மலரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்றை விற்பனைக்காக பூச்செடிகளைக் கொண்டுள்ள பசுமைக்குடில்

மலரியல் அல்லது மலர் சாகுபடி என்பது தோட்டங்கள் பூ விற்பனையாளர்கள், மலர் தொழிற்சாலைகளில் மலர் பயிர்கள் மற்றும் அலங்காரத் தாவரங்களின் சாகுபடி முறைகளைப் பற்றி படிக்கும் தோட்டக்கலை அறிவியல் அறிவியல் துறையாகும். தாவரப் பெருக்க முநைகளைப் பயன்படுத்தி புதிய இரகங்களை உருவாக்கி வளா்ச்சியை ஏற்படுத்துவதே மலரியல் நிபுணர்களின் முக்கிய வேலையாகும்.

மலர்ப்பயிர்கள் என்பது படுக்கைத்தாவரங்கள், வீட்டுத்தாவரங்கள், பூந்தோட்டம் மற்றும் தொட்டிச் செடிகள், பசும் இலைகளுக்காக வளர்க்கும் தாவரங்கள் மற்றும் கொய் மலர்களை உள்ளடக்கியது. பொதுவாக பண்ணை நாற்று தாவரங்களிலிருந்து பூக்கும் தாவரப் பயிர்களான ஹெர்பெஸ்ஸஸ் வேறுபட்டவையாக உள்ளன. பெரும்பாலும் குறுஞ்செடிகள், படுக்கை மற்றும் பூந்தோட்டத் தாவரங்கள் இளம் மலர்ப்பயிர்களையும் (ஓராண்டு மற்றும் பல்லாண்டு தாவரங்கள்) காய்கறிப் பயிர்களையும் உள்ளடக்கியவை. அவை சிறு சிறுப் பைகள் (தட்டைகள், குழித்தட்டைகள்), தொட்டிகள் தொங்கும் கூடைகள் ஆகியவற்றில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வளர்க்கப்பட்டு, அதிகப் படியாக பூந்தோட்டங்களுக்காகவும், சில அலங்கார வேலைப்பாட்டிற்காகவும் விற்கப்படுகின்றன. பீலர்கோனியம் (ஜெரேனியம்), இம்பேடியன்ஸ் (பிசி லில்லீஸ்) மற்றும் பெடுனியா போன்றவை சிறந்தப் படுக்கை தாவரங்களாகும். அமெரிக்காவின் பயிரிடும்வகை பூந்தோட்டங்களில் சாமந்தியின் பல்வேறுச் சிற்றினங்கள் அதிகப்படியாக காணப்படுகின்றன.

உள்ளரங்குகளில் வளர்க்கப்படுவதற்காக மலர்ப்பயிர்கள் அதிகமாக தொட்டிகளில் விற்கப்படுகின்றன. பொய்ன் செட்டியா, ஆர்க்கிட்கள், சிவந்தி இனங்கள், அசாரியாஸ் போன்றவை அதிகமாக பயிரிடப்படும் அழகு மலர் தாவரங்களாகும். அலுவலகம், உணவகம், உணவு விடுதி ஆகியவற்றின் உள்ளரங்கு மற்றும் முற்றங்களில் வளர்க்கப்படும் இலைத்தாவரங்களும் தொட்டிகள் மற்றும் தொங்கும் கூடைகளில் விற்கப்படுகின்றன.

கொய் மலர்கள் பொதுவாக கொத்துக்களாகவும், இலையுடன் கூடிய பூச்சென்டுகளாகவும் விற்கப்படுகின்றன. கொய் மலர்கள் உற்பத்தியானது பிரித்தியேகமாக கொய் மலர் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது. இலை மற்றும் பண்ணையம் என்பது மலரியலின் சிறந்த வேலைப்பாடுகளான இடைவெளி, கவாத்து செய்யும் பயிற்சி, உகந்த மலர் அறுவடைப் பயிற்சி, அறுவடைக்கு பின் செய்நேர்த்தி முறைகள் (எடுத்துக்காட்டு; வேதியியல் மருந்துடன் நேர்த்தி) சேமிப்பு, பதப்படுத்துதல் மற்றும் சிப்பம்மிடல் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆஸ்ரேலியா மற்றும் அமெரிக்க நாடுகளில் சில மலர் பயிர் சிற்றினங்கள் காடுகளிலிருந்து பெறப்பட்டு, கொய் மலர் சாகுபடிச் சந்தைகளில் விற்கப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலரியல்&oldid=3566761" இருந்து மீள்விக்கப்பட்டது