உள்ளடக்கத்துக்குச் செல்

மன்னார்சாலை கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னார்சாலை கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:ஆலப்புழா
அமைவு:ஹரிபாட்
கோயில் தகவல்கள்
இணையதளம்:www.mannarasala.org

மன்னார்சாலை ஸ்ரீ நாகராஜா கோவில் (മണ്ണാറശ്ശാല ശ്രീ നാഗരാജ ക്ഷേത്രം) இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில். பாம்புக்களின் அரசனான நாகராஜரை வழிபடும் அனைத்துலகிலும் நன்கு பெயரும் புகழும் பெற்ற புண்ணியத்தல மையமாகும்.

சிறப்பு

[தொகு]

"மன்னார்சாலை" என்று புகழ் பெற்ற இந்த நாகராஜரின் கோவில், இதர நாக தேவதைகளின் கோவில்களைப் போல, அடர்ந்த காடுகளின் மத்தியில் குடிகொண்டதாகும். இந்த மன்னார்சாலை கோவிலில் 30,000 க்கும் மேற்பட்ட நாக தேவதைகளின் சிலைகளை, பாதையின் இருபுறமும், மற்றும் மரத்தடிகளிலும் காணலாம், மேலும் இது போன்று காணப்படும் நாகங்களை வழிபடும் கோவில்களில், கேரளாவில் அமைந்துள்ள இக்கோவில் மிகவும் பெரியதாகும். குழந்தைப் பேறு கிடைக்கப் பெறாத மாந்தர் குடும்ப சகிதமாக இக்கோவிலுக்கு வந்து, குழந்தைக்காக வரம் வேண்டி இங்கே வந்து வழிபடுவதும், குழந்தை பிறந்த பிறகு, நேர்த்திக் கடனை தீர்ப்பதற்காக மீண்டும் கோவிலுக்கு வந்து, தமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளை இங்கு செலுத்துவார்கள், அவற்றில் நாகராஜரின் பிம்பங்கள் பொறித்த ஸ்வரூபங்களும், சிலைகளும் இடம் பெறும்.

இங்கே கோவிலில் கிடைக்கப்பெறும் மஞ்சளால் குழைத்த அருட் பிரசாதம் (മഞ്ഞൾ കുഴമ്പ്) நோய்களை தீர்க்க வல்லதாகும்.

அமைவிடம்

[தொகு]

கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 47 இல் அமைந்திருக்கும் ஹரிப்பாடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், வடகிழக்கு பாகத்தில், இந்தக் கோவில் நிலை கொண்டுள்ளது. கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் தூரத்திலும், மற்றும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்திலும், இக்கோவில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்சாலை_கோவில்&oldid=3712649" இலிருந்து மீள்விக்கப்பட்டது