மர்கோர்கிசு கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மர்கோர்கிசு கான் என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார். இவர் 1455 - 1465இல் ஆட்சி புரிந்தார். இவர் உகேக்து கான் என்றும் அறியப்படுகிறார்.

மர்கோர்கிசு தைசுன் கானின் மகன்களிலேயே இளையவரும், தைசுன் கானின் மனைவிகளிலேயே இளையவருமான கதுன் சமாருக்கும் பிறந்தவர் ஆவார். எசன் கொல்லப்பட்டதற்குப் பிறகு இவரது தாய் சமார் கான்காய் சவ்கானில் இருந்த நான்கு ஒயிரட்களைத் தாக்கினார். இந்தப் படையெடுப்பின் போது ஒரு பெட்டியில் குதிரை மீது வைத்து எட்டு வயதான மர்கோர்கிசு கொண்டு செல்லப்பட்டார். இவ்வாறாக, இவர் பின்னாட்களில் உகேக்து கான் என்று அழைக்கப்பட்டார். அவர்கள் ஒயிரட்களைத் தோற்கடித்துக் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் திரும்பினர்.

இதற்குப் பிறகு ஏழு துமேத்களின் சமார் தைபுவும், தோகோலோனும் மர்கோர்கிசு சிறுவனாக இருந்த போது ககான் பட்டத்தைச் சூட்டினார். கார்ச்சின் இன புலாய் மற்றும் தோகோலோன் ஆகியோர் உண்மையான சக்தியைப் பெற்றிருந்தனர். ஆதிக்கத்திற்காக இவர்கள் இருவரும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டனர். மர்கோர்கிசுவுக்கு உகேக்து என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. ஏனெனில், யுத்தங்களின் போது இவர் வண்டிக்குள் அமர்ந்திருந்த காரணத்தால் இப்பட்டம் இவருக்குக் கொடுக்கப்பட்டது.

மிங் அரசமரபுடன் வணிக உறவுகளை ஆரம்பிக்கப் புலாய் முயற்சித்தார். ஆனால், மிங் அரசமரபு மறுத்தது. 1460 மற்றும் 1461இல் புலாய் தொடர்ந்து மிங் அரசமரபு மீது படையெடுத்தார். மேலும் அடுத்த ஆண்டு மிங்கிற்குத் திறை செலுத்தி வந்த உரியாங்கை தோயின் பாதுகாவலர்களையும் இவர் தாக்கினர். மிங் அரசவையானது இறுதியாக மங்கோலியர்களுடன் அமைதியை நிறுவ ஒப்புக்கொண்டது.

1465இல் மங்கோலிய உயர்குடியினர் வெளிப்படையாக ஒருவருக்கொருவர் எதிராகத் தங்களது அதிகாரப் போட்டியில் போருக்குச் சென்றனர். இதன் விளைவாக மர்கோர்கிசு கான் கொல்லப்பட்டார். இந்த இளம் கானுக்குப் பிறகு, இவரது மூத்த ஒன்று விட்ட அண்ணன் மோலோன் கான் தோகுசு மேங்கே பதவிக்கு வந்தார்.[1]

உசாத்துணை[தொகு]

  1. Societas Uralo-Altaica - Ural-Altaische Jahrbücher, Volumes 7–8, p. 193
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்கோர்கிசு_கான்&oldid=3638003" இருந்து மீள்விக்கப்பட்டது