உள்ளடக்கத்துக்குச் செல்

தைசுன் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தைசுன் கான் என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார். இவர் 1433 - 1452இல் ஆட்சி புரிந்தார். இவரது இயற்பெயர் தோக்தோவா புகா ஆகும். இவரது பெயரளவிலான ஆட்சிக்குக் கீழ் ஒயிரட்கள் மங்கோலியப் பழங்குடி இனங்களை வெற்றிகரமாக மீண்டும் ஒன்றிணைத்தனர். 1409ஆம் ஆண்டின் கெர்லென் யுத்தத்திற்குப் பிறகு ஒயிரட்கள் முதல் முறையாக தங்களுக்குத் தெற்கில் இருந்த மிங் அரசமரபுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

1425இல் முந்தைய கான் ஒயிரடையின் இறப்பிற்குப் பிறகு இரு தரப்பினருக்கும் அழிவை ஏற்படுத்திய ஒரு போரானது பல ஆண்டுகளுக்கு மகமுது (பகாமு, படுலா) தலைமையிலான ஒயிரட்கள் மற்றும் ஒருக் தெமூர் கானின் குடும்பத்தினரால் தலைமை தாங்கப்பட்ட மேற்கு மங்கோலிய இனங்களுக்கு மத்தியில் வெடித்தது. அதே நேரத்தில் நடு மற்றும் கிழக்கு மங்கோலிய இனங்கள் அடய் கானைப் பெரிய கானாக 1425இல் ஒயிரடையின் இறப்பிற்குச் சிறிது காலத்திலேயே அறிவித்தன.

தோக்தோவா புகா அஜையின் மூத்த மகன் ஆவார். எல்பெக் நிகுலேசுக்சி கானுக்கும் (இ. 1399), அவருடைய மனைவி அழகிய ஒல்ஜெயிடுவுக்கும் எல்பெக் நிகுலேசுக்சி கானின் இறப்பிற்குப் பிறகு அஜை பிறந்தார்.[1] தோக்தோவா புகாவுக்கு இரண்டு தம்பிகள் இருந்தனர். அவர்கள் அக்பர்சின் மற்றும் மன்டூல் ஆகியோராவர். மேற்கு மங்கோலியாவில் தனது சகோதரர்களுடன் அலைந்து திரிந்த நேரத்தில், தோக்தோவா புகா மகமுதுவின் மகனும், மகமுதுவுக்குப் பின் வந்த ஆட்சியாளரான நான்கு ஒயிரட்களின் தோகன் தைசியைச் சந்தித்தார். தோகன் தைசி தனது மகளை தோக்தோவா புகாவுக்கு மணமுடித்துக் கொடுத்தார். இவரை ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்த விரும்பினார். 1433இல் தங்களது சொந்த ககானாகத் தோக்தோவா புகாவுக்கு ஒயிரட்கள் மகுடம் சூட்டினர். எதிரெதிர் மங்கோலிய இனங்களால் ஆதரவளிக்கப்பட்ட ஒரே நேரத்தில் இரண்டு கான்கள் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு இது வழிவகுத்தது

உசாத்துணை[தொகு]

  1. Sh.Tseyen-Oidov-Chinggis Bogdoos Ligden Khutugt hurtel (Khaad), p. 144.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைசுன்_கான்&oldid=3637986" இலிருந்து மீள்விக்கப்பட்டது