மது அருந்தகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |


மது அருந்தகம் (bar) என்பது வணிக விரிவாக்க நோக்கில் கட்டப்பட்ட ஒரு இடம் ஆகும். பொதுவாக ஆல்ககால் கலந்த மதுபானங்களும், வடிகட்டி முறையில் தயாரித்த சாராய வகைகளும், பீர், ஒயின் மற்றும் காக்டெய்ல்கள் வகைகளும் பரிமாறப்படும் விற்பனை வளாகம் ஆகும்.
ஒரு மது அருந்தகத்தில் நாற்காலிகளும் சாயும் இருக்கைகளும் அல்லது சொகுசு இருக்கைகளும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றும் இருக்க கூடும். அதனுடன் கூடிய மேசைகளும் அமைக்கப்பட்டிருக்கலாம். சில அருந்தகங்களில் பொழுதுபோக்கு நோக்கிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கிலும் மேடை இசைக்குழுக்களோ, நகைச்சுவை நிகழ்ச்சியாளர்களோ கேளிக்கை நடன மங்கைகளோ அல்லது துகிலுரி நடன மங்கைகளோ இருக்ககூடும். மேடை இசைக்குளுக்களோடு இணைந்த மது அருந்தகங்கள் இசை அருந்தகங்கள் என அழைக்கபடுகிறன
அருந்தகங்கள் பலவகை உண்டு. சிலவகை அருந்தகங்கள் வாடிக்கயாளர்களுக்கென Happy Hours எனப்படும் சந்தோச நேரங்களை ஒதுக்கி வைத்துள்ளன.
வரலாறு[தொகு]

இந்த மது அருந்தகங்கள் வரலாறு முழுமைக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் விளங்கி வந்துள்ளன. பொதுவாக மக்கள் மது அருந்துவதற்காக ஒன்றாக கூடிய இடங்களையே எல்லா பெயர்களும் குறித்து வந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளீட்ட மேலை நாடுகளில் ஆல்கஹால் கலந்த பானங்களுக்கு தடை இருந்து வந்ததது. இதன் விளைவாக அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்ட விரோதமாக மது அருந்தகங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றை அவர்கள் "SPEAKEASIES" என்றும் "BLIND PIGS" என்றும் சங்கேத வார்த்தைகள் வைத்து அழைத்துள்ளனர்.
சட்ட கட்டுபாடுகள்[தொகு]
பல சட்டதிட்ட வரையறைக்குட்பட்ட எல்லைகளில் மது அருந்தகங்களில் வயது வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. சிறுவயதினருக்கு அனுமதி கிடையாது.
பெரும்பாலும் மாநகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் இருக்கும் அருந்தகங்கள் இந்த சட்டத்தினை மதித்து நடக்கின்றன. புருனை, ஈரான், லிபியா, சவுதி அரேபியா, மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜா போன்ற சில இஸ்லாமிய நாடுகளில் மதங்களின் கட்டுபாடினால் மது அருந்துதல் கிடையாது. எனவே அங்கெல்லாம் அருந்தகங்களுக்கு அனுமதி இல்லை.