மண் வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண் வேதியியல் (Soil chemistry), மண்ணின் வேதியியல் பண்புகளைப் பற்றி படிக்கும் ஒரு இயல் ஆகும். மண் வேதியியலானது கனிம இயைபு, மண்ணில் உள்ள உயிரிய பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளால் பாதிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

1960 களின் பிற்பகுதி வரையிலும் மண் வேதியியல் தாவரங்களின் வளர்ச்சி மற்றும் மகசூலைப் பாதிக்கக்கூடிய மண்ணில் நடைபெறும் வேதிவினைகளில் மட்டுமே முதன்மையாக கவனம் செலுத்தியது. அதற்குப் பிறகே, சுற்றுச்சூழல் மாசுபாடு, கரிம மற்றும் கனிமப் பொருட்களால் மண்ணில் ஏற்படும் சீர்கேடு, ஆற்றல் மிகு சூழல் நலம், சூழல் சார்ந்த உடல் நல ஆபத்துகள் ஆகியவற்றின் மீது அக்கறையை வளர்த்துக் கொண்டது. இறுதியாக, மண் வேதியியலின் முக்கியத்துவமானது மண்ணின் தோற்றம், பண்பு, பயன் இவை பற்றிய ஆய்வு மற்றும் வேளாண்மை சார்ந்த மண் அறிவியல் ஆகியவற்றிலிருந்து சுற்றுச்சூழல் சார்ந்த மண் அறிவியல் பக்கமாக மாறியது. 

சூழலியல் மண் வேதியியல்[தொகு]

சூழலியல் மண் வேதியியலின் அறிவானது, மண்ணை மாசுபடுத்தும் மாசுபடுத்திகளின் விளைவுகள் மற்றும் மண்ணில் அவை முதன்முதலாக கலப்பதற்கானச் செயல்முறைகளைப் பற்றி அறிவதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு வேதிப்பொருளானது ஒருமுறை மண்ணியல் சூழலுக்குள் செலுத்தப்பட்டு விட்டால் எண்ணற்ற வேதி வினைகள் தொடர்ந்து நிகழ்ந்து மாசுப்பொருளின் நச்சுத்தன்மையைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்ய வாய்ப்புள்ளது.  இந்த வினைகள், உட்கிரகித்தல்/வெளிவிடுதல், வீழ்படிவாதல், பல்லுறுப்பாக்கல், கரைதல், அணைவுச் சோ்மங்களாதல் மற்றும் ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்  போன்ற வேதிவினைகளை உள்ளடக்கியவையாகும். இந்த வினைகளைச் சுற்றுச்சூழல் சீர்திருத்தத்தில் ஈடுபட்டுள்ள அறிவியலாளர்களும், பொறியாளர்களும் பெரும்பாலும் புறக்கணிக்கின்றனர்.  இந்தச் செயல்முறைகளைப் புரிந்து கொள்ளுதல் என்பது மண்ணில் கலந்து விடும் மாசுபடுத்திகளின் எதிர்கால நிலை, நச்சுத்தன்மை போன்றவற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கான அறிவையும், அவற்றை அறிவியல்பூர்வமான, சரியான, குறைவான செலவில் கையாளக்கூடிய சீர்திருத்த உத்திகளை வளர்க்கவும் உதவுகிறது.

கொள்கைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்_வேதியியல்&oldid=3269257" இலிருந்து மீள்விக்கப்பட்டது