கன்னடத் தமிழியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ் போன்று முக்கிய திராவிட மொழிகளின் ஒன்றாகிய கன்னட மொழிக்கும், தமிழ்நாட்டுக்கு ஓர் எல்லை மாநிலமான கர்நாடகத்தில் வசிக்கும் கர்நாடகர்களுக்கும் இருக்கும் தொன்மையான நெருக்கமான மொழி, பண்பாட்டு, அரசியல், பொருளாதார தொடர்புகளையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் கன்னடத் தமிழியல் ஆகும்.
தமிழ் மற்றும் கன்னடம் இரண்டுக்கும் திராவிட மொழி என்ற அடிப்படையில் மிக நெருங்கிய ஒற்றுமை உண்டு
தமிழில் வழக்கில் இல்லாத பல பழங்காலத்தை சேர்ந்த பல சொற்கள் இன்னும் கன்னடத்தில் பேச்சு மொழியாக இருப்பதைக் காணலாம் உதாரணத்திற்கு
ஆந்தை(கூகை) கன்னடத்தில் கூபே,
அங்காடி(கடை) கன்னடத்தில் அங்காடி,
அழை (கரை) கன்னடத்தில் கரை,
குளிர் (தண்) கன்னடத்தில் தண்,
கிணறு (வாவி) கன்னடத்தில் (B)பாவி,
காது (செவி) கன்னடத்தில் கிவி,
எழுது (வரை) கன்னடத்தில் (B)பரை,
படி (ஓது) கன்னடத்தில் ஓது,
பயம் (அஞ்சுவது) கன்னடத்தில் அஞ்சு,
உடல் (மெய்) கன்னடத்தில் மெய்,
சோறு (அன்னம்) கன்னடத்தில் அன்னம்,