கோவா சமயக் குற்றவிசாரணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவா சமயக் குற்ற விசாரணை

Inquisição de Goa
மரபு சின்னம் அல்லது சின்னம்
கோவா போர்த்துகேய சமயக்குற்ற விசாரணையின் சுவரொட்டி
வகை
வகை
போர்த்துகேய சமயக் குற்றவிசாரணையின் ஒரு பகுதி
வரலாறு
உருவாக்கம்1782
செயலிழப்பு1812
கூடும் இடம்
போர்த்துகேய இந்தியா
கோவா சமயக்குற்ற விசாரணை அலுவலகம்

கோவா சமயக்குற்ற விசாரணை ( Goa Inquisition) என்பது போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனியினரால் இந்தியாவில் கட்டாயப்படுத்தி கிறித்துவத்திற்கு மாறிய பல இந்துக்கள், வெளியில் கிறிஸ்தவர்களாகக் காட்டிக் கொண்டு, வீட்டில் இரகசியமாக இந்து சமய வழிபாடுகள் மற்றும் பழக்க வழக்கங்ளைப் பின்பற்றி இரகசிய இந்துக்களாக வாழ்ந்தவர்களைத் தண்டிக்கும் அமைப்பாகும்.[1][2] போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனியினர் கோவா, தமன் மற்றும் தியூ மற்றும் தாத்ரா மற்றும் நகர் அவேலி பகுதிகளைக் கைப்பற்றி போர்த்துகேயர்கள் 1505 முதல் 1961 வரை ஆண்டனர்.

கிறிஸ்துவ மதமாற்றம்[தொகு]

அக்காலத்தில் போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனிப் படைகளுடன் துணையுடன், போர்த்துக்கல் கத்தோலிக்க திருச்சபையினர் கோவா பகுதியில் வாழ்ந்த இந்து சமய மக்களை வலுக்கட்டாய கிறித்துவ சமயத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்தனர்..[3][note 1][5] இவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்ட பின்னரும் பல இந்துகளும் இஸ்லாமியர்களும் இரகசியமாக தமது மதங்களைக் கடைபிடித்தனர். இவ்வாறு இரகசியமாக இந்து வழிபாட்டு முறைகளை பின்பற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய இந்துக்கள் மீது 1782-அம் ஆண்டு முதல் சமயக் குற்ற விசாரணை நடத்தி போர்த்துகேயர்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.[6] [6][7][8] சிலர் மரண தண்டனைக்கும் ஆளானர்கள்[9][10]12782 முதல் 1800-ஆம் ஆண்டு வரை மொத்தம் 16,172 இரகசிய இந்துக்கள் மற்றும் இசுலாமியர்கள் சமயக் குற்றவிசாரணை மன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட்டனர்.[11]

சமய நூல்கள் எரிப்பு[தொகு]

சமயக்குற்ற விசாரணை அதிகாரிகள் இரகசிய இந்துக்கள் மற்றும் முஸ்லீகள் மறைத்து வைத்திருந்த சமசுகிருதம், உருது, கொங்கணி மற்றும் ஆங்கில நூல்களை பறிமுதல் செய்து எரித்தனர்.[12]

சமயக் குற்றவிசாரணை முடிவு[தொகு]

1800-ஆம் ஆண்டில் போர்த்துகேய இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் குடிமை உரிமைகள் வழங்கப்பட்டதன் மூலம், கிறித்தவத்திற்கு கட்டாய மதம் மாற்றப்பட்ட இந்துக்கள் மற்றும் இசுலாமியர்களை, சமயக் குற்ற விசாரணைகள் மூலம் தண்டணை வழக்கம் முடிவுற்றது. 1812 இல் சமயக் குற்றவிசாரணை ஒழிக்கப்பட்டபோது கோவா சமயக் குற்றா விசாரணையின் பெரும்பாலான பதிவுகள் போர்த்துகீசியர்களால் எரிக்கப்பட்டன[7]. எனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளையும் அறிய இயலாது.

சமயக் குற்ற விசாரணையில் தண்டிக்கப்பட்டவர்கள்[தொகு]

கிறித்துவத்திற்கு மாறிய பின்னரும் இந்து அல்லது இஸ்லாமிய பண்டிகைகளைக் கொண்டாடுவோரும், கிறித்துவர் அல்லாதவர்களை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றும் போர்த்துகீசிய முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்தவர்கள் மீதும் விசாரணைக்குழு வழக்குத் தொடுத்தது.[6] விசாரணைச் சட்டங்கள் இந்து மதம், இஸ்லாம் & யூத மதம் மற்றும் பழங்குடியான கொங்கனி மொழி மற்றும் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்துவதை கிரிமினல் குற்றமாக அறிவித்தது. கத்தோலிக்க திருச்சபையால் கிறித்துவத்திதற்கு மதம் மாறியவர்களில் 74% இரகசிய இந்துக்கள் என குற்றவிசாரணையில் முடிவு செய்யப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. கிறித்துவத்திற்கு மதம் மாறிய இசுலாமியர்களில் 1.5% இரகசிய முஸ்லீம்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டணை வழங்கப்பட்டது.[13]

விசாரணைக்குப் பின்னான பாகுபாடு[தொகு]

கோவா சமயக் குற்றவிசாரணை 1812 இல் முடிவடைந்தாலும், போர்த்துகீசிய கிறிஸ்தவ ஆட்சியின் கீழ் இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு 1705 முதல் 1840 வரை செயல்படுத்தப்பட்ட ஜெண்டி (Xenddi) வரி போன்ற பிற வடிவங்களில் தொடர்ந்தது, ஜெண்டி வரியானது ஜிஸ்யா வரியை ஒத்தது[14][15][16]. 1838 ஆம் ஆண்டின் போர்த்துகீசிய அரசியலமைப்பு மற்றும் கோவா மற்றும் டாமோன் ஆகியவற்றின் போர்த்துகீசிய சிவில் கோட் மூலம் மதச்சார்பின்மை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மதப் பாகுபாடு முடிவுக்கு வந்தது.

கோவா சமயக் குற்றவிசாரணையால் தண்டிக்கப்பட்டவர்கள்
(1782-1800)[note 2]
வகுப்பினர் விழுக்காடு[13]
பிற்படுத்தப்பட்டவர்கள் 18.5%
ஒடுக்கப்பட்டவர்கள் & பழங்குடிகள்[17] 17.5%
சத்திரியர்கள்
[18]
7%
பிராமணர்கள் 5%

பிண்ணனி[தொகு]

கோவாவில் 1583 சூலை 25 அன்று குடியேற்றக்கால போர்த்துக்கீச அரசு நிருவாகம் இந்துக் கோவில்களை அழித்தும், உள்ளூர் இந்துக்களை கட்டாயமாக கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளூர் இந்துக்கள் ஈடுபட்ட குங்கோலிம் கிளர்ச்சி செய்தனர்.[19] இக்கிளர்ச்சியின் போது குங்கோலிம் நகரில் கிறித்தவ குருமார்களும் பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Goa Inquisition was most merciless and cruel". Rediff. 14 September 2005. பார்க்கப்பட்ட நாள் 14 April 2009.
 2. Lauren Benton (2002). Law and Colonial Cultures: Legal Regimes in World History, 1400-1900. Cambridge University Press. pp. 114–126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-00926-3.
 3. Donald Frederick Lach; Edwin J. Van Kley (1998). Asia in the Making of Europe. University of Chicago Press. pp. 130–167, 890–891 with footnotes. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-46767-2.
 4. Dauril Alden (1996). The Making of an Enterprise: The Society of Jesus in Portugal, Its Empire, and Beyond, 1540-1750. Stanford University Press. pp. 25–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-2271-1.
 5. Daus (1983), "Die Erfindung", pp. 61-66(in இடாய்ச்சு மொழி)
 6. 6.0 6.1 6.2 ANTÓNIO JOSÉ SARAIVA (1985), Salomon, H. P. and Sassoon, I. S. D. (Translators, 2001), The Marrano Factory. The Portuguese Inquisition and Its New Christians, 1536–1765 (Brill Academic, 2001), pp. 345–353.
 7. 7.0 7.1 Hannah Chapelle Wojciehowski (2011). Group Identity in the Renaissance World. Cambridge University Press. pp. 215–216 with footnotes 98–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-00360-6.
 8. Gustav Henningsen; Marisa Rey-Henningsen (1979). Inquisition and Interdisciplinary History. Dansk folkemindesamling. p. 125.
 9. Maria Aurora Couto (2005). Goa: A Daughter's Story. Penguin Books. pp. 109–121, 128–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5118-095-1.
 10. Augustine Kanjamala (2014). The Future of Christian Mission in India: Toward a New Paradigm for the Third Millennium. Wipf and Stock. pp. 165–166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-62032-315-1.
 11. "Goa was birthplace of Indo-Western garments: Wendell Rodricks". Deccan Herald (New Delhi, India). 27 January 2012. http://www.deccanherald.com/content/222426/goa-birthplace-indo-western-garments.html. 
 12. Haig A. Bosmajian (2006). Burning Books. McFarland. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-2208-1.
 13. 13.0 13.1 13.2 António José Saraiva (2001). The Marrano Factory: The Portuguese Inquisition and Its New Christians 1536-1765. BRILL Academic. pp. 352–357. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-12080-7.
 14. Teotonio R. De Souza (1994). Discoveries, Missionary Expansion, and Asian Cultures. Concept. pp. 93–95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-497-6.
 15. Teotonio R. De Souza (1994). Goa to Me. Concept. pp. 112–113. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-504-1.
 16. Rene J. Barendse (2009). Arabian Seas, 1700 – 1763. BRILL Academic. pp. 697–698. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-17658-4.
 17. Serrão, José Vicente; Motta, Márcia; Miranda, Susana Münch (2016). Serrão, José Vicente; Motta, Márcia; Miranda, Susana Münch. eds. Dicionário da Terra e do Território no Império Português. E-Dicionário da Terra e do Território no Império Português. 4. Lisbon: CEHC-IUL. doi:10.15847/cehc.edittip.2013ss. https://edittip.net/2016/04/03/curumbim/. 
 18. Rene Barendse (2009). Arabian Seas 1700 – 1763 (4 vols.). BRILL Academic. pp. 1406–1407. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-474-3002-5.
 19. "Goa History -WHY CUNCOLIM MARTYRS?". Archived from the original on 2008-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-10-09.

Notes[தொகு]

a ^ The Papal bull Licet ab initio proclaimed an Apostolic constitution on 21 July 1542.[1][2]
b ^ In his 1731 letter to King João V, the Inquisitor António Amaral Coutinho states:[3]
 1. Early texts use the term "the Roman fathers" for Jesuits. The first Jesuits arrived in Goa in 1540.[4]
 2. The percent data includes those charged with Crypto-Hinduism and where the caste is identified. For about 50% of the victims, this data is unavailable.[13]

உசாத்துணை[தொகு]

 • Richard Zimler. Guardian of the Dawn (Delta Publishing, 2005).
 • Benton, Lauren. Law and Colonial Cultures: Legal Regimes in World History, 1400–1900 (Cambridge, 2002).
 • D'Costa Anthony, S.J. The Christianisation of the Goa Islands, 1510-1567 (Bombay, 1965).
 • Hunter, William W. The Imperial Gazetteer of India (Trubner & Co, 1886).
 • Priolkar, A. K. The Goa Inquisition (Bombay, 1961).
 • Sakshena, R. N. Goa: Into the Mainstream (Abhinav Publications, 2003).
 • Saraiva, Antonio Jose. The Marrano Factory. The Portuguese Inquisition and Its New Christians, 1536–1765 (Brill, 2001).
 • Shirodhkar, P. P. Socio-Cultural life in Goa during the 16th century.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

 1. Bullarum diplomatum et privilegiorum santorum romanorum pontificum, Augustae Taurinorum : Seb. Franco et Henrico Dalmazzo editoribus
 2. Christopher Ocker (2007). Politics and Reformations: Histories and Reformations. BRILL Academic. pp. 91–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-16172-6.
 3. Priolkar, Anant Kakba; Dellon, Gabriel; Buchanan, Claudius; (1961), The Goa Inquisition: being a quatercentenary commemoration study of the inquisition in India, Bombay University Press, p. 177
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவா_சமயக்_குற்றவிசாரணை&oldid=3689427" இலிருந்து மீள்விக்கப்பட்டது