தாய் தமிழியல்
Appearance
தாய் தமிழியல் (Thai Tamil Studies) என்பது தாய் மொழி, தாய்லாந்து, தாய் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். தாய் மொழியில் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. தொங்கம் (தங்கம்), கப்பல் (கம்பன்), கை (கை), கா (கால்), தொராசாப் (தொலைபேசி), தொராதாட் (தொலைக்காட்சி), நாளிகா (நாளிகை), மல்லி (மல்லி), வினாடி (வினாடி), கனா (கணம்), மாங்க் (மாங்காய்), சிந்தனா (சிந்தனை), பார்வே (பார்வை) எனப் பல தமிழ் சொற்கள் தாய் மொழியில் இடம்பெற்றுள்ளன.[1]