மலாலை காகர்
மலாலை காகர் (Malalai Kakar பஷ்தூ: ملالۍ کاکړ ; 1967-28 செப்டம்பர் 2008) ஆப்கானித்தானின் இஸ்லாமிய குடியரசில் மிக உயர்ந்த காவல் துறைப் பொறுப்பில் இருந்த பெண்மணியாக ஆவார்.இவர் 2001 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை காவல் துறைப் பொறுபில் இருந்துள்ளார். [1]
துணைநிலை ஆளுநராக, காந்தகாரம் பெண்களுக்கு எதிரான குற்றத் துறையின் தலைவராக இருந்தார். [1] பல மரண அச்சுறுத்தல்களைப் பெற்ற காகர், செப்டம்பர் 28, 2008 அன்று தலிபான்களால் படுகொலை செய்யப்பட்டார்.
காகர் தனது தந்தை மற்றும் சகோதரர்களின் செயல்களால் ஈர்க்கப்பட்டு அவர்களைப் போலவே 1982 ஆம் ஆண்டில் காவல்துறையில் சேர்ந்தார். [2] காந்தகாரம் காவல் அகாதமியில் பட்டம் பெற்ற முதல் பெண்மணி, மற்றும் காந்தகாரம் காவல் துறையின் புலனாய்வாளர் ஆன முதல் பெண் ஆகிய பெருமைகளைப் பெற்றார். [3]
ஆப்கான் சட்ட அமலாக்கத்தில் பாலின பிரச்சினைகள்[தொகு]
2009 ஆம் ஆண்டின் இறுதியில், ஆப்கானித்தானில் சுமார் 50000 காவல் அதிகாரிகளுடன் ஒப்பிடுகையில், சுமார் 500 காவல் பெண்கள் தான் பணியில் இருந்தனர். தலிபான்களின் செல்வாக்கு வலுவாக இருந்த தென் மாகாணங்களான காந்தகாரம் மற்றும் எல்மந்து மாகாணத்தில் சில பெண் காவல் துறையினர் பணியாற்றினர்.
ஆப்கானித்தானின் இஸ்லாமிய எமிரேட் அமெரிக்க மற்றும் கூட்டாளிகளின் படையெடுப்பு மற்றும் கவிழ்ப்பிற்குப் பிறகு காவல் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கத் துவங்கியது. பாலின வேறுபாடுகளைக் களைவதன் மூலம் காவல் துறையில் முக்கியப் பங்காற்ற இயலும் என்று கருதப்பட்டது.பாதுகாப்புப் படைகளுக்கு பெண்கள் பணியாற்றுவது மற்றும் வீடுகளைச் சோதனை செய்தல் போன்ற சிறப்புப் பணிகளைச் செய்ய பெண்கள் தேவைப்பட்டனர். அங்குள்ள மக்கள் , தங்களது வீடுகளில் பெண்கள் இருக்கும் போது ஆண் காவலர்கள் தங்களது வீடுகளில் சோதனை நடத்துவதையோ அல்லது தங்களது வளாகத்திற்குள் நுழைவதனையோ விரும்பவில்லை.மேலும் சோதனைச் சாவடிகளில் பெண்கள் மறைத்து வைத்து எடுத்துச் செல்லும் ஆயுதங்களை ஆண் காவலர்களால் சோதனை செய்ய இயலாது என்ற காரணத்தினாலும் பெண்கள் அங்கு பணியமர்த்தப்பட்டனர்.
டிசம்பர் 2009 இல், ஆப்கானித்தான் காவல்துறையின் பாலின பிரச்சினைகள் பிரிவின் தலைவர் ஆளுநர் சபிகா குரைசா, ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் பெண் காவலர் நுழைந்து அங்கிருந்த ஆயுதங்களை கண்டறிந்த நிகழ்வினை விவரித்தார். மேலும் காவலர்கள் பெண்களக இருக்கும் சமயத்தில் அங்குள்ள அறைகளையும், பெண்களையும் சோதனை செய்ய இயலும் என்றும் அதற்காக அங்குள்ள ஆண்கள் தங்களது இடத்தின் மரபொழுங்கு மீரப்பட்டதாக குற்றம் சுமத்த இயலாது என்றும் அவர் விவரித்தார்.[4]
லக்மான் மாகாணத்தில் பெண்கள் விவகாரங்களின் தலைவர்கள் அனிபா சாஃபி மற்றும் நஜியா சேடிகி 2012 இல் படுகொலை செய்யப்பட்டனர். [5] வியாழக்கிழமை 4 ஜூலை 2013 அன்று, இஸ்லாம் பீபி, 37 வயதான மூன்று குழந்தைகளின் தாயும், எல்மண்டில் முன்னணி பெண் காவல் அதிகாரியும், வேலைக்குச் செல்லும் வழியில் கொல்லப்பட்டனர். [6] [7] சில மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 15 அன்று, பிபியின் 38 வயது வாரிசான நேகரும் சுடப்பட்டார்; அடுத்த நாள் அவர் இறந்துவிட்டார். [8]
இறப்பு[தொகு]
28 செப்டம்பர் 2008 வேலைக்குச் செல்லும் வழியில் காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை மலாலை காகர் தனது வீட்டின் வெளியே தனது மகிழுந்தில் செல்லும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். [1] காகர் கொல்லப்பட்டபோது அவருக்கு ஆறு குழந்தைகள் இருந்ததாக அறிவிக்கப்பட்டது.
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 Saeed Shah (29 September 2008). "Taliban kill top policewoman". smh.com.au. 15 September 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Top Afghan policewoman shot dead". BBC News. 28 September 2008. 15 September 2013 அன்று பார்க்கப்பட்டது.
Ms Kakar, who was reported to be in her early 40s and had six children, was one of the most high-profile women in the country.
- ↑ Temple-Raston. "Kandahar's Top Cop is a Woman". Marie Claire. http://www.marieclaire.com/world/news/kandahar-cop. பார்த்த நாள்: 2008-09-28.
- ↑ "Afghan police work to overcome barriers for women" பரணிடப்பட்டது 2009-12-27 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Laghman Women's Affairs Official Assassinated". tolonews.com. 10 December 2012. 21 February 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 September 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Emma Graham-Harrison (4 July 2013). "Helmand's top female police officer shot dead". theguardian.com. 6 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Zubair Babakarkhail; Rob Crilly (4 July 2013). "Helmand's top female police officer shot dead". telegraph.co.uk. 6 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ BBC News (16 September 2013). "Top Afghanistan female police officer dies". 5 February 2014 அன்று பார்க்கப்பட்டது.