மரக்கட்டை வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Log home.JPG
Izba.jpg

மரக்கட்டை வீடு என்பது மரக்கட்டைகளை ஒன்றுன் மீது ஒன்றாகப் பொருத்திக் கட்டப்பட்ட வீடு ஆகும். மரக்கட்டைகள் இலகுவாக அல்லது மலிந்த விலையில் கிடைக்குமாயின் இந்த வீட்டை குறைந்த பொருட்செலவில் கட்டலாம். எனினும் குளிர்நாடுகளில் காப்பிடுதல் (insulation) செய்தலுக்கு கணிசமான பணம் செலவாகும்.

தற்காலத்தில் இரு வகையான மரக்கட்டை வீடுகள் உண்டு.

கைவேலை மரக்கட்டை வீடு: மரக்கட்டைகளை உரித்து அப்படியே பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடு.
ஆலை மரக்கட்டை வீடு: மரக்கட்டைகளை இயந்திர அச்சாக்கி (Log house moulder) மூலம் சீர்மைப்படுத்தி கட்டப்பட்ட வீடு.

முதலாவது செலவு குறைவானது. இரண்டாவது செலவு கூடியது. ஆனால் மரக்கட்டைகள் அளவிலும் தோற்றத்தில் சீர்மையாக இருக்கும்.

வரலாறு[தொகு]

கையால் கட்டப்பட்ட மரக்கட்டை வீடுகள் ஐரோப்பிய நாடுகளில் பண்டைக் காலத்தில் இருந்து கட்டப்பட்டு வந்திருக்கிறது. அமெரிக்காக்கங்களில் ஐரோப்பியர் முதலில் வந்த போது மரக்கட்டைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அதனால் இந்த வகை வீடுகளையே பெரிதும் கட்டினார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்கட்டை_வீடு&oldid=1369464" இருந்து மீள்விக்கப்பட்டது