மனாசேயின் புதல்வர்கள் (Bnei Menashe) இந்தியாவின் வடகிழக்கு எல்லை மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் பகுதியில் வாழும் ஒரு சிறிய இனக்குழுவாகும். இவர்கள் இசுரேலின் இழந்த கோத்திரங்களில் ஒன்றின் வாரிசுகள் என்று தங்களை அழைப்பதோடு, யூதத்தையும் கடைப்பிடிக்கிறார்கள்.[2] மனாசேயின் புதல்வர்கள் எனப்படும் இவர்கள் மிசோ, குகி, சின் மக்கள் இனத்தவராகவும், திபெத்திய-பர்மிய மொழிகள் பேசுபவராகவும், இவர்களுடைய மூதாதையர் 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் மியான்மர் பகுதியில் இருந்து ஏழு சகோதரி மாநிலங்களுக்கு குடியேறியவர்களாகவும் உள்ளனர்.[3] 20 ஆம் நூற்றாண்டின் கடைசியில் யூதப் போதகர் ஒருவரால் மனாசே வழி வந்தவர்கள் என்ற பொருளில் "மனாசேயின் புதல்வர்கள்" என அழைக்கப்பட்டனர்.[4] இரு வடகிழக்கு மாநிலங்களில் வாழும் 3.7 மில்லியனுக்கு மேற்பட்டவர்களில் பலர் தங்களை இவ்வாறு கருதுவதில்லை. சிலர் இந்தியாவில் இருந்து பிரிய வேண்டும் என்ற இயக்கத்திற்கு ஆதரவளித்தனர்.
↑Weil, Shalva. "Double Conversion among the 'Children of Menasseh'" in Georg Pfeffer and Deepak K. Behera (eds) Contemporary Society Tribal Studies, New Delhi: Concept, pp. 84–102. 1996 Weil, Shalva. "Lost Israelites from North-East India: Re-Traditionalisation and Conversion among the Shinlung from the Indo-Burmese Borderlands", The Anthropologist, 2004. 6(3): 219–233.