மலபார் குக்குறுவான்
மலபார் குக்குறுவான் | |
---|---|
முதிர்ச்சியடைந்த மலபார் குக்குறுவான் (சகலேசுப்பூர்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | மெகலைமிடே
|
பேரினம்: | சைலோபோகன்
|
இனம்: | சை. மலபாரிகசு
|
இருசொற் பெயரீடு | |
சைலோபோகன் மலபாரிகசு (பிளைத், 1847)[2] | |
வேறு பெயர்கள் | |
புக்கோ மலபாரிக்கசு, சாந்தோலேமா மலபாரிகா, மெகலைமா மலபாரிகா |
மலபார் குக்குறுவான்(Malabar barbet)(சைலோபோகன் மலபாரிகசு) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆசியக் குக்குறுவான் ஆகும்[1] இது முன்பு கிரிம்சன்-மார்பு குக்குறுவான் (சைலோபோகன் ரூப்ரிகாபில்லசு) இனமாகக் கருதப்பட்டது. இது சில இடங்களில் செம்மார்புக் குக்குறுவான் (சைலோபோகன் கீமாசெபலா) வரம்பில் காணப்படுகிறது. ஆனால் இவற்றின் ஓசை விரைவானதாக உள்ளது.[3]
விளக்கம்
[தொகு]பிற சிற்றினங்களைக் காட்டிலும் விரைவாக ஒலிக்கும் அழைப்பினை இவைக் கொண்டுள்ளன.[4]
பரவலும் வாழிடமும்
[தொகு]இந்தச் சிற்றினம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கோவாவின் தெற்கிலிருந்து கேரளாவின் தென்பகுதி வரை ஈரமான பசுமையான காடுகளில் முக்கியமாகக் கடல்மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரமான பகுதிகளில் காணப்படுகிறது. காபி தோட்டங்களிலும் இவை காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பழம்தரும் பிகசு சிற்றினங்கள், பச்சைப் புறா மற்றும் மைனாக்களின் மந்தைகளுடன் காணப்படுகின்றன.[4]
நடத்தை மற்றும் சூழலியல்
[தொகு]இனப்பெருக்கம்
[தொகு]இந்த பறவைகள் பொதுவாக இனப்பெருக்க காலத்தில் இணையாகக் காணப்படுகின்றன. ஆனால் இனப்பெருக்கம் இல்லாத பருவத்தில் கூட்டமாக இருக்கும். பறக்கும் போது, இவற்றின் நேரான மற்றும் விரைவான பறக்கும் பண்பு வானம்பாடிகளை ஒத்திருக்கும். இனப்பெருக்க காலம் முக்கியமாக மழைக்கு முன்னதாக பிப்ரவரி-மார்ச் ஆகும். கூடுகளை மெல்லிய கிளைகளின் அடிப்பகுதியில் அமைக்கின்றது. கூடமைக்க சுமார் 18 நாட்கள் ஆகும். இந்த கூடு துளைகள் பெரும்பாலும் பெரிய குக்குறுவான்களால் அழிக்கப்படுகின்றன. இவை துளையைப் பெரிதாக்க முயற்சி செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கூட்டினை அமைக்கின்றது. ஒருமுறை இரண்டு முட்டைகள் வரை இடப்படுகின்றன. இவை 14 முதல் 15 நாட்கள் வரை அடைகாக்கும். முட்டைகள் பனை அணில்களால் (பன்னம்புலசு சிற்றினம்) வேட்டையாடப்படலாம். மேலும் இவை பொதுவாக முதிர்ச்சியடைந்த பறவைகளால் துரத்தப்படுகின்றன. குஞ்சு பொரிக்காத முட்டைகள் பெற்றோர்களால் அகற்றப்படுகின்றன. முதல் வாரத்தில் குஞ்சுகளுக்குப் பூச்சிகள் கொடுக்கப்பட்டு அதன் பிறகு பழங்கள் கொடுக்கப்படும். சுமார் 35 நாட்களில் குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறும்.[5]
உணவு
[தொகு]இந்த சிற்றினம் முக்கியமாகப் பழங்களை உண்கிறது. ஆனால் சில சமயங்களில் புழுக்கள், கறையான்கள், எறும்புகள் மற்றும் சிறிய கம்பளிப்பூச்சிகளை உண்ணுகிறது. கேரளாவில், பழம்தரும் மரங்கள் முக்கியமாக அத்தி சிற்றினங்கள், குறிப்பாக பைகசு ரெட்டூசா, பைகசு கிப்போசா மற்றும் பைகசு சைலா ஆகும். சிறிய பழங்களை உண்ணும் போது, இவை பழங்களை முழுவதுமாக விழுங்குவதற்குப் பதிலாக, கொத்தி உண்ணும். இனப்பெருக்கம் செய்யாத பருவத்தில், இவை பல்வேறு சிற்றினங்களுடன் உணவு தேடும் மந்தைகளுடன் இணைகின்றன. [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Psilopogon malabaricus". IUCN Red List of Threatened Species 2016: e.T22726150A94912818. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22726150A94912818.en. https://www.iucnredlist.org/species/22726150/94912818. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Blyth, E. (1847). "Report of the Curator, Museum of Zoology". Journal of the Asiatic Society of Bengal 16 (1): 385–387. https://archive.org/details/journalofasiatic161asia/page/386.
- ↑ Rasmussen, P. C. & J. C. Anderton. Birds of South Asia: The Ripley Guide. Volume 2.
- ↑ 4.0 4.1 Ali, Salim; Ripley, S.D. (1983). Handbook of the Birds of India and Pakistan. Volume 4 (2 ed.). New Delhi: Oxford University Press. pp. 161–162.
- ↑ Yahya, HSA (1988). "Breeding biology of Barbets, Megalaima spp. (Capitonidae: Piciformes) at Periyar Tiger Reserve, Kerala". J. Bombay Nat. Hist. Soc. 85 (3): 493–511. https://biodiversitylibrary.org/page/48805066.
- ↑ Yahya,Hafiz SA (2000). "Food and feeding habits of Indian Barbets, Megalaima spp.". J. Bombay Nat. Hist. Soc. 97 (1): 103–116. https://biodiversitylibrary.org/page/48567529.
பிற ஆதாரங்கள்
[தொகு]- Yahya,HSA (1990) கிரிம்சன் த்ரோட்டட் பார்பெட்டின் உணவுத் தேவை. உயிரியல் பூங்காவின் அச்சுப் பத்திரிகை 5(11):7
- யாஹ்யா, எச்எஸ்ஏ (1980) பார்பெட்ஸின் சூழலியல் மற்றும் உயிரியலின் ஒப்பீட்டு ஆய்வு, மெகலைமா எஸ்பிபி. (கேபிடோனிடே: பிசிஃபார்ம்ஸ்) கேரளாவின் பெரியார் புலிகள் சரணாலயத்தில் உள்ள மெகலைமா விரிடிஸ் (போடார்ட்) மற்றும் எம். ரூப்ரிகாபிலா மலாபரிகா (பிளைத்) ஆகியவற்றிற்கு சிறப்புக் குறிப்புடன். Ph. D. ஆய்வறிக்கை, பம்பாய் பல்கலைக்கழகம்.