். இவரது கவிதைகளில் ஒன்றான 'தெரு குழந்தைகள்' இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள இடைநிலைக் கல்வி வாரியத்தால் பத்தாம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

நூலியல்

[தொகு]
  • Aku ralu kalam 1997
  • Jnapakam
  • Sarihaddu Rekhalu
  • Nava Smriti
  • Akasam Kinda
  • Tenchukonave Bhandanalu
  • Ideal wife

விருதுகள்

[தொகு]
  • 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆந்திர மாநில அரசின் அதிகார பாஷா சங்கத்திலிருந்து தெலுங்கு பாஷா புரஸ்காரம்
  • 2008இல் இந்திய அரசிடமிருந்து நாரி சக்தி விருது - கண்ணகி விருது .
  • ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியாவில் குழந்தை உரிமைகள் பிரச்சினைகளில் பணியாற்றியதற்காக 2007ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ராஜீவ் காந்தி மானவ் சேவா விருது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகி_ஜபீன்&oldid=3351127" இலிருந்து மீள்விக்கப்பட்டது