தளி சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தளி சிவன் கோயில்
முகப்புத் தோற்றம்
தளி சிவன் கோயில் is located in கேரளம்
தளி சிவன் கோயில்
கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:கோழிக்கோடு மாவட்டம்
அமைவு:பாளையம்
ஆள்கூறுகள்:11°14′52″N 75°47′14″E / 11.247740°N 75.787338°E / 11.247740; 75.787338
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:(கேரள பாரம்பரிய கட்டடக்கலை)
இணையதளம்:http://www.calicuttalimahakshetra.com/

தளி சிவன் கோயில் அல்லது தளி மகாசேத்திரம் என்பது கேரளத்தின், கோழிக்கோடு நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இந்த கோயில் 14 ஆம் நூற்றாண்டில் கோழிகோடு அரசரான திருமூலபாத் என்பவரால் கட்டப்பட்டது. [1] [2]

வரலாறு[தொகு]

கோழிக்கோட்டில் உள்ள பழமையான கோயில்களில் தளி கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலை சுவாமி திருமுலபாத் கட்டியுள்ளார். கோழிக்கோடு நகரத்தின் உருவாக்கம், செழிப்பு ஆகியவற்றுடன் இந்த பழங்கால கோவிலின் புனிதத்தன்மையுடன் நெருக்கமாக தொடர்புகொண்டது. கோயிலின் கருவறையில் உள்ள இலிங்கமானது துவாபர யுகத்தின் முடிவில் பரசுராமரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. கருவறையில் உள்ள திருவுருவானது உமமகேசுவர உருவாகும். இந்த கோயில் 1500 ஆண்டுகள் பழமையானது. இது கோழிக்கோடு இராச்சியதின் ஆட்சியின் போது உச்சகட்ட வளர்ச்சியை அடைந்தது. கோயிலின் தற்போதைய அமைப்பொடு 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. [3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tali Temple, Revathy Pattathanam, Kozhikode, Kerala, India". Kerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 9 June 2017.
  2. "Calicuttalimahakshetram". Pooja Time. Archived from the original on 31 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 9 June 2017.
  3. "History". Archived from the original on 2017-12-28. பார்க்கப்பட்ட நாள் 2020-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளி_சிவன்_கோயில்&oldid=3836989" இலிருந்து மீள்விக்கப்பட்டது