உள்ளடக்கத்துக்குச் செல்

மலையாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலையாத்தி
மலையாத்திப் பூ.
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
ப. வேரிகாட்டா
இருசொற் பெயரீடு
பகுனியா வேரிகாட்டா
L.
Bauhinia variegata

மலையாத்தி அல்லது மந்தாரை (Bauhinia variegata) பேபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தென்கிழக்காசியா, தென் சீனாவிலிருந்து மேற்கே இந்தியா வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இதன் பூ, ஆர்க்கிட் பூவை ஒத்திருப்பதால் ஆங்கிலத்தில் இதனை ஆர்க்கிட்மரம் (Orchidtree) என்றும் அழைப்பதுண்டு.

சிறியது முதல் நடுத்தரம் வரை உயரமான இம் மரம் 10-12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கோடையில் இலைகளை உதிர்த்து விடுகின்றது. இதன் இலை 10-20 சதமமீட்டர் வரை நீள, அகலங்களைக் கொண்டது. இவ்விலையின் அடியும், நுனியும் இரண்டாகப் பிளவுபட்டு வளைந்த வடிவை உடையதாகக் காணப்படும். வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் ஐந்து இதழ்களைக் கொண்ட கவர்ச்சியான இதன் பூக்கள், 8-12 சமீ விட்டம் கொண்டவை. 15-30 சமீ வரை நீளம் கொண்ட இதன் பழங்கள் பல விதைகளை உள்ளடக்கியவை.

வளர்ப்பும் பயன்பாடும்[தொகு]

இது வெப்பவலயப் பகுதிகளில் மிகவும் விரும்பி வளர்க்கப்படுகின்ற அலங்காரத் தாவரங்களில் ஒன்றாகும். சிறப்பாக இதன் வாசனை உள்ள பூக்களுக்காக இவை விரும்பப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாத்தி&oldid=3361137" இலிருந்து மீள்விக்கப்பட்டது