மராத்திய தமிழியல்
மராத்திய தமிழியல் என்பது மராத்தி மொழிக்கும், மராத்திய மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.
"மராத்திய சரபோஜி மன்னர்கள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டார்கள். மராத்திச் சொற்கள் சில தமிழ்ப் பேச்சில் கலந்தன."[1]
"தமிழகத்தின் தென்பகுதியான தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு திருச்சி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளை கி.பி 1676 முதல் 1855 வரையில் ஏறத்தாழ 180 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் மராட்டிய மன்னர்கள் ஆவார்கள்." அன்று தமிழ்நாட்டை ஆண்ட நாயக்கர்களுக்கிடையேயான பிரச்சினைகள் காரணமாக ஏகோஜியே தஞ்சையின் முதலாம் மன்னராக 1676 ஆம் ஆண்டு முடிசூட்டிக்கொண்டார். இவரை 'ஏகராஜ மகாராஜ' என்றும் குறிப்பிடுவதுண்டு. "இம்மன்னர் காலம் முதல் தமிழகத்தில் தமிழ், வடமொழி, தெலுங்கு மொழிகளுடன் மராட்டியும் வளம்பெறத் தொடங்கியது. எகோஜியும் வடமொழி, தெலுங்கு, தமிழ், மராட்டி ஆகிய மொழிகளில் ஆற்றல் பெற்றிருந்தார்." இவரைத் தொடர்ந்து வந்த சகஜி (1684-1712) மன்னரும் தமிழ், தெலுங்கு, மராட்டி, வடமொழி, இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்று இருந்தார். இவரது அவையில் பல தமிழ்ப் புலவர்களும் இருந்தார்கள்.[2]
எப்படி இருப்பினும், தமிழகத்தில் மராட்டிய ஆட்சி தமிழுக்கு ஒரு வறட்சியான கால கட்டமாகவே கருதமுடியும். தமிழுக்குக் கிடைத்திருக்க கூடிய பல வளங்கள் சிதறடிக்கப்பட்டன, அல்லது தடைப்பட்டன. தமிழைப் பொறுத்தவரை இதை ஒரு அன்னிய ஆட்சியாவே கருதலாம்.
தமிழில் உள்ள மாராத்திச் சொற்கள்
[தொகு]- சேமியா
- கிச்சடி
- கசாயம்
- கங்காலம்
- கிண்டி
- ஜாடி
- சாலிகை
- குண்டான்
- கில்லாடி
- அபாண்டம்
- வில்லங்கம்
- தடவை
- ஜாஸ்தி
- சலவை
- கொட்டு
- சந்து
- கலிங்கம்
- பீருடை
- படவா
- நீச்சு
- கத்திரிகோல்
- ராத்திரி
- பாக்கி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மு. வரதராசன். (2004 பதிப்பு). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி. பக்கம் 21.
- ↑ ஆ. குணசேகரன். 2004. சரசுவதி மகால் நூலகம்: தஞ்சை மராட்டிய மன்னர்களின் நூலகப் பணிகள். சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
உசாத்துணைகள்
[தொகு]- சு. சக்திவேல். (1984). தமிழ்மொழி வரலாறு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.