எசன் தைசி
Appearance
எசன் | |||||
---|---|---|---|---|---|
வடக்கு யுவான் அரசமரபின் ககான் | |||||
ஆட்சிக்காலம் | 12 செப்டம்பர் 1453[1]–1454 | ||||
முன்னையவர் | அக்பர்சின் | ||||
பின்னையவர் | மர்கோர்கிசு கான் | ||||
பிறப்பு | வெளி மங்கோலியா | ||||
இறப்பு | 1455 வெளி மங்கோலியா | ||||
துணைவர் | மகுதும் கனிம் | ||||
| |||||
மரபு | சோரோசு | ||||
அரசமரபு | வடக்கு யுவான் | ||||
தந்தை | தோகோன் தைசி | ||||
மதம் | ஷாமன் மதம். இசுலாமுக்கு மதம் மாறினார் (பெயரளவுக்கு). |
எசன்[2] என்பவர் ஒரு சக்திவாய்ந்த ஒயிரட்டு தைசி ஆவார். இவர் 12 செப்டம்பர் 1453 முதல் 1454ஆம் ஆண்டு வரை வடக்கு யுவான் அரசமரபின் உண்மையான ஆட்சியாளராக இருந்தார். துமு கோட்டை யுத்தத்தில் 1450ஆம் ஆண்டு மிங் சீனாவின் பேரரசர் இங்சோங்கைப் பிடித்ததற்காகவும், மங்கோலியப் பழங்குடியினங்களைக் குறுகிய காலத்திற்கு மீண்டும் ஒருங்கிணைத்ததற்காகவும் இவர் பரவலாக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தின் போது நான்கு ஒயிரட்டுகள் தங்களது உச்சபட்ச அதிகாரத்தைப் பெற்றிருந்தனர்.
