மறைவான இசுலாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரகசிய இசுலாம் (Crypto-Islam) என்பது இசுலாம் சமயத்தை இரகசியமாகப் பின்பற்றியவர்கள். அதே சமயம் கிறித்துவம் போன்ற பிற சமய நம்பிக்கைகளை வெளிப்படையாக பின்பற்றுபவர்கள் ஆவார். இவர்களை மறைவான முஸ்லீம்கள் என்றும் அழைப்பர். திரிபுக் கொள்கை விசாரணைக் காலத்தில் ஸ்பெயின் மற்றும் சிசிலி நாட்டு முஸ்லீம்களை குறிக்க இரகசிய இசுலாமியர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. போர்த்துகீசியப் பேரரசு மற்றும் எசுப்பானியா பேரரசுகள் தூர கிழக்கில் கோவா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பரவிய போது பிலிப்பைன்ஸ் முஸ்லிம்கள் மற்றும் போர்த்துகீசிய முஸ்லிம்களும் திரிபுக் கொள்கை விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.[1]

வரலாற்று உதாரணங்கள்[தொகு]

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அகமத் இபின் காசிம் அல்-ஹஜாரி என்பவர் எழுதிய நூலில், 16ஆம் நூற்றாண்டில், இயேசுவைப் பற்றிய கத்தோலிக்க திருச்சபையின் கருத்துக்களை மறுத்த இரகசிய முஸ்லீம்கள், எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை காலத்தில் ஸ்பெயினிலிருந்து மொராக்கோவிற்கு எவ்வாறு தப்பிச் சென்றனர் என்பதை தனது நூலில் விளக்கியுள்ளார். மேலும் ஸ்பெயினில் இரகசிய முஸ்லிம்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றிய விவரங்களும் இந்நூலில் உள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஆக்சும் இராச்சியத்தை ஆண்ட மன்னர் அர்மா, ஆரம்பகால இசுலாம் மதம் மாறியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.

16 முதல் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை உருசியாவின் பூர்வீக முஸ்லிம்கள் உருசியப் பேரரசின் அதிகாரிகளால் அடிக்கடி துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். இந்த நேரத்தில், புதிதாக இசுலாமுக்கு மதம் மாறியவர்கள் இரகசியமாக இஸ்லாத்தை பின்பற்றினர். உருசிய முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கையை கடைப்பிடிக்க அனுமதித்தவுடன், கிறித்துவத்திற்கு மதம் மாறியவர்களில் பலர் இஸ்லாத்திற்கு திரும்பினார்கள்.[2][3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைவான_இசுலாம்&oldid=3689544" இலிருந்து மீள்விக்கப்பட்டது